தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Directors To Actors: ஒரு பக்கம் ஆக்‌ஷன், மறுபக்கம் டைரக்‌ஷன்.. நடிகர்களாக மிளிரும் இயக்குநர்கள்

Directors To Actors: ஒரு பக்கம் ஆக்‌ஷன், மறுபக்கம் டைரக்‌ஷன்.. நடிகர்களாக மிளிரும் இயக்குநர்கள்

Aarthi V HT Tamil
Oct 29, 2023 06:00 AM IST

இயக்குநராக இருந்து நடிகர்களாக மாறியவர்கள் பற்றி பார்க்கலாம்.

நடிகர்களாக மிளிரும் இயக்குநர்கள்
நடிகர்களாக மிளிரும் இயக்குநர்கள்

எஸ்.ஜே. சூர்யா

குஷி படம் மூலம் ஹிட் கொடுத்து இயக்குநராக மாறியவர், இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா. பிறகு தமிழ், தெலுங்கு, மொழிகளில் பிஸியான நடிகராக மாறினார். மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து தற்போது கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

செல்வராகவன்

'காதல் கொண்டேன், 7/ஜி பிருந்தாவன் காலனி' போன்ற படங்களின் மூலம் இயக்குநராக அங்கீகாரம் பெற்ற செல்வராகவன், 'பீஸ்ட்' படத்தின் மூலம் நடிகராக மாறினார். இன்னொரு பக்கம் தற்போது இயக்கத்தில் நடித்துக் கொண்டே இருக்கிறார். மார்க் ஆண்டனி படங்கள் மூலம் ஈர்க்கப்பட்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

கௌதம் வாசுதேவ் மேனன்

தமிழ் சினிமாவின் காதல் இயக்குநர் என அழைக்கப்படுபவர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களின் மூலம் இயக்குநராக கவர்ந்தவர். என்னை அறிந்தாள், அச்சம் யென்பது மடமையடா, லியோ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் இயக்கிய 'துருவ நட்சத்திரம்' படம் விரைவில் வெளியாக உள்ளது.

சமுத்திரக்கனி

உன்னைச் சரணாடைந்தேன், சம்போ சிவ ஷம்போ படத்தை இயக்கிய இயக்குநராக அறிமுகமானார் சமுத்திரக்கனி. ஆர்ஆர்ஆர், விமானம் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வில்லன் மற்றும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது 'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

மிஸ்கின்

துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநராக கலக்கியவர் மிஸ்கின். நடிகராகவும் சிறந்து விளங்குகிறார். சூப்பர் டீலக்ஸ், மாவீரன் படங்களில் வில்லனாக நடித்த மிஸ்கின், சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்திலும் ஜொலித்தார். இவர் தற்போது இயக்கி வரும் 'பிசாசு 2' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.