Don Director: வாவ் இப்படி ஒரு கதையா.. தெலுங்கு நடிகரை வளைத்துப்போட்ட டான் இயக்குநர்!
டான் படத்தை இயக்கிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, தெலுங்கின் முக்கிய நடிகர் ஒருவருக்கு தனது கதையினை சொல்லி ஓகே செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்து சூப்பர் ஹிட்டான படம், டான். இப்படத்தினை இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநர், சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். இப்படம் ரூ.100 கோடி வரை வசூலித்து சாதனைப் புரிந்தது. இதையடுத்து இப்படத்தினை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், சிபி சக்ரவர்த்தியை நடிகர் ரஜினியிடம் அடுத்த படத்திற்கான கதையினை சொல்ல அப்பாயின்மென்ட் பெற்றுத் தந்தது. ஆனால், சிபி சொன்ன கதை, நடிகர் ரஜினியை பெரிதளவில் ஈர்க்கவில்லை.
இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வாய்ப்பினை வழங்கக்கோரி, நடிகர் சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் அடைந்தார், சிபி சக்ரவர்த்தி. ஆனால் அவர் இன்னும் இரண்டு படங்களில் பிஸியாக இருப்பதாகப் பதில் வந்திருக்கிறது.
உடனே சுதாரித்த இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, தெலுங்கு நடிகர் நானியிடம் தனது கதையைச் சொல்லியிருக்கிறார். அக்கதை நானிக்குப் பிடித்துப்போய், வாய் இப்படி ஒரு கதையா எனக்கூறி, சிபி சக்ரவர்த்திக்கு தனது அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகும் வகையில் தயார் ஆகி வருவதாகவும், இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்