Dragon: வெற்றிமாறன் சாரின் உற்சாக வார்த்தை.. கைதட்டல்.. டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dragon: வெற்றிமாறன் சாரின் உற்சாக வார்த்தை.. கைதட்டல்.. டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேட்டி

Dragon: வெற்றிமாறன் சாரின் உற்சாக வார்த்தை.. கைதட்டல்.. டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேட்டி

Marimuthu M HT Tamil Published Feb 16, 2025 03:23 PM IST
Marimuthu M HT Tamil
Published Feb 16, 2025 03:23 PM IST

Dragon: ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தன்னை ஊக்குவித்த வெற்றிமாறன் சாரின் வார்த்தை பற்றியும், ஆடிட்டோரியத்தில் கிடைத்த கைதட்டல் குறித்தும் நெகிழ்ச்சி பட பேட்டியளித்திருக்கிறார்.

Dragon: வெற்றிமாறன் சாரின் உற்சாக வார்த்தை.. கைதட்டல்.. டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேட்டி
Dragon: வெற்றிமாறன் சாரின் உற்சாக வார்த்தை.. கைதட்டல்.. டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேட்டி

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டிராகன் படம் குறித்து, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, கலாட்டா பிளஸ் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கநாதன் அவரிடம் நேர்காணல் செய்திருக்கிறார். அதன் தொகுப்பினைப் பார்க்கலாம். அவையாவன:

’திரைக்கதை கூட எழுதிடலாம். ஆனால், இயக்கம் என்பது பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைக்கும் பணி. அந்த நம்பிக்கை எங்கு இருந்து வந்தது?

அது என்னுடைய குறும்படம் எடுத்த நாட்களில் எனக்கு கிடைத்தது. நாளைய இயக்குநர் என்கிற ரியாலிட்டி ஷோ தந்தது. கார்த்திக் சுப்புராஜ் பங்கேற்ற சீசனுக்கு அடுத்த சீசன் நான் பங்கேற்றேன். மடோன் அஸ்வின், எட்டு தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ், நித்திலன் எல்லோருமே ஒரே சீசனில் குறும்படங்கள் எடுத்தோம். காலேஜ் படிச்சுமுடிச்சதும் அரியர் இருந்தது. 

அப்போது காலேஜ் படிக்கும்போதே சின்ன சின்ன குறும்படங்கள் எடுத்திருக்கேன். எனக்கு இங்கிலீஷ் சொல்லிக்கொடுத்த மேடமே இதுதான் உனக்கு நல்லா வருதே. அதையே செய்யவேண்டியது தானேன்னு சொன்னாங்க. அப்புறம் காலேஜ் ஆடிட்டோரியத்தில் கிடைச்ச கைதட்டல் இதெல்லாம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கு எடுக்க வைச்சது. அப்படியே ஒவ்வொரு ரவுண்ட் ஆக போகி, ஒரு கட்டத்தில் எலிமினேட்டும் ஆகிட்டேன். பிறகு, வைல்டு கார்டு ரவுண்டில் பைனல்ஸ் வந்தேன். அந்த நிகழ்ச்சியில் நான் அவார்டு வாங்கல. ஆனால், வெற்றிமாறன் சார் ஒரு அழகான வார்த்தை சொன்னார். என்னவென்றால், இந்த பையன் ஒழுங்காக வொர்க் பண்ணுனான் என்றால் நல்ல ரைட்டராக வருவான்.

21 ஒரு வயது இளைஞருக்கு நல்ல வார்த்தை சொல்லும்போது அதை எடுத்துக்கொண்டு நகரலாம்ன்னு தோணுச்சு. இடையில் அரியரையும் எழுதி கிளியர் பண்ணிட்டேன் சார். ஷார்ட்ஃபிலிம் செய்து செய்து கத்துக்கிட்டேன் சார். போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவோடு சேர்ந்து நிறைய விளம்பரங்கள் மற்றும் கார்ப்பரேட் வீடியோக்கள் எல்லாம் உருவாக்கினோம்.

பிரதீப் ரங்கநாதன் என் காலேஜ் ஜூனியர். அவன் படம் பண்ணுன உடனே தான், நாமளும் படம் பண்ணிரலாம்ன்னு நினைச்சு, அடுத்து ஓ மை கடவுளே படம் பண்ணினது.

நிறைய பேர் படம் பண்ணனும்னு வருகிறாங்க. சிலர் தான் ஜெயிக்கிறாங்க. அந்த எக்ஸ் காரணி என்ன?

இப்போது இருக்கிற இதில் படம் பண்ணலாம் என்பது ஒரு 5டி கேமரா இருந்தாலே சாத்தியம். ஆனால், ரசிகர்கள் என்ன விரும்புறாங்க. நாம் என்ன மாதிரி படம் பண்ணப்போறோம்ன்னு புரிஞ்சு பண்ணனும். இதுதான் இயக்குநராக நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது.

ஒரு இயக்குநர் என்பவர் தினம் தினம் கத்துக்கிற மனநிலையில் இருக்கணும். ஒரு இயக்குநர் என்பவர் எழுத்தாளரும் கூட இல்லையா. அதனால், எழுதணும். எழுதியது சரியானதுதானா என பகுப்பாய்வு செய்யணும். நல்ல படங்களை பார்க்கணும். இது ஒருநாளில் வராது. எவ்வளவு கத்துக்கிறோமோ, அவ்வளவு வரும்.

ஓ மை கடவுளே படம் பண்றதுக்கு நிறைய பிரச்னைகள் இருந்தது சார். 3 கோடி தான் பட்ஜெட். 35 நாட்களில் தான் முடிக்கணும் அப்படி நிபந்தனைகள் இருந்தது. நான் இந்த பட்ஜெட்டில் தான் பண்ணனும் அப்படின்னு நினைச்சிருந்தால், ஓ மை கடவுளே படத்தை எடுத்து இருக்கவே முடியாது.

அப்புறம் கிடைச்சதில் நாம் எவ்வளவு பெட்டராக பண்ணனும் அப்படிங்கிறதில் மட்டும் தான் என் கவனம் இருந்தது.

டிராகன் படத்தின் பட்ஜெட்:

ஓ மை கடவுளே ஒரு ஃபேண்டஸி படம் சார். 2019ல் காதல் படங்கள் என்றாலே அப்போது எல்லாம் பெரிசாக எடுபடல. ஆனால், அசோக் என்னை நம்பினார்.

அப்போது 3 கோடியில் படம் எடுத்தோம். இப்போது டிராகன் 35 கோடியில் படம் எடுத்திருக்கோம். ஆனால், படத்தை எடுக்கிறதுக்குண்டான தீவிரம் இரண்டிலும் ஒன்று தான். இந்தப் படத்துக்கு இது தேவைப்பட்டதில் இதில் பண்ணுனேன். ஓ மை கடவுளே தெலுங்கில் பண்ணும்போது ரூ.15 கோடியில் செய்தோம். படத்துக்கு கன்டென்ட் மிக முக்கியம் சார். அடுத்து நம்மை நம்புறதுக்கு ஒரு நான்கு பேர் இருக்கணும்’’ எனத் தெரிவித்தார், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

நன்றி: கலாட்டா பிளஸ், மூத்த பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கன்

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதுகலை கட்டுமானப்பொறியியல் துறையில் பட்டம்பெற்றவர். விகடனில் 2014-15க்கான தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றவர். 11ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு,காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் அனுபவம் கொண்டவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்துப் பிரதியில் ஆரம்பித்த இவரது ஊடகப்பயணம், தாலுகா நிருபர், விகடன், மின்னம்பலம், காவேரி நியூஸ் டிவி, நியூஸ் ஜெ டிவி, ஈடிவி பாரத் தமிழ்நாடு வரை பயணிக்கச் செய்து, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் இவரை சேர்த்துள்ளது. அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதக்கூடியவர். சினிமாவில் இயக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது, சிறுகதை எழுதுவது மிகப்பிடித்தமான பணிகள்!
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.