தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Do You Know How Much The Movie Salaar Collected In 17 Days After Its Release

Salaar: சக்சஸ் மீட் கொண்டாடிய சலார் படக்குழு: 17 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா?

Marimuthu M HT Tamil
Jan 08, 2024 04:35 PM IST

சலார் படக்குழு, சக்சஸ் மீட் கொண்டாடிய செய்தி வைரல் ஆகி வருகிறது.

சக்சஸ் மீட் கொண்டாடிய சலார் படக்குழு
சக்சஸ் மீட் கொண்டாடிய சலார் படக்குழு

ட்ரெண்டிங் செய்திகள்

வசூல் ரீதியாக பல சாதனைகளை முறியடித்துள்ளது சலார். சமீபத்தில் மற்றொரு புதிய சாதனையை இந்த படம் படைத்து உள்ளது. சலார் படம் தெலங்கானா ஏரியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. 12 நாட்களில் 100 கோடி ரூபாய் கிராஸ் மற்றும் 70 கோடி ரூபாய் ஷேர் வசூல் செய்து உள்ளது. பாகுபலி 2 படத்திற்கு பிறகு, தெலங்கானா ஏரியாவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த பிரபாஸ் படம் என்ற வரலாறு படைத்தது சலார்.

இந்நிலையில் சலார் முதல் நாளில் 176.52 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 101.39 கோடி ரூபாயும், மூன்றாம் நாளில் 95.24 கோடி ரூபாயும், நான்காம் நாளில் 76.91 கோடி ரூபாயும், ஐந்தாம் நாளில் 40.17 கோடி ரூபாயும் ஆறாம் நாளில் 31.62 கோடி ரூபாயும், ஏழாம் நாளில் 20.78 கோடி ரூபாயும் வசூலித்தது. மேலும், சலார் 8ஆம் நாளில் 14.21 கோடி ரூபாயும், ஒன்பதாம் நாளில் ரூ.21.45 கோடியும், பத்தாம் நாளில் ரூ.23.09 கோடியும், பதினொன்றாம் நாளில் ரூ.25.81 கோடியும், பன்னிரெண்டாம் நாளில் ரூ.12.15 கோடி ரூபாயும், பதின்மூன்றாம் நாளில் ரூ.11.07 கோடி ரூபாயும், பதினான்காம் நாளில் 9.28 கோடி ரூபாயும், 15ஆம் நாளில் 7.90 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. மேலும், 16ஆம் நாளில் 9.78 கோடி ரூபாயும், 17ஆம் நாளில் 10.14 கோடி ரூபாயும் என மொத்தமாக சலார் ரூ. 687.51 கோடி வசூலித்துள்ளது.

2023ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று. சலார் படம் முழு ஓட்டத்தில் 800 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சலார் படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். கான்சார் என்ற குற்ற நகரத்தின் பின்னணியில் இரண்டு நண்பர்களின் கதையுடன் படம் தொடங்குகிறது.

பிரபாஸின் எலிவேஷன்ஸ், ஆக்‌ஷன் கலந்த கதையில் புதியதாக எதுவும் இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. சலார் படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் இரண்டாம் பாகம் தொடர்பான கதை தயாராகிவிட்டதாக சமீபத்தில் பிரபாஸ் தெரிவித்துள்ளார். கேஜிஎஃப் படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கிய படம் இது என்ற எதிர்பார்ப்பும் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. பிரபாஸ் தற்போது சலார் 2 மற்றும் கல்கி 2989 கி.பி ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.