Director S.S. Stanley: ஏப்ரல் மாதத்தில் பட இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி உடல்நலக் குறைவால் காலமானார்..
Director S.S. Stanley: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ஸ்டான்லி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

Director S.S. Stanley: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ஸ்டான்லி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 58. இவர் தமிழ் சினிமாவின் 2000 ஆண்டு காலகட்டத்தில், மிகவும் பிரபலமான இயக்குநராக இருந்தார். இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை (பிப்ரவரி 15) சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி
இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் சசியிடம் பயிற்சி பெற்ற எஸ்.எஸ். ஸ்டான்லி, 12 ஆண்டு உதவி இயக்குநராக பணியாற்றிய பின் 2002 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் எனும் தன் முதல் படத்தை இயக்கி வெளியிட்டார். ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த இந்தப் படம் இளைஞர்களை வெகுவாகவே கவர்ந்தது. இதன் மூலம் முதல் படத்திலேய வெகுவான ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் வெற்றி பெற்றது.
எஸ்.எஸ். ஸ்டான்லி இயக்கிய படங்கள்
இந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடிகர் தனுஷை வைத்து புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2004) என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் கதை புரியாமல் போனதாக கூறினர். இதனால், இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் எஸ். எஸ். ஸ்டான்லி தனக்கு முதல் படத்திலேயே வெற்றி கொடுத்த நடிகர் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து மெர்க்குரி பூக்கள் எனும் படத்தை இயக்கினார். இதணைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலை எனும் படத்தை இயக்கினார்.
நடிகர் எஸ்.எஸ். ஸ்டான்லி
இந்தப் படத்திற்கு பின் எஸ்.எஸ்.ஸ்டான்லி, தன்னை பெரும்பாலும் எழுத்தாளராகவும் நடிகராகவும் முன்னிறுத்தி வந்தார். இதையடுத்து அவர் 2007 ஆம் ஆண்டே, பெரியார் படத்தில் சி. எந். அண்ணாதுரையாக நடித்திருந்தார். தொடர்ந்து, ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, கடுகு, ஆண் தேவதை, 6 அத்தியாயம், சர்க்கார், மீண்டும், வெள்ளை யானை, பொம்மை நாயகி, மஹாராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

டாபிக்ஸ்