என்ன கொடுமை சார்! ரூ. 60 லட்சம் பரிசுக்கு ரூ. 15 லட்சம் வரி.. சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
ஒன்னரை ஆண்டுகள் ஆகியும் சூப்பர் சிங்கர் வென்ற பரிசுக்கு இன்னும் தனது கைக்கு கிடைக்காமல் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முதல் பெண் போட்டியாளரான அருணா.

சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் வென்று ஓராண்டுக்கு மேல் ஆகியும் தனக்கு பரிசாக அளிக்கப்பட்ட வீடு இன்னும் கிடைக்கவில்லை என்று பரிசு வென்ற அருணா ரவீந்திரன் கூறியுள்ளார். தமிழில் ஒளிபரப்பாகும் மியூசிக்கல் ரியாலட்டி ஷோக்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் இருந்து வருகிறது.
பரிசு கிடைக்கவில்லை
கடந்த 2022 நவம்பர் முதல் 2023 ஜூன் வரை சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக அருணா ரவீந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இவருக்கு பரிசுத்தொகையாக ரூ. 60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ரூ. 10 லட்சம் ரொக்க பணமும் அளிக்கப்பட்டது.
சூப்பர் சிங்கர் சீசன்களில் பட்டம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்ற அருணாவுக்கு, பரிசாக அளிக்கப்பட்ட வீடு இன்னும் வந்து சேரவில்லை. அதற்கு முக்கிய காரணமாக அந்த வீட்டை அவர் பெற வேண்டுமானாலும் செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கி இருப்பதே காரணம் என தெரியவந்துள்ளது.
