Jhanvi Kapoor : முதல் படத்திலேயே இவ்வளவா? தேவரா படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jhanvi Kapoor : முதல் படத்திலேயே இவ்வளவா? தேவரா படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Jhanvi Kapoor : முதல் படத்திலேயே இவ்வளவா? தேவரா படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Divya Sekar HT Tamil
Updated Sep 27, 2024 08:08 AM IST

Jhanvi Kapoor : தனது முதல் தென்னிந்திய படமான தேவரா நடிக்க நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Jhanvi Kapoor : முதல் படத்திலேயே இவ்வளவா? தேவரா படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Jhanvi Kapoor : முதல் படத்திலேயே இவ்வளவா? தேவரா படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜுனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா என்ற படத்தில் நடித்தார்  ஜான்வி கபூர், இந்த படத்தை தொடர்ந்து ராம்சரண் தேஜா ஜோடியாக புதிய படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார். தமிழிலும் சூர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்தில் ஜான்வி கபூரை நடிக்க வைக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

ஜான்வி கபூரின் நடனம்

சில நாட்களுக்கு முன் அனிருத் இசையில் வெளியான இரண்டு பாடல்களுமே ஹிட் அடித்தது. பாடலில் ஜான்வி கபூரின் நடனம் ரசிகர்களை ஈர்த்தது.

தடக், குஞ்சன் செக்சேனா, பாம்பே கேர்ள், குட் லக் ஜெர்ரி போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான்வி பிரபல நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து ஜான்விக்கு வாய்ப்புகள் கிடைக்க கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் வளர ஆரம்பித்தார். இப்போது அவர் பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் இப்போது தேவாரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமாகியிருக்கிறார். ஜான்வியின் முதல் தென்னிந்திய படம் என்பதால் இந்தப் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. 

நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம்

இன்று உலகெங்கிலும் தேவரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், தனது முதல் தென்னிந்திய படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின்படி, ஜுனியர் என்டிஆர் உடன் தேவரா படத்தில் நடிக்க நடிகை ஜான்வி கபூர் ரூ. 5 கோடி சம்பளம் வங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் தேவரா

பார்ட் 1 கடற்கரை அருகே அமைந்திருக்கும் நகரத்தை தீய சக்தி, வில்லன்களிடமிருந்து ஹீரோ காப்பாற்றும் கதையம்சத்தை கொண்டதாக உள்ளது. படத்தில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வில்லனாக நடித்துள்ளார். ஜான்வி கபூர் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் ட்ரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததுடன், தேவரா ரிலீஸ் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் பேசிய ஜான்வி கபூர்

கடந்த வாரம் தேவரா படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழில் பேசிய ஜான்வி கபூர் அனைவரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கினார்.

அந்த நிகழ்ச்சியில், "சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்கு என் அம்மாவிடம் இருக்கும் சிறந்த நினைவலைகள் இங்குதான் உள்ளது. நீங்கள் அவர் மீது காட்டிய அன்புதான் நானும் என் குடும்பமும் இந்த நிலையில் இருக்க காரணம். அதற்கு நான் எப்போதும் கடமைபட்டிருக்கிறேன். தாயாருக்கு கொடுத்த அதே அன்பை எனக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்" என்றார். தாயார் ஸ்ரீதேவி பற்றி நினைவலைகளை பேசும் போது ஜான்வியின் தமிழ் பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.