Vidaamuyarchi Box Office: விடாமல் போராடும் விடாமுயற்சி பட வசூல்.. 10ஆம் நாளில் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi Box Office: விடாமல் போராடும் விடாமுயற்சி பட வசூல்.. 10ஆம் நாளில் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

Vidaamuyarchi Box Office: விடாமல் போராடும் விடாமுயற்சி பட வசூல்.. 10ஆம் நாளில் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

Marimuthu M HT Tamil Published Feb 16, 2025 10:12 AM IST
Marimuthu M HT Tamil
Published Feb 16, 2025 10:12 AM IST

Vidaamuyarchi Box Office: நடிகர் அஜித் நடித்து வெளியான திரைப்படம் விடாமுயற்சி. ஆரம்பத்தில் நல்ல ஓபனிங் கிடைத்தாலும் ஆவரேஜான கலெக்‌ஷனிலேயே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் பத்தாம் நாள் வசூல் குறித்து பார்ப்போம்.

Vidaamuyarchi Box Office: விடாமல் போராடும் விடாமுயற்சி பட வசூல்.. 10ஆம் நாளில் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?
Vidaamuyarchi Box Office: விடாமல் போராடும் விடாமுயற்சி பட வசூல்.. 10ஆம் நாளில் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

பிரபல அமெரிக்க திரைப்படமான ’பிரேக் டவுன்’ படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றதா இல்லையா என்பது குறித்து பார்ப்போம்.

விடாமுயற்சி 10ஆவது பாக்ஸ் ஆபிஸ்:

விடாமுயற்சி படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், 10ஆம் நாள் வசூல் நிலவரங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். இது குறித்து பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் இணையதளமான Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின்படி பார்க்கும் போது, விடாமுயற்சி திரைப்படம் வெளியான 10ஆவது நாளில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 1.60 கோடி வசூலித்துள்ளது என்று சொல்கிறது.

இந்திய அளவில் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸான 10 நாட்களில் மொத்தமாக ரூ.75.50 கோடி வசூலித்திருப்பதும், உலகம் முழுவதும் ரூ. 126.50 கோடி வசூலித்திருப்பதும் தெரிய வருகிறது. இந்நிலையில் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.350 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்படம் இதனை எட்டுமா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரியும் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு பெரிய அளவில் ஓபனிங் இருந்து வரும் சூழலில், விடாமுயற்சி படம் முதல் நாளைத் தவிர, அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்து கொண்டே செல்கிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினத்திலும் படம் பார்க்க வருவோரின் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

முதல் நாள் வசூல் எவ்வளவு?

விடாமுயற்சி திரைப்படம், வெளியான முதல் நாளில் 26 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்ட அந்த தளம், அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அதன் வசூலில் 60.58 சதவீதம் குறைந்து, 10.25 கோடி ரூபாய் வசூல் மட்டுமே செய்திருந்ததாக குறிப்பிட்டு இருந்தது.

விடாமுயற்சி படத்தின் கதை என்ன?

துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் திரைப்படம், விடாமுயற்சி. திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

அர்ஜுன் ( அஜித்) பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் கயலுக்கும் ( த்ரிஷா) இடையே நடந்த சந்திப்பு இருவரையும் காதல் கொள்ள வைக்க, ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் கயலுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட, அவள் விவாகரத்து முடிவை எடுக்கிறாள்.

அர்ஜுன் எவ்வளவோ முயற்சித்தும், தன்னுடைய முடிவில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் கயல். இந்த நிலையில் இருவரும் கடைசியாக ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த பயணத்தில் த்ரிஷா மிஸ் ஆகிறார். மிஸ் ஆன த்ரிஷாவை அஜித் எப்படி கண்டு பிடித்தார்? அதன் பின்னணியில் நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கதை.

பொறுப்புத்துறப்பு: இந்த பாக்ஸ் ஆபிஸ் செய்தியில் வரும் தகவல்கள் பல்வேறு இணையதளங்களில் பகிரப்படும் மற்றும் பி.ஆர்.ஓக்கள் மூலம் சொல்லப்படும் தகவல்களின் அடிப்படையிலானது. இது அந்த தயாரிப்பு நிறுவனம் தந்த தகவல் அல்ல.

 

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதுகலை கட்டுமானப்பொறியியல் துறையில் பட்டம்பெற்றவர். விகடனில் 2014-15க்கான தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றவர். 11ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு,காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் அனுபவம் கொண்டவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்துப் பிரதியில் ஆரம்பித்த இவரது ஊடகப்பயணம், தாலுகா நிருபர், விகடன், மின்னம்பலம், காவேரி நியூஸ் டிவி, நியூஸ் ஜெ டிவி, ஈடிவி பாரத் தமிழ்நாடு வரை பயணிக்கச் செய்து, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் இவரை சேர்த்துள்ளது. அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதக்கூடியவர். சினிமாவில் இயக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது, சிறுகதை எழுதுவது மிகப்பிடித்தமான பணிகள்!
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.