DNA Tamil Review: ‘அதர்வாவுக்கு திருப்புமுனை.. அசத்திய நிமிஷா..’ குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்டில் டிஎன்ஏ திரைப்படம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dna Tamil Review: ‘அதர்வாவுக்கு திருப்புமுனை.. அசத்திய நிமிஷா..’ குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்டில் டிஎன்ஏ திரைப்படம்!

DNA Tamil Review: ‘அதர்வாவுக்கு திருப்புமுனை.. அசத்திய நிமிஷா..’ குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்டில் டிஎன்ஏ திரைப்படம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Jun 19, 2025 12:34 AM IST

இதுவரை இப்படி ஒரு அதர்வாவை பார்த்திருக்க மாட்டோம். உண்மையில் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனை. நிமிஷா சொல்லவே வேண்டாம், நடிப்பின் அரக்கியாக அசத்தியிருக்கிறார். இருந்த இருவரும் தான், டிஎன்ஏ.,வின் உயிர் நாடி.

DNA Tamil Review: ‘அதர்வாவுக்கு திருப்புமுனை.. அசத்திய நிமிஷா..’ குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்டில் டிஎன்ஏ திரைப்படம்!
DNA Tamil Review: ‘அதர்வாவுக்கு திருப்புமுனை.. அசத்திய நிமிஷா..’ குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்டில் டிஎன்ஏ திரைப்படம்!

படம் தொடங்கிய நாளில் இருந்தே, எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைப்படங்களில் இத்திரைப்படமும் இருந்தது. ஜூன் 20 ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படம், ஜூன் 18 ம் தேதி, பிரிமியர் காட்சியாக சென்னையில் டிஎன்ஏ திரைப்படம் சற்று முன் திரையிடப்பட்டது. படம் முடிந்த கையோடு, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வாசகர்களுக்காக சுடச்சுட திரைவிமர்சனம் இதோ.

காக்டெய்ல் கலக்கியிருக்கும் இயக்குனர்

புறக்கணிக்கப்படும் ஆனந்த், திவ்யா இருவரும் சூழலால் தம்பதியாகின்றனர். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் தான், டிஎன்ஏ திரைப்படத்தின் அசத்தல கதைக் களம். ஆனந்தாக அதர்வா, திவ்யாவாக நிமிஷா. படம் தொடங்கியது முதல், முடியும் வரை, அந்த கதாபாத்திரங்களாகவே கண்ணில் நிறைந்து நிற்கிறார்கள்.

சேத்தன், விஜி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் என, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தேர்வும் அருமை. புயலாக பாயும் திரைக்கதையில், கதாபாத்திரங்கள் புல்லட்டாக பறக்கின்றன. காதல், குடும்பம், பாசம், க்ரைம், தேடல், சுபம் என எல்லாம் கலந்த காக்டெய்லாக கலக்கியிருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தோடு எந்த தயக்கமும் இல்லாமல் அமர்ந்து பார்க்கும் ஒரு படத்தை தந்தற்காக, இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியாது.

தியேட்டரில் கேட்கும் அப்ளாஸ்

அதர்வா.. இதுவரை இப்படி ஒரு அதர்வாவை பார்த்திருக்க மாட்டோம். உண்மையில் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனை. நிமிஷா சொல்லவே வேண்டாம், நடிப்பின் அரக்கியாக அசத்தியிருக்கிறார். இருந்த இருவரும் தான், டிஎன்ஏ.,வின் உயிர் நாடி. முதல்பாதியில் கடைசி 20 நிமிடத்தில் தொடங்கும் பரபரப்பு, எண்ட் கார்டு போடும் வரை தொடர்கிறது. ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படமாக, இருக்கையில் அனைவரையும் கட்டிப் போடுகிறது டிஎன்ஏ. குறிப்பாக குழந்தைகள், குடும்பத்தினரின் ரெஸ்பான்ஸ், இருக்கைக்கு இருக்கை அப்ளாஸ் கேட்கிறது.

5 இசையமைப்பாளர்களின் பாடல்களும், ரசிக்க வைக்கிறது. ஜிப்ரானின் பின்னணியும், பார்த்திபனின் கேமராவும் போட்டி போடு ஓடுகின்றன. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு, பல இடங்களில் காட்சியின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. திறந்த நீர் ஓடை போன்ற திரைக்கதையும், அதற்கு கதாபாத்திரங்கள் செய்த நியாயமான பங்களிப்பும் டிஎன்ஏ படத்தை, தியேட்டர் விருந்தாக மாற்றியுள்ளது.

குடும்பங்கள் கொண்டாடும் படமாக..

உறவின் உன்னதமும், தாயின் புரிதலும், தந்தையின் தவிப்பும், எவ்வளவு கல் நெஞ்சக்காரரையும் க்ளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் வரவழைக்க வைக்கிறது. எங்கு தொடங்கி, எப்படி முடிய வேண்டும் என்று சரியான திட்டமிடலில் படத்தை முடித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் கூட சலிப்போ, தேவையற்ற காட்சிகளோ இல்லாமல், கதையை நகர்த்திய விதத்தில் நெல்சன் வெங்கடேசன் ஜெயித்துவிட்டார்.

தியேட்டருக்கு குடும்பங்களை கொண்டு வரும் இன்னொரு திரைப்படம் வருகிறது.. கட்டாயம் டிஎன்ஏ கொண்டாடப்படும். அதற்கான அத்தனை அம்சங்களும், திரை முழுதும் நிரம்பியிருக்கின்றன. அடுத்த சில வாரங்களுக்கு பேசப்படும் படமாக, டிஎன்ஏ இருக்கும். குறைகளை விட நிறைகள் நிறைந்திருப்பதால், பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை டிஎன்ஏ ஏற்படுத்தும்.