உலகம் போற்றும் வில்லனுக்குள் இப்படி எல்லாம் ஆசையா? நம் கற்பனைக்கும் எட்டாத நம்பியார் ஆசைகள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உலகம் போற்றும் வில்லனுக்குள் இப்படி எல்லாம் ஆசையா? நம் கற்பனைக்கும் எட்டாத நம்பியார் ஆசைகள் என்னென்ன?

உலகம் போற்றும் வில்லனுக்குள் இப்படி எல்லாம் ஆசையா? நம் கற்பனைக்கும் எட்டாத நம்பியார் ஆசைகள் என்னென்ன?

Malavica Natarajan HT Tamil
Published Dec 16, 2024 11:22 AM IST

தமிழ் திரையுலகின் ஜாம்பவானாக விளங்கிய நம்பியார் தன் மனதில் உள்ள ஆசைகளை எல்லாம் சின்னக் குழந்தை போல் பட்டியலிட்டு நம்மை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

உலகம் போற்றும் வில்லனுக்குள் இப்படி எல்லாம் ஆசையா? நம் கற்பனைக்கும் எட்டாத நம்பியார் ஆசைகள் என்னென்ன?
உலகம் போற்றும் வில்லனுக்குள் இப்படி எல்லாம் ஆசையா? நம் கற்பனைக்கும் எட்டாத நம்பியார் ஆசைகள் என்னென்ன?

மக்கள் மனங்களை வென்றவரின் ஆசைகள்

பின்னர், வில்லத்தனத்துடன் நகைச்சுவை, குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் நடித்து மக்கல் மனதில் இடம்பிடித்தார். படத்தில் இவர் எந்த அளவிற்கு வில்லத்தனமானவரோ நிஜத்தில் அத்தனைக்கும் எதிரானவர் என அவருடன் நெருங்கி பழகியவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், நம்பியார் தன் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை எல்லாம் பட்டியல் போட்டு கூறியுள்ளார். இந்தப் பட்டியலைக் கேட்பதற்கே தலை சுற்றுகிறது. இவர் எவ்வளவு அறிவியல் விரும்பியாக இருந்திருந்தால் இந்த ஆசைகள் அனைத்தையும் தன்னுள் போட்டு வைத்திருப்பார் என்ற சந்தேகம் உங்களுக்கும் எழாமல் இருக்காது. இதோ இதுதான் நடிகர் நம்பியார் பட்டியலிட்ட ஆசைகள்.

பசுபிக் கடலை சுற்றும் மனது

பிலிப்பைன்ஸ் பக்கத்துல பசுபிக் கடல் சுமார் 40000 அடி ஆழம் இருக்கு. அந்க ஆழத்த பாக்கனும்ன்னு ஆசை இருக்கு. பேரிங் ஸ்ட்ரீட் இதுதான் அலாஸ்காவும் சைபீரியாவும் ஒன்னா சேரும் இடம் இருக்கு. அந்த வழியா தண்ணிக்கு அடியில ஆர்டிக் கடல் வழியா ஐஸ்லாந்துக்கு வரணும்ன்னு ஆசை இருக்கு.

தென் துருவத்துல நடந்து போகனும்னு ஆசை. சில கில்லாடிங்க நடந்து போயிட்டாங்க. ஆண்டஸ் மலை இருக்கு தென் அமெரிக்காவுல. இதுதான் உலகத்திலேயே பெரிய மலை. இது 4000 மைல் நீளம் கொண்டது. அதுமேல நடந்து போகனும் இல்ல விமானத்துலயாவது போகனும்ன்னு ஆசை.

தென் துருவத்தில் நடக்கனும்

சமீபத்தில் வந்த ஆசை இது டோக்கியோவில் இருந்து கோபன்ஹேகனுக்கு போகனும்ன்னு ஆசை. டோக்கியோவிலிருந்து அலாஸ்கா போய் அங்க இருந்து தென் துருவம் வழியா கோபழ்ஹேகனுக்கு போகனும். அதுக்கு ஒரு பிளைட் இருக்கு. அந்த பிளைட்ல போனா சூரிய உதையத்தையும் அஸ்தமனத்தையும் ரெண்டு மூனு முறை பார்க்கலாம்.

அமேசன் ஆறுல பெரு நகரத்துக்கு போகனும்னு ஆசை. அமேசான்ல போகுற தண்ணி அதுக்கு பிறகு பிறந்த 14 ஆறுகளை கணக்கு வைத்தால் எப்படி இருக்குமோ அந்த அளவு இருக்கும்.

எனக்கு வாழ்க்கையில வேற எந்த ஆசையும் இல்ல. இதெல்லாம் நடக்கணும்னு நான் ஆசைப்படுறேன்.

மனுஷனா இருக்கணும்

இது இல்லாம நான் நினைக்குறது நல்லவனா வாழனும், மனுஷனா நடக்கனும்ன்னு தான். எனக்கு வாழ்க்கையில வேற எந்த சின்ன சின்ன ஆசைகளும் இல்ல என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இவருடைய இந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறியதா இல்லையா என்பது குறித்த தகவல் இப்போதுவரை இல்லை. ஒருவேளை ஒன்று இரண்டு ஆசைகள் நிறைவேறி இருந்தாலும் அவர் நிச்சயம் உலகின் மகிழ்ச்சியான மனிதனாக இருந்திருப்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.