இரட்டை வேடத்தில் ராம் சரண்.. கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கரின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?
ஷங்கரின் முதல் தெலுங்கு படமான கேம் சேஞ்சர், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரட்டை வேடத்தில் ராம் சரண்.. கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கரின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?
இரட்டை வேடத்தில் ராம் சரண்.. கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கரின் ஊதியம் எவ்வளவு தெரியுமா என்பது குறித்துப் பேசலாம்.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் முதல் தெலுங்கு படமான கேம் சேஞ்சர் திரைப்படம், வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி பொங்கலை ஒட்டி, திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு அரசியல் அதிரடி த்ரில்லர் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் ராம் சரண் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் ஜனவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இது படத்தின் கதையைப் பற்றிய நுண்ணறிவை அளிக்கிறது.
இப்படத்தில் ராம் சரண், அப்பண்ணா என்ற அரசியல் தலைவராகவும், ராம் நந்தன் என்ற ஐஏஎஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார். அஞ்சலி அப்பண்ணா கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்திருக்கிறார். கியாரா அத்வானி, ராம் நந்தன் கதாபாத்திரத்தின் காதலியாக நடித்திருக்கிறார்.
தந்தையின் கனவை நிறைவேற்றத்துடிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி:
அப்பண்ணாவுக்கு துயரம் நிகழும்போது, ஊழல் இல்லாத நாடு என்ற தனது தந்தையின் கனவை நனவாக்க விரும்பி ராம் வளர்கிறார் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், ஊழல் முதலமைச்சர் பொப்பிலி மொபிதேவி என்கிற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா அவருக்கு குறுக்கே நிற்கிறார்.
தவிர, வெண்ணிலா கிஷோர், நவீன் சந்திரா, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், சுனில், ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) ஜனவரி 2அன்று ’கேம் சேஞ்சர்’ திரைப்படத்துக்கு, யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் ஜனவரி 10ஆம் தேதி தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. மேலும், ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம், சாதாரண திரைவடிவம், ஐமேக்ஸ், 4 டிஎக்ஸ், டால்பி சினிமா மற்றும் எபிக் வடிவங்களில் வெளியிடப்படுகிறது.
கேம் சேஞ்சர் படக்குழு விவரங்கள்:
ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின்கீழ் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து, ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தைத் தயாரித்தனர். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத, சாய் மாதவ் புர்ரா தெலுங்கில் வசனம் எழுத, தமன் எஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் 2021ஆம் ஆண்டில் முதல்முறையாக சூட்டிங் தொடங்கப்பட்டது மற்றும் குறிப்பிடத்தக்க தாமதங்களுக்குப் பிறகு, 2024ஆம் ஆண்டில் படப்பிடிப்பு முடிந்தது.
பட்ஜெட் விவரம்:
கால தாமதம் ஆக ஆக, இப்படத்தின் பட்ஜெட் எகிறியது. இதனால், ராம் சரண் லாபத்தில் பங்கு என்பதற்குப் பதிலாக, எவ்வளவு லாபம் கிடைத்தாலும் ரூ.90 கோடி எடுத்துக்கொள்ள சம்மதித்தார். இதுதவிர, ’கேம் சேஞ்சர்’ படத்தின் டப்பிங் முடிந்ததும் ரூ. 65 கோடியை ராம் சரண் பெற்றுள்ளார். மேலும், இப்படத்துக்காக ஷங்கர் ரூ.35 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார். முன்னதாக, டெக்கான் கிரானிக்கல் ஊடகமும், படத்தின் தயாரிப்புக்கு பங்கம் விளைவிக்காத வகையில், ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.