ரூ.20 இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன்.. அவர் ஜவுளிக்கடையில் இருந்தார், நான் நாடகத்துக்குப் போயிடுவேன்.. தாமரை பேட்டி
ரூ.20 இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன்.. அவர் ஜவுளிக்கடையில் இருந்தார், நான் நாடகத்துக்குப் போயிடுவேன் என்று பேசிய நாடக நடிகை தாமரையின் பேட்டியைக் காணலாம்.

பிக்பாஸ் புகழ் தாமரைச்செல்வி என்கிற தாமரைக்கு அடையாளம் தேவையில்லை. தற்போது சின்னமருமகள் என்னும் விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் கார் வாங்கியிருக்கும் அவரிடமும் அவரது கணவர் பார்த்தசாரதியிடமும் கலாட்டா சேனல் பேட்டிகண்டது.
இதுதொடர்பாக முதலில் பேசிய பார்த்தசாரதி, ’’முதல்முறை ஒரு திருவிழாவில் தான் தாமரையைப் பார்த்தேன். புடவை ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லிட்டு நடந்து போய்க்கிட்டு இருந்தேன்.
அவங்க பிரச்னையில் இருந்தாங்க. அப்போது அவங்களை மீட்டு அவங்க வீட்டில் விட்டாச்சு. அதன்பின் தான் தாமரைமேல் காதல் உருவானது. ஒரு வருஷம் வரை, அவங்க ஒத்துக்கல. முதலில் அவங்க கிட்ட நேரடியாக, அதைச் சொல்லல. யாராவது ஆதரவற்ற பெண்கள் இருக்காங்களான்னு பேசி, கொஞ்சம் கொஞ்சமாக அவங்க வீட்டில் குளோஸ் ஆகி அதன்பின் தான் திருமணம் செஞ்சுகிட்டோம்’’ எனச் சொல்லி முடித்தார், தாமரைச்செல்வியின் கணவர் பார்த்தசாரதி