Director Vishnuvardhan: எந்த எல்லைக்கும் செல்லும் நயன்தாரா.. யுவன் இல்லாவிட்டால் நான் இல்லை - இயக்குநர் விஷ்ணுவர்தன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Vishnuvardhan: எந்த எல்லைக்கும் செல்லும் நயன்தாரா.. யுவன் இல்லாவிட்டால் நான் இல்லை - இயக்குநர் விஷ்ணுவர்தன்

Director Vishnuvardhan: எந்த எல்லைக்கும் செல்லும் நயன்தாரா.. யுவன் இல்லாவிட்டால் நான் இல்லை - இயக்குநர் விஷ்ணுவர்தன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 11, 2025 06:58 AM IST

Director Vishnuvardhan: யுவன் இசைக்காகவே எனது அறிந்தும் அறியாமலும் படத்தை பலரும் பார்க்க வந்தார்கள். அவரை கம்பேக் என சொல்வதை விட அவர் இசையில் எப்போதும் நிலைத்து நிற்கிறார் என்றே கூற வேண்டும் என்று இயக்குநர் விஷ்ணுவர்தல் பேசியுள்ளார்.

எந்த எல்லைக்கும் செல்லும் நயன்தாரா.. யுவன் இல்லாவிட்டால் நான் இல்லை - இயக்குநர் விஷ்ணுவர்தன்
எந்த எல்லைக்கும் செல்லும் நயன்தாரா.. யுவன் இல்லாவிட்டால் நான் இல்லை - இயக்குநர் விஷ்ணுவர்தன்

அஜித்குமாரின் விடாமுயற்சி பொங்கல் ரேஸில் இருந்து விலகிய நிலையில் கடைசி நேரத்தில் இந்த இரு படங்களில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகின்றன. இதையடுத்து படத்தின் புரொமோஷன்களும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழில் கடைசியாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2015இல் யட்சன் என்ற படம் வெளியானது. இதன் பின்னர் 10 ஆண்டுகள் கழித்து அவர் நேசிப்பாயா படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இதையடுத்து படம் தொடர்பாக நக்கீரன் ஸ்டுடியோ ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.

எந்த எல்லைக்கும் செல்லும் நயன்தாரா

இதில் நடிகை நயன்தாரா, இசையப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரிடமான தனது உறவு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "சினிமா, நட்பு என அனைத்திலும் நயன்தாரா காட்டும் அன்புதான் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று காரணமாக உள்ளது. நயன்தாராவுக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் யாராக இருந்தாலும், அவருக்காக எந்த எல்லைக்கும் போவார். அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு அவரிடம் இருக்கிறது.

இதில் இருந்தே அவர் எந்த அளவுக்கு ஃபயராக இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். அன்புக்காக அவர் தரும் மதிப்பு எனக்குப் மிகவும் பிடிக்கும்” என பதிலளித்தார்.

யுவனால் தான் நான் இருக்கிறேன்

யுவன் எனக்கு நல்ல நண்பர். அதற்காக தினமும் ஒன்றாக சேர்ந்து வா மச்சான் என்று சுற்றும் அளவுக்கு இல்லை. அவருடனான நட்பு எனக்கு பள்ளிப் பருவ காலத்தில் இருந்து இருக்கிறது.

இன்றைக்கு நான் இந்த நிலைமையில் இருக்க நிச்சயமாக யுவன் சங்கர் ராஜாவும் ஒரு காரணம். ஓப்பனாக சொல்லவேண்டுமானால், ஆரம்பத்தில் அவரின் பாட்டை கேட்க யாரும் வரவில்லையென்றால், எனது அறிந்தும் அறியாமலும் படத்தைப் பார்க்க வந்திருக்க மாட்டார்கள். அந்த படத்தில் உள்ள பாடலுக்காகத்தான் அனைவரும் படம் பார்க்க வந்தார்கள்.

அதன் பிறகு என்னுடைய கம்போர்ட் ஜோனை பிரேக் பண்ணுவதற்காக யுவன் இல்லாமல் என்னுடைய திறமையை வெளிப்படுத்த முயற்சி எடுத்தேன். ஆனால் அங்கேயும் யுவன் சங்கர் ராஜாதான் இருந்தார். ஏனென்றால் அப்படிப்பட்ட இசையமைப்பாளர் அவர்.

இசையில் எப்போதும் நிலைத்து இருக்கிறார்

யுவன் போய்விட்டார், யுவன் கம்பேக் கொடுத்துவிட்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை. யுவன் எப்போதும் இசையில் நிலைத்து இருக்கிறார். அதை யாராலும் மாற்ற முடியாது. மெலடியில் அவர் பின்னி எடுப்பார். குறிப்பாக நேசிப்பாயா படத்தின் பின்னணி இசையில் அவர் ஆடியன்ஸை அழ வைத்துவிடுவார்.

நடிகர்கள் நடிப்பு ஒரு காட்சியில் எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லையென்றால் யுவன் அந்த இடத்தில் தனது விரலை விட்டு பின்னி எடுத்துருவாரு. அந்தளவு அவரது இசையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்

நேசிப்பாயா படம்

காதல் கலந்த த்ரில்லர் படமான நேசிப்பாயா மூலம் மறைந்த நடிகர் முரளி இளைய மகனும், நடிகர் அதர்வா சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகிறார். இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரபு, சரத்குமார், குஷ்பூ, கல்கி கோச்சலின் உள்பட பலர் நடித்திருக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சென்சாரில் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.