DivyaBharathi: 'ஜி.வி.பிரகாஷ் கூட இன்னொரு படம் பண்ணுறது பிடிச்சிருந்தது’ - திவ்யபாரதி பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Divyabharathi: 'ஜி.வி.பிரகாஷ் கூட இன்னொரு படம் பண்ணுறது பிடிச்சிருந்தது’ - திவ்யபாரதி பேட்டி

DivyaBharathi: 'ஜி.வி.பிரகாஷ் கூட இன்னொரு படம் பண்ணுறது பிடிச்சிருந்தது’ - திவ்யபாரதி பேட்டி

Marimuthu M HT Tamil Published Feb 26, 2025 02:43 PM IST
Marimuthu M HT Tamil
Published Feb 26, 2025 02:43 PM IST

DivyaBharathi:நடிகை திவ்யபாரதி பேட்டி: நடிகை திவ்யபாரதி சமீபத்தில் கிங்ஸ்டன் என்னும் படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து இருக்கிறார்.

'ஜி.வி.பிரகாஷ் கூட இன்னொரு படம் பண்ணுறது பிடிச்சிருந்தது.. கிங்ஸ்டனில் ஆஃப் சாரி கட்டியிருப்பேன்’ - திவ்யபாரதி பேட்டி
'ஜி.வி.பிரகாஷ் கூட இன்னொரு படம் பண்ணுறது பிடிச்சிருந்தது.. கிங்ஸ்டனில் ஆஃப் சாரி கட்டியிருப்பேன்’ - திவ்யபாரதி பேட்டி

குமுதம் யூட்யூப் சேனலில் நடிகை திவ்யபாரதி, கிங்ஸ்டன் பட புரொமோஷனுக்காக பிப்ரவரி 22ஆம் தேதி அளித்த பேட்டியில் கூறியிருப்பதின் தொகுப்பினைப் பார்க்கலாம்.

'திவ்ய பாரதி, பிரின்சஸ் ஆஃப் கோயம்புத்தூர், பாரம்பரிய முகம், நல்ல என்டர்டெயினர், நீங்கள் எம்.டெக் படிச்சதாக சொல்றாங்க?.

பழையது எல்லாம் படிச்சிட்டு வந்திருக்கார் போல. இல்லை நான் எம்.டெக் படிக்கலை. பி.டெக் தான் படிச்சிருக்கேன்.

எம்.டெக் என்றால் மேக்னடிக் டெக்னாலாஜி. எப்படி பசங்களை எல்லாம் இழுக்குறீங்க?.

ஓ.. அப்படியா நன்றி. எப்படி அதுன்னு தெரியல.

திவ்யபாரதியின் கல்லூரி கால பழைய போட்டோவைக் காட்டி இது பற்றி உங்கள் நினைப்பு என்ன?.

இந்தப் படத்தைப் பார்த்ததும் என்னுடைய காலேஜ் தான் நினைவுக்கு வருது. 2012ஆம் ஆண்டில் தான் எடுத்தது. என்னுடைய முழு காலேஜ் வாழ்க்கையும் தான் நினைவுக்கு வருது. வருஷத்தில் வெளியில் சொல்லி வயசு தெரிந்தால் என்ன. வயதில் என்ன இருக்கு.

நீங்கள் புரொபோஸ் செய்து வேண்டாம்ன்னு சொல்ற பசங்க இருக்காங்களா?

அப்படியெல்லாம் இல்லை. எங்க காலேஜும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அங்கு பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் எல்லாம் பேசிக்கமாட்டோம். அதனால் வாய்ப்பே இல்லை.

மகாராஜா படத்தில் சேலையில் பார்க்கும்போது ரொம்ப நல்லாயிருந்தது. இன்ஸ்டாகிராமில் மாடர்னாக இருக்கீங்க. ஆனால், மகாராஜாவில் சேலையில் திவ்யபாரதியைப் பார்த்தும் அவங்க ஹோம்லியா நல்லாயிருக்காங்கன்னு தோணுச்சு. உங்களுக்கு எந்த மாதிரி வொர்க் பண்ணனும்னு ஆசை?

அடிப்படையாக நடிகர்களாக இருப்பவர்கள், பல ரோல்கள் செய்றவங்களாக இருக்கணும்னு நினைப்பேன். அதனால், சினிமாவில் நான் எல்லாவிதமான ரோல்களிலும் நடிக்கணும்னு ஆசை. ஆனால், கிளோஸ் டூ ஹார்ட்டாக நான் நினைக்கிறது, கொஞ்சம் ஹோம்லியாக இருந்தால் எனக்கு ரொம்ப ஈஸியாக இருக்கிற மாதிரி நினைப்பேன். எனக்கு ரொமான்ஸ் மற்றும் லவ் எல்லாம் வராது. எனக்கு எமோஷனல் சீன்ஸ் அதிகம் இருந்தால் எனக்கு அது நல்லா வரும்ன்னு நம்பிக்கை.

கிங்ஸ்டன் செட்டில் நான் மட்டும் தான் பொண்ணு. மத்தவங்க எல்லோரும் பசங்க தான். அதனால் செம ஜாலியாக இருக்கும். செம கம்ஃபர்ட்டபிளாக வைச்சுப்பாங்க.

பேச்சிலருக்கு பின் கிங்ஸ்டன் வாய்ப்பு, நண்பர் கூட திரும்பவும் நடிக்கிற மாதிரி இருக்கும். உங்களுக்கு எப்படி இருந்தது?

கிங்ஸ்டன் படத்துக்காக திரும்பவும் கேட்கும்போது ஏற்கனவே நடிச்சவங்க. ஜி.வி.பிரகாஷ் சார் கூட நடிக்கும்போது கம்ஃபர்ட்டபிளாக இருக்கும். ஃபிரெண்ட். அதனால் இவங்க கூட இன்னொரு படம் பண்ணுறோம் அப்படிங்கிறபோது நிச்சயமாக பிடிச்சிருந்தது. ஹேப்பியாக இருந்தது.

மேலும் படிக்க: நடிகை சிம்ரன் பேட்டி

கிங்ஸ்டன் படத்தில் திவ்யபாரதி என்ன மாதிரியான கேரக்டரில் நடிச்சிருக்காங்க?

சப்ஜெக்ட்டே வந்து கிளாஸியாக எல்லாம் இருக்காது. ரொம்ப ரூட்டடான சப்ஜெக்ட். அதில் ஒரு நேட்டிவிட்டியோட, ஒரு ஹாஃப் சாரி கட்டிக்கிட்டு, அங்கு இருக்கிறவங்க கூட பேசிக்கிட்டு, ஒரு மீன்காரங்க மாதிரி. எனக்கும் ஜி.வி.பிரகாஷ் சாருக்குமே பேச்சிலர் டூ கிங்ஸ்டன் அப்படியே வேற மாதிரி இருக்கும். ஆடியன்ஸுக்கு பார்க்கும்போது அது இன்ட்ரெஸ்டிங்காக இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

இதில் வித்தியாசமான வட்டார வழக்கு இருக்கும்ன்னு எதிர்பார்க்கலாமா?

ஆமா.. ஆமா. கண்டிப்பாக கிங்ஸ்டன் படத்தில் வட்டார வழக்கு இருக்கு. தூத்துக்குடி ஸ்லாங் இருக்கும்' என நடிகை திவ்ய பாரதி பேட்டியாக அளித்துள்ளார்.

நன்றி: குமுதம் யூட்யூப் சேனல்