Vidaamuyarchi Box Office Day 2: இரண்டாம் நாளில் சரிவை சந்தித்த விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi Box Office Day 2: இரண்டாம் நாளில் சரிவை சந்தித்த விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Vidaamuyarchi Box Office Day 2: இரண்டாம் நாளில் சரிவை சந்தித்த விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Marimuthu M HT Tamil Published Feb 08, 2025 08:33 AM IST
Marimuthu M HT Tamil
Published Feb 08, 2025 08:33 AM IST

விடமுயார்ச்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2: மகிழ் திருமேனி இயக்கிய தமிழ்த் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க திரைப்படமான பிரேக்டவுனின் தழுவல் ஆகும்.

Vidaamuyarchi Box Office Day 2: இரண்டாம் நாளில் சரிவை சந்தித்த விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
Vidaamuyarchi Box Office Day 2: இரண்டாம் நாளில் சரிவை சந்தித்த விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

இந்தப் படம் அதன் தொடக்க நாளில் நன்றாக ஓடியது. Sacnilk இணையதளத்தின் கூற்றுப்படி, படம் அதன் இரண்டாவது நாளில் இந்தியாவில் சுமார் 8.75 கோடி ரூபாய் நிகர வசூலித்தது.

இது முதல் நாளை ஒப்பிடும்போது வசூலில் பெரும் சரிவு ஆகும்.

விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல்:

விடாமுயற்சி படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.26 கோடி வசூல் செய்ததாகவும், குறிப்பாக, தமிழில் ரூ.25.5 கோடியும், தெலுங்கில் ரூ.0.5 கோடியும் வசூலித்ததாக Sacnilk இணையதளம் தெரிவிக்கிறது. இரண்டாவது நாளில் விடாமுயற்சி இந்தியாவில் 8.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 8.4 கோடி வசூலித்து இருக்கிறது. 

அஜித்தின் முந்தைய படமான துணிவு திரைப்படம்(2023), அதன் தொடக்க நாளில் இந்தியாவில் ரூ.24.4 கோடி நிகரமாய் வசூலித்தது. இருப்பினும், துணிவு படம் 2ஆவது நாளில் வசூலில் பெரிய சரிவைக் கண்டது. குறிப்பாக, இந்தியாவில் சுமார் ரூ.6.12 கோடி மட்டுமே வசூலைக் கொண்டுவந்தது. இதன்மூலம் முதல் இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.32.12 கோடி மட்டுமே வசூலித்தது.

காலை காட்சிகளில் 21.48 சதவீதமும், மதியம் 31.44 சதவீதமும், மாலையில் 37.25 சதவீதமும் பார்வையாளர்கள் துணிவு படத்துக்கு வந்திருந்தனர்.

விக்னேஷ் சிவனின் பாராட்டு:

விடாமுயற்சி படத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில் வெகுவாகப் பாராட்டினார் இயக்குநர் விக்னேஷ் சிவன். குறிப்பாக அஜித்தின் நடிப்பைப் பற்றி குறிப்பிட்டு, ’’விடாமுயற்சி ஒரு தீவிரமான த்ரில்லர்! ஒரு புதிரை விடுவிப்பது முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரை கவர்ந்து இழுக்கிறது. அஜித் குமார் சாரின் ஸ்க்ரீன் பிரசன்ஸ், அவரது மென்மையான நடிப்பு என மொத்த படத்தையும் தோளில் சுமக்கிறார்.

யதார்த்தமான ரிஸ்க் ஆக்ஷன் முதல் கடைசி சீன் எமோஷன் வரை அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு நேர்மையாக செய்திருக்கிறார். மிகவும் உண்மையாக இருக்கிறது. அனிருத் ஒவ்வொரு முறையும் சில அற்புதமான இசையுடன் வருகிறார். அதைப் பார்த்து விசில் அடிக்காமல் இருக்க முடியாது’’ என்றார்.

விடாமுயற்சி படத்தின் ஒன்லைன்:

1997ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான பிரேக்டவுனின் தழுவலான படமாக பார்க்கப்படுகிறது, விடாமுயற்சி திரைப்படம். குறிப்பாக, அஜர்பைஜானில் ஒரு மோசமான குழுவால் தனது மனைவி கடத்தப்பட்ட பின்னர் மீட்புப் பணிக்குப் புறப்படும் ஒரு மனிதனின் கதையைச் சொல்கிறது, விடாமுயற்சி.

விடாமுயற்சி கதை:

படத்தைப் பற்றிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் விமர்சனத்தில், "அர்ஜுன் ( அஜித்) பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் கயலுக்கும் ( த்ரிஷா) இடையே நடந்த சந்திப்பு இருவரையும் காதல் கொள்ள வைக்க, ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் கயலுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட, அவள் விவாகரத்து முடிவை எடுக்கிறாள்.

அர்ஜுன் எவ்வளவோ முயற்சித்தும், தன்னுடைய முடிவில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் கயல். இந்த நிலையில் இருவரும் கடைசியாக ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த பயணத்தில் திரிஷா மிஸ் ஆகிறார். மிஸ் ஆன த்ரிஷாவை அஜித் எப்படி கண்டுபிடித்தார்? அதன் பின்னணியில் நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கதை.

முதல் நாள் காட்சியை பார்த்த த்ரிஷா

விடாமுயற்சி படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்திருக்கும் திரிஷா, படத்தின் முதல் நாள் காட்சியை திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார். இதேபோல் படத்தில் நடித்திருக்கும் இன்னொரு நடிகையான ரெஜினாவும், திரிஷாவுடன் இணைந்து படத்தை பார்த்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கு மத்தியில் திரிஷா, ரெஜினா ஆகியோர் இருப்பது போல் வீடியோ காட்சிகள் உள்ளன.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.