Office Web Series: வில்லேஜ் கேர்ள்.. தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் சம்பவம்.. ஆபிஸ் சீரிஸ் எங்கு, எப்போது பார்க்கலாம்?
Office Web Series: கிராமத்தில் இருந்து வரும் பெண் ஒருவரால் தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் சம்பவத்தை நகைச்சுவையுடன் கூறும் கதையாக ஆபிஸ் கதை அமைந்திருப்பதாக தெரிகிறது. ஆபிஸ் டிவி தொடர் ஐடி அலுவலகத்தை மையப்படுத்தி இருந்த நிலையில், வெப் சீரிஸ் அரசு அலுவலக அன்றாட நிகழ்வுகளை எடுத்துரைப்பதாக தெரிகிறது.

இந்த ஆண்டில் தமிழில் வெளியாகும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வெப் சீரிஸாக ஆபிஸ் என்ற தொடர் அமைந்துள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்டிரீமிங் ஆக இருக்கும் இந்த சீரிஸின் புதிய புரொமோ வெளியிடப்பட்டுள்ளது
கடந்த 2013 முதல் 2015 வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் என்ற தொடர் புத்தம் புது பொலிவுடன் மறு உருவாக்கம் செய்யப்பட்டு அதே டைட்டிலில் வெப் சீரிஸாக வெளியாகிறது.
சிரிப்பு பட்டாசாக இருக்கும் புரொமோ
கிராமத்தில் இருந்து பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தாசில்தார் அலுவலகம் வருகிறார், அங்கு அவர் தனது கணவரின் பெயரைக் கூற மறுக்கிறார். இப்படியான சூழலில் அந்த பெண்ணின் கணவர் பெயரை கண்டறிய மொத்த ஆபிஸும் அள்ளாடுகிறது. இப்படியான காட்சிகளுடன் சிரிப்பு பட்டாசாக ஆபிஸ் சீரிஸ் புரொமோ அமைந்துள்ளது.
சுவாரஸ்யம் மிக்க நகைச்சுவை திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் ஆபிஸ் வெப்ஸ் சீரிஸ் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் ஹாட் ஸ்டாரில் ஸ்டிரீம் ஆகவுள்ளது.
ஆபிஸ் சீரிஸ் நடிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பபட்ட ஆபிஸ் டிவி தொடரானது ஐடி கம்பெனி ஒன்றை பின்புலமாக வைத்து அங்கு நடக்கும் அன்றாட நிகழ்வுகள், பணியாளர்களுக்கு இடையிலான உறவுகளை மையப்படுத்தி அமைந்திருந்தது.
ஆனால் தற்போது உருவாகி இருக்கும் வெப் சீரிஸ், ஒரு கிராமத்தில் இருக்கும் தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை மையப்படுத்தி ஆபிஸ் கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஹார்ட் பீட் சீரிஸில் நடித்த குரு லக்ஷ்மண், சபரீஷ், ஸ்மேகா மணிமேகலை, கீர்த்திவேல், பிராங்ஸ்டார் ராகுல், தமிழ்வாணி என வெப்சீரிஸ்களில் பிரபலமான நடிகர்கள் இதில் நடித்துள்ளார்கள்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வெப் சீரிஸ்கள்
கடந்த 2022இல் அமேசான் ப்ரைம் விடியோவில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வெப்சீரிஸ் சுழல், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பாத்திபன், ஷ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடித்திருந்த இந்த சீரிஸின் இரண்டாம் பாகம் சுழல் 2 உருவாகியுள்ளது. இந்த பாகத்தில் கூடுதலாக மஞ்சிமா மோகன், கெளரி கிஷான், சம்யுக்தா விஸ்வநாதன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். இதையடுத்து சுழல் 2 சீரிஸும் இம்மாதம் வெளியாகலாம் என தகவல்கள் உலா வருகின்றன.
இதற்கிடையே கடந்த மாதம் 10ஆம் தேதி வேற மாறி ட்ரிப் என்ற நகைச்சுவை வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஜெயசீலன், ரவீனா, விஸ்வா உள்பட பலர் நடித்திருக்கும் இந்த தொடர் ரோட் ட்ரிப் ஒன்றில் நடக்கும் சம்பவங்களை காமெடி, சாகசம் கலந்த திரைக்கதையுடன் அமைந்துள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்