'அப்படி ஒரு மெமரியை நான் பார்த்ததே இல்லை': நடிகர் விஜய் பற்றி இயக்குநர் விக்ரமன் புகழாரம்.. த்ரோபேக் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'அப்படி ஒரு மெமரியை நான் பார்த்ததே இல்லை': நடிகர் விஜய் பற்றி இயக்குநர் விக்ரமன் புகழாரம்.. த்ரோபேக் பேட்டி

'அப்படி ஒரு மெமரியை நான் பார்த்ததே இல்லை': நடிகர் விஜய் பற்றி இயக்குநர் விக்ரமன் புகழாரம்.. த்ரோபேக் பேட்டி

Marimuthu M HT Tamil Published May 13, 2025 09:03 AM IST
Marimuthu M HT Tamil
Published May 13, 2025 09:03 AM IST

'வசனம் கொடுத்தோம் என்றால், ஒரு தடவை கண்ணைமூடி எவ்வளவு நீளமான டயலாக் ஆக இருந்தாலும் கேட்பார். கேட்டவுடன் டேக் போகலாம்பார். ரொம்பப் பணிவாகத் தான் சொல்வார்’ என நடிகர் விஜயின் நினைத்திறன் பற்றி, இயக்குநர் விக்ரமன் பேசியிருக்கிறார்.

'அப்படி ஒரு மெமரியை நான் பார்த்ததே இல்லை': நடிகர் விஜய் பற்றி இயக்குநர் விக்ரமன் புகழாரம்.. த்ரோபேக் பேட்டி
'அப்படி ஒரு மெமரியை நான் பார்த்ததே இல்லை': நடிகர் விஜய் பற்றி இயக்குநர் விக்ரமன் புகழாரம்.. த்ரோபேக் பேட்டி

இதுதொடர்பாக பிஹைண்வுட்ஸ் மேக்ஸ் யூடியூபில், ஜூன் 22, 2022அன்று வெளியான பேட்டியில் இயக்குநர் விக்ரமன் கூறியிப்பதாவது, ‘’ நடிகர் விஜய்யுடைய திறமை எனக்கு முதல் நாளே தெரிஞ்சிருச்சு. படமெடுக்கும்போதே, நிறையபேர் கிட்ட சொன்னேன், அடுத்து மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வரப்போகிறார் என்று.

இன்றைக்கு வேண்டுமென்றால், சிலர் சொல்லலாம். அவர் பயிற்சி எடுக்காமல் வந்தார் என்று. நான் ஒத்துக்கமாட்டேன். அவர் பக்காவாக, பயிற்சி எடுத்து வந்தார்.

தனது சிறுவயதில் இருந்தே, தன்னை தயார்ப்படுத்திக்கிட்டு, சினிமாவுக்குத் தான் வரப்போகிறேன். இது நம்ம எதிர்காலம் என நினைத்து , நல்லா டான்ஸ் கத்துக்கிட்டு, நல்லா பைட் கத்துக்கிட்டு, நல்லா குதிரை ஏற்றம் கத்துக்கிட்டு, எல்லாமே கத்துக்கிட்ட ஒரு முழு திறமையாலியாகத் தான், நடிகர் விஜய் சினிமாவுக்குள் வந்தார். கேமராவுக்கு முன்னாடி இல்லாமல், எல்லாமே தெரிஞ்ச ஒரு மாஸ்டர் ஆஃப் ஆல் ஆகத் தான் விஜய் இருந்தார்.

விஜய் ஒரு மிகப்பெரிய திறமைசாலி.அவர்கிட்ட எல்லாத்திறமையும் இருக்கு. மெமரின்னா மெமரி அப்படி ஒரு மெமரியை நான் பார்த்ததே இல்லை.

’ஒரு வேளை கேட்டால் டேக் தான்’: இயக்குநர் விக்ரமன்

வசனம் கொடுத்தோம் என்றால், ஒரு தடவை கண்ணைமூடி எவ்வளவு நீளமான டயலாக் ஆக இருந்தாலும் கேட்பார். கேட்டவுடன் டேக் போகலாம்பார். ரொம்பப் பணிவாகத் தான் சொல்வார். ஒரு வேளை அவர் நம்மை கிண்டல் அடிக்கிறார்னு தோணும். அதெல்லாம் இல்லை, டேக் போயிடுவார்.

முதல் நாள் வசனத்தை வாங்கிட்டுப் போறது எல்லாம் கிடையாது. ஸ்பாட்டில் வந்து வசனத்தை சொல்லச் சொல்லி கண்ணை மூடிக்கேட்பார். ஸ்பாட்டில் பிச்சிடுவார். ஏகப்பட்ட வேரியஷன் மாடுலேஷனோடு பேசுவார். டப்பிங்கிலும் அதே மாதிரி தான்.

படத்தில் ஒரு பியூட்டி என்னவென்றால், காலையில் 7 மணிக்கு டப்பிங். விஜய் வந்து அப்போது மாண்புமிகு மாணவன் என்கிற, அவங்க அப்பா படத்தில் நடிச்சிட்டு இருக்கார்.

’வேகமாக டப்பிங் பேசுவார் விஜய்’: இயக்குநர் விக்ரமன்

அப்போது அவங்க அப்பா சந்திரசேகர் சார் என்கிட்ட பேசினார். தினமும் காலையில் 7 மணிக்கு என் பையன் டப்பிங்கிற்கு வந்திடுவான் சார். 7 மணி முதல் 9 மணி வரை உங்ககிட்ட சூட்டிங் பேசிட்டு, என் சூட்டிங் வரணும். உங்களுக்குப் பரவாயில்லையா சார்னு கேட்டார்.

உடனே நான், முடிச்சுக்கொடுத்தால் ஓ.கே. தினமும் 7 மணி முதல் 9 மணி வரை டப்பிங் பேசினால் 30, 40 நாள்கள் போயிருமே சார்னு சொல்றேன். அப்போது ஒரு ஹீரோ ஒரு முழுப் படத்துக்கு டப் செய்யணும்னாலே, முழுநாட்கள் உட்கார்ந்தால் குறைஞ்சது 5, 6 நாட்கள் ஆகும்.

முதல் ஆஃப்புக்கு ஒரு நாலு கால்ஷீட், செகண்ட் ஆஃபுக்கு ஒரு நாலு கால்ஷீட் என மொத்தம் 8 கால்ஷீட்கிட்ட ஆகும்.

அப்போது இப்படி டப் பண்ணினால் ஒரு மாதத்துக்கு மேல் போகுமே சார்னு சந்திரசேகர் சார்கிட்டச் சொல்றேன். ரிலீஸ் தள்ளிப்போகுமே அப்படின்னு சொல்றேன்.

அப்போது சந்திரசேகர் சார் சொல்றார், ’இல்லை இல்லை என் பையன் ரொம்ப வேகமாக டப்பிங் பேசுவார். நீங்க வேண்டுமென்றால் பாருங்கன்னு’ சொல்றார்.

நான் நம்பவே இல்லை. அப்போது கே.கே.நகரில் ஒரு ஃபிளாட்டில் இருக்கேன். 7 மணிக்கு என் வீட்டில் குளிச்சிட்டு,வண்டி வரச்சொல்லிட்டு, எந்த ஹீரோ 7 மணிக்கு வரப்போறார்னு 7.30 மணிக்குப்போனால், விஜய் எனக்கு முன்னாடி 7 மணிக்கே வந்திருப்பார்.

அப்ப, பைலட் டிராக் இருக்கும். அதையெல்லாம் பார்த்துக்கத்துக்கிட்டு, அந்த அரை மணிநேரத்தில் இரண்டு ரீல் பேசி முடிச்சிடுவார். டக்கு டக்குன்னு பேசி முடிச்சிடுவார்.

நான் போய் உட்காருவேன். மீதி இருக்கிற ஒரு ஒன்றரை மணிநேரத்தில், ஒரு 5, 6 ரீல் முடிஞ்சிரும். இப்படி 6 மணி முதல் 7 மணி நேரம் பேசியிருப்பார். அதுக்குள்ள படத்தை முடிச்சிருப்பார்.

அவ்வளவு ஃபாஸ்ட். ஒரு தடவை பார்ப்பார். உடனே, டேக் சார்னு சொல்லிடுவார். டேக் டக் டக்கு டக்குன்னு பேசுவார். அதுமாதிரி டான்ஸ் ஆகட்டும், ஃபைட் ஆகட்டும், ஹார்ஸ் ரைடிங் ஆகட்டும் எல்லாத்திலேயும் மிகப்பெரிய கில்லாடி.

’கார்த்திக் சாரை விஜய்க்கு பதிலாக நடிக்க வைக்க சொன்னார்கள்’: விக்ரமன்

பூவே உனக்காக படத்தில் கார்த்திக் சாரை போடுங்கன்னு டிஸ்டிரிபியூட்டர்ஸ் நிறையபேர் சொன்னாங்க. ஆனால், அப்போது சேட்டிலைட் டிவி வந்த புதுசு. இரண்டு டிவி தான் இருந்தது. அப்போது விஜய் நடித்த ரசிகன், தேவா படத்தின் பாடல்களைப் போட்டுக்கிட்டே இருப்பாங்க. அப்போது இவர் யாரு ரொம்ப சின்னப்பையனாக, சுறுசுறுப்பாக இருக்காரே, கிளாமராக இருக்காரேன்னு நினைச்சுப் படத்தில் நடிக்கவைச்சேன்.

விஜய் அப்போது காலேஜ் முடிச்சி ஒரு டீனேஜ் லுக்கில் தான் இருந்தார். விஜய் நடிச்சால் தான் நல்லாயிருக்கும் என்று, நான் சொன்னேன். அதை செளத்ரி சாரும் ஒத்துக்கிட்டார்’’ என இயக்குநர் விக்ரமன் பேசியிருக்கிறார்.