HBD Vikraman: மென்மை.. மேன்மை.. மேதமை.. ‘படம் ஹிட் கொடுத்து 20 வருஷம் ஆச்சு’ - விக்ரமனின் பிறந்தநாள் இன்று!
HBD Vikraman: இன்று அவர் தன்னுடைய 59 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது மகன் விஜய் கனிஷ்கா முன்னதாக தனது தந்தை குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு பிரத்யேகமாக கொடுத்த பேட்டியை நினைவு கூறலாம்.

HBD Vikraman: அழகும், அமைதியும், ஆசுவாசமும் நிறைந்த இயக்குநர் விக்ரமன், தன்னுடைய படங்களையும் அவ்வாறே வடிவமைத்தார். அவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும், அவர் உருவாக்கிய ஒவ்வொரு கதாபாத்திரங்களும், இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கொண்டிருக்கின்றன.
59 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இன்று அவர் தன்னுடைய 59 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது மகன் விஜய் கனிஷ்கா முன்னதாக தனது தந்தை குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு பிரத்யேகமாக கொடுத்த பேட்டியை நினைவு கூறலாம்.
ஹிட் கொடுத்து 20 வருஷம் ஆகிருச்சு.
விஜய் கனிஷ்கா பேசும் போது, ‘ அவர் என்னைக்குமே எல்லோருக்கும் உறுதுணையா இருந்துருக்காரு. அப்பா படம் பண்ணி 10 வருஷம் ஆச்சு. ஹிட் கொடுத்து 20 வருஷம் ஆகிருச்சு. ஆனா, இன்னைக்கு வரைக்கும் விக்ரமன்னு சொன்னா, அப்படி ஒரு மரியாதை இருக்கு. அதுக்கு காரணமா நிறைய விஷயங்கள் இருந்தாலும், சில விஷயங்கள சொல்றேன்.
