மாஸ் காட்டும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்.. தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ட்ரெண்டிங்!
ஓடிடியில் வெளியான லக்கி பாஸ்கர் படம் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் உள்ளது. படம் 15 நாடுகளில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

மகாநதி திரைப்படத்தில், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார் நடிகர் துல்கர் சல்மான். அறிமுகமான திரைப்படமே அமோக வெற்றி பெற, இதற்கு அடுத்த படியாக அவர் கதாநாயகனாக நடித்து தெலுங்கில் உருவான சீதாராமம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி துல்கர் நடிப்பில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியானது. தீபாவளி ரேஸில் வெளியானாலும் சக படங்களோடு போட்டி போட்டு, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது
வழக்கமாக எந்தப் படம் வெளியானாலும் வெளியான 30 நாட்களுக்குள், ஓடிடியில் நுழைந்துவிடும். அதன்படி, லக்கி பாஸ்கர் திரைப்படமும் விரைவில் ஓடிடியில் வரும் என்று சினிமா ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
திரையரங்கை போலவே ஒடிடி-யிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்திற்காக துல்கர் சல்மான் வாங்கிய சம்பளம் ஃபிலிம் பீட் செய்தி தளம் வெளியிட்ட தகவலின் படி, பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறும் துல்கர் லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்காக 10 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறது.
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் உள்ள லக்கி பாஸ்கர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஓடிடியில் வெளியான லக்கி பாஸ்கர் படம் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் உள்ளது. படம் 15 நாடுகளில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷின் வாத்தி படத்திற்கு அடுத்தபடி அடுத்ததாக லக்கி பாஸ்கர் படம் வெளியான நிலையில், படம் இயக்குநருக்கும் நடிகருக்கும் மட்டுமில்லாமல் மீனாட்சி சவுத்ரிக்கும் மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
லக்கி பாஸ்கர் படத்தின் கதை என்ன?
படத்தின் நாயகன் பாஸ்கர் குமார் ஒரு சாதாரண வங்கி ஊழியர். குடும்பப் பிரச்னை காரணமாக கடன் வலையில் சிக்கிக் கொள்கிறார். அவர் பணத்திற்காக ஆண்டனி என்ற நபருடன் கைகோர்த்து சட்டவிரோத பரிவர்த்தனைகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதிக்கிறார். குறிப்பாக, வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பாஸ்கர் ஊழல்கள் அம்பலமாகுமா? பாஸ்கர் பணம் சம்பாதித்து குடும்பத்தை புறக்கணித்ததன் விளைவு என்ன? பாஸ்கர் எப்படி எல்லா பிரச்னைகளிலும் இருந்து மீண்டு வருகிறார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இப்படத்தில் இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்