Vidaamuyarchi: சர்வதேச தரம்.. படத்தை தோள்களில் சுமந்திருக்கும் அஜித் - விக்னேஷ் சிவன் பகிர்ந்த பதிவு
Vidaamuyarchi: . ஏகே.சார் ஸ்கிரீன் பிரசென்ஸ், அவரது மென்மையான நடிப்பு, முழு படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்லும் விதமாக உள்ளது. உண்மையிலேயே சர்வதேச தரம் என விடாமுயற்சி படம் குறித்து கூறியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்

அஜித்குமாரின் விடாமுயற்சி படம் மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கும் அஜித்குமாரின் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆராவாரத்துடன் வரவேற்றனர்.
இதையடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்தின் விடாமுயற்சி படத்தை முதல் நாளிலேயே பார்த்து படத்தை வெகுவாக பாராட்டி கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்த விடாமுயற்சி படம் சர்வதேச தரத்தில் இருப்பதாவும், அஜித் படத்தை தனது தோள்களில் சுமந்திருப்பதாகவும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
தோள்களில் சுமந்திருக்கும் அஜித்
விடாமுயற்சி படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் பதிவில், "விடாமுயற்சி ஒரு தீவிரமான திரில்லர் படமாக உள்ளது. ஒரு புதிரைத் தீர்ப்பது போல, முதல் பிரேமிலிருந்து கடைசி பிரேம் வரை உங்களை கவர்ந்து இழுக்கிறது. ஏகே.சார் ஸ்கிரீன் பிரசென்ஸ் அவரது மென்மையான நடிப்பு, முழு படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்லும் விதமாக உள்ளது.
எதார்த்தமான காட்சிகள், ஆபத்தான ஆக்ஷன் காட்சிகள், லேஸ் காட்சிகள் என உணர்ச்சிகளை, தனது கதாபாத்திரத்தை மிகவும் நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார். அஜித் நடந்து வரும் ஒவ்வொரு முறையும் விசில் அடிப்பதை யாராலும் நிறுத்த முடியாது. சில அற்புதமான காட்சிகளும் உள்ளன.
உண்மையிலேயே சர்வதேச தரம்
அனிருத்தின் இசையும், மகிழ் திருமேனி திரைக்கதையும் மனதை மிகவும் இறுக்கமாக்குகிறது. கடினமான நிலப்பரப்பில் காட்சிகளும், அதன் நிலைத்தன்மையும் பராமரிக்கப்பட்டுள்ள விதம் படக்குழுவின் கடின உழைப்பை வெளிக்காட்டுகிறது.
முன்னதாக, படத்தின் ரிலீஸ் நேரத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "சில நேரங்களில் நினைத்த விஷயங்கள் எப்படி நடக்கும் என்று கவலைப்படுவதை நிறுத்தினால், ஏதாவது மந்திரம் நிகழும் - பிரபஞ்சம்" என குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவு வைரலான நிலையில், விக்னேஷ் சிவன் யாரை, எந்த விஷயத்தை இப்படி கூறுகிறார் என்ற இணையவாசிகள் விவாதித்தினர். அடுத்த சில மணி நேரங்களில் விடாமுயற்சி படம் பார்த்த பின்னர் படம் குறித்து தனது விமர்சனத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்தார்.
மிஸ்ஸான அஜித் படம்
அஜித்தின் 62வது படமாக விடாமுயற்சி உருவாகி வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு முன் வெளியான துணிவு படத்துக்கு அடுத்து அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் நீக்கப்பட்டு, அஜித்தின் புதிய படத்தை மகிழ் திருமேணி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து விடாமுயற்சி படம் பிரமாண்டமாக உருவானது.
ஆவேசம் ஸ்டைலில் அஜித்துக்கு கதை
கோலிவுட் சினிமாவின் பிரபல விமர்சகரான பரத்வாஜ் ரங்கன் உடனான உரையாடலில் அஜித் படம் இயக்க கமிட்டானதும், பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது பற்றியும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசும்போது, "நான் மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஆவேசம் படம் போல் கதையை அஜித்துக்கு உருவாக்கினேன். ஆனால் படத்தயாரிப்பாளர்கள் இதற்கு ஒத்து கொள்ளவில்லை. அவர்களுக்கென்று தனியே விதிகளை கொண்டிருந்தனர். பெரிய ஹீரோ படங்களுக்கு குறிப்பிட்ட சில விஷயங்கள் இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.
எனது கதையிலும் பல மாஸ் தருணங்கள் இடம்பிடித்திருந்தாலும் காமெடி படம் போல் இருப்பதாக சொன்னார்கள். இந்த பிரச்னையால் அஜித் படம் கைநழுவி போனது" என்றார்.
அஜித்குமார் - விக்னேஷ் சிவன் கூட்டணி கைவிடப்பட்டது பற்றி பல்வேறு விதமான தகவல்கள் உலா வந்து கொண்டிருந்த நிலையில், இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை விக்னேஷ் சிவன் வெளிப்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்