Vikraman:ரஹ்மான் சொன்னதை நான் கேட்கல.. தப்பு செஞ்சிட்டேன்.. ஆர்.பி. செளத்ரி சார் எனக்கு காட் ஃபாதர்.. இயக்குநர் விக்ரமன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vikraman:ரஹ்மான் சொன்னதை நான் கேட்கல.. தப்பு செஞ்சிட்டேன்.. ஆர்.பி. செளத்ரி சார் எனக்கு காட் ஃபாதர்.. இயக்குநர் விக்ரமன்

Vikraman:ரஹ்மான் சொன்னதை நான் கேட்கல.. தப்பு செஞ்சிட்டேன்.. ஆர்.பி. செளத்ரி சார் எனக்கு காட் ஃபாதர்.. இயக்குநர் விக்ரமன்

Marimuthu M HT Tamil
Feb 03, 2025 09:12 AM IST

Vikraman:ரஹ்மான் சொன்னதை நான் கேட்கல.. தப்பு செஞ்சிட்டேன்.. ஆர்.பி. செளத்ரி சார் எனக்கு காட் ஃபாதர் என இயக்குநர் விக்ரமன் பேசியிருக்கிறார்.

Vikraman:ரஹ்மான் சொன்னதை நான் கேட்கல.. தப்பு செஞ்சிட்டேன்.. ஆர்.பி. செளத்ரி சார் எனக்கு காட் ஃபாதர்.. இயக்குநர் விக்ரமன்
Vikraman:ரஹ்மான் சொன்னதை நான் கேட்கல.. தப்பு செஞ்சிட்டேன்.. ஆர்.பி. செளத்ரி சார் எனக்கு காட் ஃபாதர்.. இயக்குநர் விக்ரமன்

இதுதொடர்பாக ரெட் நூல் யூட்யூப் சேனலுக்காக 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி 1ஆம் தேதி இயக்குநர் விக்ரமன் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

’’எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி இந்த இரண்டு இசையமைப்பாளர்களுடன் இயக்குநர் விக்ரமன் சார் பணியாற்றும்போது சிறப்பாக இருக்கிறது. அதற்குக் காரணம்?

எங்களுக்குள் ஒத்த அலைவரிசை செட் ஆகிடுச்சு. எனக்கு என்ன பிடிக்கும் என்று அவங்களுக்குத் தெரியும். அவங்ககிட்ட என்ன மாதிரி வாங்கலாம்ன்னு எனக்கும் தெரியும். அதுவே, நான் ரஹ்மான் கூட வொர்க் பண்ணும்போது, நமக்கு இந்த மாதிரி பாடல் வேண்டும் என்று கேட்போம். அவரும் முதல் டியூன்லேயே இம்ப்ரைஸ் செய்திடுவார். நீ கட்டும் சேலை மடிப்புல தான் பாட்டில் எல்லாம், அவர் வேறு ஒரு குத்துப்பாட்டு போட்டிருந்தார். அது எனக்கு அவ்வளவாக இம்ப்ரஸ் ஆகல. அப்போது புரொடியூசர் என்ன சொல்வாங்கன்னா, ரஹ்மான் சார் எந்த டியூன் கொடுத்தாலும் வாங்கிடுங்க சார். அவரை பிடிக்க ஆறு மாதம் ஆகும். ரொம்ப பிஸியா இருக்கார்னு சொல்வாங்க. எனக்கு அவர் முதலில் போட்ட பாடல் பிடிக்காததால், அடுத்து லிரிக் எழுதிட்டு வாங்க, அதற்கு ஏற்றார்போல் நான் மியூசிக் போட்டுக்கிறேன்னு சொன்னார். அப்படி பழனி பாரதியை வைச்சு பாடல் எழுதி, இசையமைக்கப்பட்ட பாடல் தான், ‘நீ கட்டும் சேலை மடிப்பில’ என்ற பாடல்.

புதிய மன்னர்கள் பலருக்கும் பிடித்த படம். ஆனால், அது சரியாகப்போகலை. அது பற்றி?

நானும் நன்றாக ஓடும் என்று தான் நினைத்தேன். ஆனால், ரஹ்மான் படம் பார்த்திட்டு ஒரு விஷயம் சொன்னார். அதை நான் கேட்கல. அதை நான் இன்றைக்கு உணர்கிறேன். படத்தில் நிறைய பழைய பாடல்களை பயன்படுத்தியிருப்பேன். படம் பார்த்த ரஹ்மான், இது ஒரு சீரியஸான படம் சார். இது படத்தை நீர்த்துப்போகச் செய்யுது. ரஹ்மானுடைய கணிப்பு 100 விழுக்காடு உண்மை. நான் தவறு செய்திட்டேன். புதிய மன்னர்கள் படம் ஜனவரி 1ஆம் தேதி ஆரம்பிச்சு, பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் எல்லாம் முடிச்சிட்டோம். இடையில் என் தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு 6 நாள் லீவு. பாடல் எடுக்கிறது மட்டும்தான், பாக்கி. கொஞ்சம் பணப்பிரச்னையால் படம் தாமதம் ஆகுது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்கா கிளம்பிட்டு இருக்கார். 70 சதவீதம் ரீரெகார்டிங் முடிச்சிட்டார். மீதத்தை வந்து முடிச்சித்தருகிறேன் என்று சொன்னார். நான் தான் படம் தாமதம் ஆகுதுன்னு சொல்லி, ராஜாமணி என்கிற ஒரு மலையாள இசையமைப்பாளரை வைச்சு ஃபர்ஸ்ட் ஆஃபில் ரீரெக்கார்டிங் செய்தேன். அது வொர்க் அவுட் ஆகல. இதை நான் ஒத்துக்கிறேன்.

புதுவசந்தம் படம் பற்றி சொல்லுங்க?

புது வசந்தம் படம் என்னுடைய முதல் படம். நான் இயக்குநர் ஆக ரொம்ப சிரமப்படலை. ஆனால், இயக்குநர் ஆன பின் ரொம்ப கஷ்டப்பட்டேன். உதவி இயக்குநர் ஆக இருந்தபோது சில சிரமங்கள் இருந்தது. இல்லைன்னு சொல்லமுடியாது. புதுவசந்தம் என்னை நம்பி, செளத்ரி சார் கொடுத்திருக்கார். சின்ன படங்களிலேயே கொஞ்சம் காஸ்ட்லியான பட்ஜெட் தான் நான் கொடுத்தேன். ராமநாராயணன் சார் எல்லாம் 17 லட்சத்தில் படத்தை முடிச்சிடுவார். நான் ஃபர்ஸ்ட் காப்பியே 23 லட்சம்ன்னு கொடுத்திருந்தேன். ஆனால், 22.5 லட்சத்தில் முடிச்சிட்டேன் அது வேற.

சூப்பர் குட் என்கிற லோகோ என்னுடைய ஐடியா தான். இன்னிக்கு வெற்றிகரமாக 98 படங்கள் முடிச்சிட்டாங்க. அப்போது முரளி டேட் மட்டும் தான் இருந்தது. அப்போது முரளி சித்தாரா சீன்களை மட்டும் தான் 5 நாட்கள் எடுத்தோம். அப்போது கொஞ்ச நாட்களில் லைட் மேன் சம்பள உயர்வுக்காக ஸ்டிரைக் நடக்குது. படம் எடுத்து 15 நாட்களில் இந்த மாதிரி பிரச்னை.

என் உதவி இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் செட்டில் ரொம்ப கோபப்படுவார். நான் ரொம்ப கூல். கே.எஸ்.ரவிக்குமாருக்கு அடுத்த இடத்தில் இருக்கக்கூடிய உதவி இயக்குநர் அவர்மேல் இருந்த ஒரு ஈகோ கிளாஸில் படம் ஓடாதுன்னு செளத்ரி சார்கிட்ட சொல்லிட்டு, வேலையை விட்டு நின்றிருக்கிறார். இடையில் படத்துக்குப் பணப்பிரச்னை. இவ்வளவு பிரச்னைகளிலும் செளத்ரி சார் எனக்கு ஆதரவாக இருந்தார். அதனால் இன்றைக்கும் அவருக்கு நன்றியுடன் இருக்கிறேன்.

நான் சூப்பர் குட் ஃபிலிம்ஸுக்கு 5 படம் பண்ணியிருக்கேன். அதில் 4 சூப்பர் ஹிட். புதுவசந்தம், கோகுலம், பூவே உனக்காக, சூரிய வம்சம் இந்த நான்கு படங்களும் சூப்பர் ஹிட். அடுத்து உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் ரைட்ஸை, செளத்ரி சாருக்கு தான் கொடுத்தேன். அது தெலுங்கில் ராஜா என்னும் பெயரில் வந்து பெரிய ஹிட். அப்படி சூப்பர் குட் ஃபிலிம்ஸுக்கும் எனக்கும் பெரிய பந்தம் இருக்கும். என்னுடைய காட் ஃபாதர் ஆர்.பி. செளத்ரி சார். என்னுடைய முதல் அட்வான்ஸ் செவ்வாய்க்கிழமை தான் வாங்கினேன்’’ என்று இயக்குநர் விக்ரமன் தெரிவித்திருக்கிறார். 

நன்றி: ரெட் நூல்

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.