Vishnuvarthan: பில்லா படம் ஓடவில்லையா? சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் விஷ்ணுவர்தன்!
Vishnuvarthan: இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ரஜினி நடித்து வெளியான பில்லா படத்தின் ரீமேக் விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து இயக்கியிருந்தார். நேசிப்பாயா பட ப்ரொமோஷனுக்காக சமீபத்தில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் ரஜினியின் பில்லா படம் சரியாக ஓடவில்லை என கூறியுள்ளார்.

தமிழில் அஜித், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். சில காலமாக இயக்கத்தில் இருந்து விலகி இருந்த விஷ்ணுவர்டன் மீண்டும் இயக்கிய படம் தான் நேசிப்பாயா. இவரது இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேசிப்பாயா படம் வெளியாக உள்ளது. இந்த நேசிப்பாயா படத்திற்காக பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். இப்படத்தில் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளியும், இயக்குனர் சங்கரின் மகளான அதித்தி ஷங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இன்றைய தலைமுறையினர் விரும்பும் படம்
நேசிப்பாயா படம் இளம் ஜோடிகளுக்கு இடையே நடக்கும் காதல் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் பிரச்சினையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு காதலர்களின் சிறந்த என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இப்படத்திற்கான புரோமோசன் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
நடிகர் அஜித்துடன் இணைந்து பில்லா 2 மற்றும் ஆரம்பம் ஆகிய இரண்டு படங்களை கொடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களிலும் அஜித் மிகவும் ஸ்டைலிஷ் ஆன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் மீண்டும் நடிகர் அஜித்துடன் இணைந்து மற்றொரு படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சர்ச்சையில் சிக்கிய விஷ்ணுவர்தன்
இந்த நிலையில் இயக்குனர் விஷ்ணுவர்தன் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ரஜினி நடித்து வெளியான பில்லா படத்தின் ரீமேக் விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து இயக்கியிருந்தார். நேசிப்பாயா பட ப்ரொமோஷனுக்காக சமீபத்தில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் ரஜினியின் பில்லா படம் சரியாக ஓடவில்லை என கூறியுள்ளார். ஓடாத படத்தை ரீமேக் செய்வது குறித்து சற்று தயங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஜினி நடித்து வெளியான பில்லா படம் வெற்றியாகவில்லை அது சரிவர ஓடவில்லை எனவும் இந்த இன்டர்வியூவில் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். மேலும் ரஜினியின் பில்லா படம் வெள்ளி விழா கண்ட சூப்பர் ஹிட் படம் என்பதை ரஜினியின் மக்கள் தொடர்பாளரான வியாஸ் அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் விஷ்ணுவரதன் மீது ரஜினி ரசிகர்கள் உட்பட பலரும் கோபத்தில் உள்ளனர்.
விஷ்ணுவர்தன் மன்னிப்பு கேட்க வேண்டும்
ரஜினி நடித்த பில்லா படத்தின் தயாரிப்பு நிறுவனம் அப்படத்தின் வெற்றியால் அதிகம் சம்பாதித்து இருப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான காரணத்தால் விஷ்ணுவர்தன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு படத்தை ரீமேக் செய்யப் போவது என்றால் அதனை முழுதும் ஆராய்ந்து தான் அந்த படத்தை எடுப்பார்கள். ஆனால் பில்லா படம் குறித்தான எந்த தகவலும் இல்லாமல் இந்த படத்தை எடுத்துள்ளதாகவும் விஷ்ணு வர்தனை விமர்சித்து வருகின்றனர். அஜித், ஆர்யா என முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றி வந்த விஷ்ணு வர்தன் முதலில் ரஜினிகாந்த் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் எனவும் திரையுலக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

டாபிக்ஸ்