தமிழில் 50 கோடி..கேரளாவில் அதிகரிக்கும் திரையரங்குகள்.. தெலுங்கிலும் நல்ல வரவேற்பு! -டிராகன் பட பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழில் 50 கோடி..கேரளாவில் அதிகரிக்கும் திரையரங்குகள்.. தெலுங்கிலும் நல்ல வரவேற்பு! -டிராகன் பட பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

தமிழில் 50 கோடி..கேரளாவில் அதிகரிக்கும் திரையரங்குகள்.. தெலுங்கிலும் நல்ல வரவேற்பு! -டிராகன் பட பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 02, 2025 02:25 PM IST

டிராகன் படத்திற்கு போட்டியாக வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமானது ரசிகர்களிடம் பெரிதான வரவேற்பை பெறவில்லை. இதனால், டிராகன் படத்திற்கு தற்போது போட்டிப்படங்கள் என்று எதுவும் இல்லை. - டிராகன் பட பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

தமிழில் 50 கோடி..கேரளாவில் அதிகரிக்கும் திரையரங்குகள்.. தெலுங்கிலும் நல்ல வரவேற்பு! -டிராகன் பட பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!
தமிழில் 50 கோடி..கேரளாவில் அதிகரிக்கும் திரையரங்குகள்.. தெலுங்கிலும் நல்ல வரவேற்பு! -டிராகன் பட பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

பாக்ஸ் ஆபிஸில் வேட்டை

டிராகன் படத்திற்கு போட்டியாக வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமானது ரசிகர்களிடம் பெரிதான வரவேற்பை பெறவில்லை. இதனால், டிராகன் படத்திற்கு தற்போது போட்டிப்படங்கள் என்று எதுவும் இல்லை. இதன் காரணமாக பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை பெற்று வரும் டிராகன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் எவ்வளவு வசூல்?

தெலுங்கிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், உலகளவில் விரைவில் டிராகன் திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூல் செய்து விடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் டிராகன் திரைப்படம் 62.25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. 

முதல் வாரத்தில் 28 கோடி வசூல் செய்த இந்தத்திரைப்படம், அடுத்தடுத்த வார நாட்களில் பெரிதாக சோபிக்க வில்லை. படம் வெளியாகி 8 ஆவது நாளில் 4.7 கோடி வசூல் செய்த டிராகன் திரைப்படம் 9 ஆவது நாளான கடந்த சனிக்கிழமை  7. 25 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகவல்கள் அதுவும் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது ஆகும்.

டிராகன் கதை

ஓ மை கடவுளே எனும் வெற்றிப் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, கோமாளி, லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கிய படம் டிராகன், கல்லூரி காலத்தில் ஜாலியாக அரியர் வைத்து சுற்றித் திரியும் ஒருவன் வாழ்க்கையில் முன்னேறுவது பற்றி பேசும் கதை தான் டிராகன்.

இந்தப் படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் நடித்துள்ளனர். அவர்களுடன் விஜே சித்து, ஹர்ஷத் கான் போன்றோரும் நடித்துள்ளனர்.ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

ட்ராகன் படத்தில் பிரதீப்பின் மாற்றம் குறித்து படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஹிந்துஸ்தான் தமிழ் தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அந்த பேட்டி இங்கே

‘லவ் டு டே’ பிரதீப்ப மக்கள்ட்ட ரொம்ப அதிகமா கொண்டு சேர்த்த படம்.. அவர டிராகன்ல எப்படி வித்தியாசப்படுத்தப்போறீங்க?

நீங்க ட்ராகன் படம் பாருங்க.. லவ் டுடே படத்தோட சாயல் எங்கேயும் வராது. படத்தோட இரண்டாம் பாதியில மட்டும் லவ் டுடே படத்த நியாபகப்படுத்துற மாதிரி ஒரு விஷயம் வச்சிருக்கேன். அது லவ் டுடே ரசிகர்களுக்காக..

லவ் டுடே படத்துல அவனோட தோற்றத்த வச்சு நிறைய விமர்சனங்கள் வந்துச்சுல்ல; இந்தப்படத்துல அவன முழுக்க, முழுக்க ஒரு ஹீரோ மெட்டீரியலா ட்ரீட் பண்ணிருக்கேன். அவன் பேசுற விதமே வேறயா இருக்கும். அவனே இத நிறைய இடங்கள்ல ஃபீல் பண்ணி சொல்லிருக்கான்.

பிரதீப்ப இந்தப்படத்துல ஃபைட் பண்ண வச்சிருக்கேன்.. அவனோட மேனரிசம், பாடிலாங்குவேஜ்னு நிறைய மாத்திருக்கேன். ஆனால் அதே சமயம் படமா, ஓ மை கடவுளே படத்த பார்க்கும் போது உங்களுக்கு என்ன ஃபீல் கிடைச்சிதோ அந்த ஃபீல் இந்தப்படத்துலையும் கிடைக்கும்’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் பி இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்கும் இவர், மூன் டிவி, புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களை தொடர்ந்து கடந்த 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.