தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Do You Know Who Is Stunt Master In Bade Miyan Chote Miyan

Bade Miyan Chote Miyan: தாறுமாறு தான்.. ஆக்‌ஷன் பார்க்க தயாரா.. படே மியான் சோட் மியான் பட ஸ்டண்ட் இயக்குநர் இவரா?

Aarthi Balaji HT Tamil
Apr 03, 2024 12:20 PM IST

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குனரான கிரேக் மேக்ரேயின் படே மியான் சோட் மியான் படத்தின் ஆக்‌ஷன் இயக்குந.ராக இணைந்து உள்ளார்.

படே மியான் சோட் மியான்
படே மியான் சோட் மியான்

ட்ரெண்டிங் செய்திகள்

பூஜா எண்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான, 'படே மியான் சோட் மியான்,' அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து உள்ளது. 

இப்படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள் முதல் மற்றும் கடந்த வாரம் வெளியான டிரெய்லர் வரை இந்தத் திரைப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 'படே மியான் சோட் மியான்' திரைப்படம் இந்திய திரையுலகில் இதுவரை வெளிவராத ஒரு பிளாக் பஸ்டர் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.

ஷாருக்கானின் பிளாக் பஸ்டர் படங்களான பதான் மற்றும் ஜவான் ஆகியவற்றில் பரிபுரிந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குனரான கிரேக் மேக்ரேயின் இப்படத்தின் ஆக்‌ஷன் இயக்குனராக இணைந்து உள்ளார். 

கிரேக் மேக்ரே ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களான மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் ஆகியவற்றில் தனது அதிரடி காட்சிகளுக்காகவும் புகழ் பெற்றவர். விமானத்தில் பதபதைக்க வைக்கும் சண்டைக்காட்சிகள் முதல் சிக்கலான சண்டை காட்சிகள் வரை, பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தருவதில் வல்லவர்.

'படே மியான் சோட்டே மியான்' படத்தின் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானி இந்த செய்தியை உற்சாகமாக பகிர்ந்து கொண்டார். "எங்கள் படத்தில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு வாழ்நாளில் சிறப்பான சினிமா அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இயக்குனர் அலி அப்பாஸ் திரைக்கதை உங்களை நிச்சயம் கவரும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். 

அந்த ஒத்துழைப்பின் விளைவு தான் இந்த திரைப்படம். படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ள நிலையில், 'படே மியான் சோட் மியான்' திரையரங்குகளில் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். ரசிகர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் அமர வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது என்பதற்கு உறுதியளிக்கிறேன்" என்று கூறி உள்ளார்.

வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை AAZ பிலிம்ஸ் உடன் இணைந்து வழங்குகிறார்கள். அலி அப்பாஸ் ஜாஃபர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 10 ஏப்ரல் 2024 அன்று வெளியாக உள்ளது. அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப், பிருத்விராஜ் சுகுமாரன், சோனாக்ஷி சின்ஹா, அலையா எஃப் மற்றும் மனுஷி சில்லார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்