Good Bad Ugly: சோசியல் மீடியாவில் வெடியாய் வெடித்த குட் பேட் அக்லி.. ஃபர்ஸ்ட் லுக்கை எத்தனைபேர் பார்த்துள்ளனர் தெரியுமா?
Good Bad Ugly First Look: ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ’’குட் பேட் அக்லி’’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

Good Bad Ugly First Look: ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ’’குட் பேட் அக்லி’’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அதனை மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் தமிழில் பார்த்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளதாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில் படக்குழுவினர் சார்பில், குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 19ல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அஜித்தின் வெவ்வேறு பாணியிலான மூன்று படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நடிகர் அஜித் குமார் கலர் ஃபுல்லான சட்டை அணிந்து, ஸ்டைலான கூலர் போட்டு, கையில் டாட்டூக்களுடன் மாஸாக உள்ளார்.
இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சோசியல் மீடியாவில் அதிமான நபரால் பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆத்விக் ரவிச்சந்திரன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோரின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் கணக்கில் மட்டும் இதுவரை, 41 மில்லியன் பார்வையாளர்கள், குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரினை பார்த்து ரசித்துள்ளனர். இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில், 41 மில்லியன் பார்வையாளர்களைத் தொட்டதற்கு, நடிகர் அஜித்துக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர்களுக்கும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் செய்த, அம்பானி என்.எஸ்.கேவிற்கும் நன்றி கூறியுள்ளார்.
குட் பேட் அக்லி படம் தொடர்பாக படக்குழுவினரின் பேட்டி:
குட் பேட் அக்லி படம் தொடர்பாக, மைத்ரி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி ஒரு பேட்டியில் கூறியதாவது, "புகழ்பெற்ற நடிகர் அஜித் குமார் சாருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு மரியாதை நிமித்தமான பணி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் திரைக்கதையும், கதை சொல்லும் விதமும் ரசிக்க வைத்தது. ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
இதுதொடர்பாக தயாரிப்பாளர் ஒய்.ரவிசங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "அஜித் குமார் சாருடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆதிக்கின் இயக்கம் அவரது முந்தைய படங்களில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. மேலும் இது அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்’’என்றார்.
குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் தொடர்பாக முன்பு கூறியது, "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் விலைமதிப்பற்ற தருணங்கள் உள்ளன. இது எனது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. அஜித் குமார் சாருடன் பணிபுரிவது எனக்கு ஒரு நீண்ட கனவாக இருந்தது. அவருடன் பணிபுரிவதில் நான் எமோஷனலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார் மற்றும் ரவிசங்கர் சார் ஆகியோருக்கு நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்த முக்கிய தொழில் நுட்பக் குழுவினர்:
இந்திய சினிமாவின் மிகப்பெரிய சினிமாக்களைத் தயாரித்த, இயக்கிய நிபுணத்துவம் கொண்ட, அனுபவமிக்க தொழில்நுட்பக் குழுவினரை இந்தப் படம் கொண்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான ஒளிப்பதிவாளராக அபிநந்தன் ராமானுஜம் இருக்கிறார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர், நடன அசைவுகளை கலோயன் வோடெனிசரோவ் அமைக்கிறார்.
'குட் பேட் அக்லி' படத்தின் மூலம் அஜித் குமாருடன் ஸ்ரீலீலா முதன்முறையாக ஜோடி போடுகிறார். இதன்மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று தகவல் பரவியுள்ளது. குட் பேட் அக்லி படத்தில் ஸ்ரீலீலாவுடன், மற்றொரு நட்சத்திர நாயகியும் நடிப்பார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
விடாமுயற்சி படத்தின் அப்டேட்:
முன்னதாக நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்தாண்டு,அக்டோபரில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, தற்போது வரை நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கான இசையினை அனிருத் செய்துவருகிறார். படம் இந்தாண்டுக்குள் வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்