Dulquer Salmaan: ‘பரிணாமம்.. சவால்.. அர்ப்பணிப்பு.. இது துல்கருக்கான படமா இருக்கும்’ -காந்தா டைரக்டர் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dulquer Salmaan: ‘பரிணாமம்.. சவால்.. அர்ப்பணிப்பு.. இது துல்கருக்கான படமா இருக்கும்’ -காந்தா டைரக்டர் பேட்டி!

Dulquer Salmaan: ‘பரிணாமம்.. சவால்.. அர்ப்பணிப்பு.. இது துல்கருக்கான படமா இருக்கும்’ -காந்தா டைரக்டர் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 04, 2025 05:28 PM IST

Dulquer Salmaan: துல்கர் சல்மானின் 13 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Dulquer Salmaan: ‘பரிணாமம்.. சவால்.. அர்ப்பணிப்பு.. இது துல்கருக்கான படமா இருக்கும்’ -காந்தா டைரக்டர் பேட்டி!
Dulquer Salmaan: ‘பரிணாமம்.. சவால்.. அர்ப்பணிப்பு.. இது துல்கருக்கான படமா இருக்கும்’ -காந்தா டைரக்டர் பேட்டி!

13 ஆண்டு கால உழைப்பு

அவரது கெரியரில் அவர் நடித்த 'பெங்களூர் டேய்ஸ்', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'ஓ காதல் கண்மணி', 'மகாநடி', 'குரூப்' மற்றும் சமீபத்திய வெற்றிப் படங்களான 'சீதா ராமம்', 'லக்கி பாஸ்கர்' என அவரது மாபெரும் வெற்றிகள் அனைத்தும் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவரின் 13 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் ‘காந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

'ஹண்ட் ஃபார் வீரப்பன்' என்ற நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தொடரை இயக்கிய செல்வமணி செல்வராஜ் 'காந்தா' படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, ‘நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் 'காந்தா' படத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

பல பரிணாமம் கொண்டது

இந்த திரைப்படம், துல்கரின் சினிமா வாழ்க்கையைப் போலவே பல பரிணாமம், சவால் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமையும். இது நிச்சயம் அவருக்கான படமாக இருக்கும்" என்றார்.

இந்த திரைப்படத்தில் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளது. நடிகர் ராணா டகுபதி, அவரது தாத்தா டி. ராமாநாயுடுவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனமும் நடிகர் துல்கர் தலைமையிலான வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது. பல திறமையாளர்களை இந்த நிறுவனங்கள் வருங்காலத்தில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். அதில் 'காந்தா' மறக்க முடியாத படமாக இருக்கும்.

விரைவில் விபரம்

'காந்தா' படத்தின் முதல் பார்வையைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக, மகாநதி திரைப்படத்தில், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார் நடிகர் துல்கர் சல்மான். அறிமுகமான திரைப்படமே அமோக வெற்றி பெற, இதற்கு அடுத்த படியாக அவர் கதாநாயகனாக நடித்து தெலுங்கில் உருவான சீதாராமம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி துல்கர் நடிப்பில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியானது. தீபாவளி ரேஸில் வெளியானாலும் சக படங்களோடு போட்டி போட்டு, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப்பட திரையரங்கை போலவே ஒடிடி-யிலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்திற்காக துல்கர் சல்மான் வாங்கிய சம்பளத்தை ஃபிலிம் பீட் செய்தி தளம் வெளியிட்டது. பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறும் துல்கர் லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்காக 10 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.