ஆபாச காட்சி சர்ச்சை - 10 சதவீதம் பேர்தான்..ஆண்கள் விமர்சிப்பது மகிழ்ச்சி! திவ்ய பிரபா பதிலடி
ஆல் வி இமேஜின் அஸ் லைட் படத்தில் இருந்து லீக்கான ஆபாச காட்சி சர்ச்சையில் திவ்ய பிரபா பதிலடி தந்துள்ளார். மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் தான் இதுபோல் செய்கிறார்கள். இந்த காட்சியில் நடித்ததற்காக ஆண்கள் விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் மலையாளத்தில் வெளியாக இணையவாசிகளிடம் பரபரப்பை ஏற்படுத்திய படம் ஆல் வி இமேஜின் அஸ் லைட். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மலையாள நடிகை திவ்ய பிரபாவின் ஆபாச காட்சிகள் தான். படத்தில் மேலாடையின்றி அவர் அரைநிர்வாணமாக தோன்றும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான விடியோக்களும் ட்ரெண்டாகின
இதையடுத்து இந்த காட்சியில் நடித்திருந்து நடிகை திவ்ய பிரபா மீது எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. அத்துடன் புகழை பெறுவதற்காக இதுபோன்ற காட்சிகளில் அவர் நடித்துள்ளதாகவும் கருத்துகள் பகிரப்பட்டன.
இதுகுறித்து நடிகை திவ்ய பிரபா பிரபல மலையாள ஊடகமான மனோராமாவுக்கு அளித்த பேட்டியில் "இது பரிதாபத்திற்குரியது. இருப்பினும், நான் இந்த கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது, இதுபோன்ற கருத்துகளை எதிர்பார்த்தேன்.
ஆண்கள் விமர்சிப்பது மகிழ்ச்சியளிக்கிறது
யோர்கோஸ் லாந்திமோஸ் போன்ற திரைப்பட தயாரிப்பாளர்களையும், படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருது பெற்ற நடிகையையும் கூட கொண்டாடும் சமூகம் நாங்கள்.
ஆனால் மலையாளி பெண்கள் இது போன்ற வேடங்களில் நடிப்பதை நாங்கள் சகித்து கொள்வதில்லை. இந்தச் செயலை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்களில் குறிப்பாக ஆண்கள் அதிகமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இன்றைய தலைமுறையினரின் நம்பிக்கையை காட்டுகிறது
புகழுக்காக ஆபாசமாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை
ஆபாச விடியோவை கசியவிட்டவர்களின் மனநிலை பற்றி எனக்கு புரியவில்லை. மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் தான் அப்படி செய்கிறார்கள்.
எங்களுக்கு சென்சார் அனுமதி வழங்கிய மத்திய வாரியத்தில் மலையாளிகளும் இருந்தனர். ஒரு நடிகராக, நாம் நம்பும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறோம். மேலும் ஆல் வி இமேஜின் அஸ் லைட் படத்தில் எனது கதாபாத்திரத்தை உறுதியாக நம்புகிறேன்.
புகழுக்காக நான் நிர்வாண காட்சியை செய்தேன் என்று சிலர் என்னை விமர்சித்தனர். நான் பல விருதுகளை வென்றுள்ளேன் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளேன். எனவே புகழை பெற வேண்டுமானால் நான் நிர்வாணமாகத்தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்றார்
கேனஸ் திரைப்பட விழாவில் விருது
30 ஆண்டுகளுக்கு பின் கேனஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு, கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற படமாக ஆல் வி இமேஜின் அஸ் லைட் உள்ளது. இந்த படத்தில் மலையாள சினிமா நடிகைகளான கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள், மலையாளம் தவிர இந்தி. மாரத்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விமானத்தில் பாலியல் தொல்லை
இதே திவ்ய பிரபாதான் கடந்த ஆண்டில் ஓடும் விமானத்தில் வைத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் பற்றி வெளிப்படுத்தியிருந்தார். அப்போது அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் அவரது இருக்கையில் உட்காராமல், என்னுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்தார். எந்த லாஜிக்கும் இல்லாமல் என்னுடன் இருகைக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார். உடனடியாக அங்கிருந்த விமான பணிப்பெண்களிடம் சொன்னேன்.
பின்னர் அவர்கள் என்னுடைய இருக்கையை மட்டும் மாற்றிவிட்டார்கள். அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொச்சியில் விமானம் வந்து சேர்ந்ததும் விமான அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகளிடமும் நடந்த சம்பவத்தைப் பற்றி கூறினேன். ஆன்லைன் மூலமாக போலீசில் புகார் அளித்தேன். பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது ஆபாச காட்சியில் நடித்ததற்காக விமர்சிக்கபட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் நாயகியாகவும் உலா வந்தார்.