Viduthalai 2 movie OTT Release: ஹிந்தியில் வெளியாகும் வெற்றிமாறனின் விடுதலை 2.. எந்த ஓடிடி? எப்போ ரிலீஸ்.. விவரம் இதோ..
Viduthalai movie OTT Release: இயக்குநர் வெற்றி மாறனின் விடுதலை 2 படம் தற்போது ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Viduthalai movie OTT Release: வெற்றிமாறன் இயக்கிய தமிழ் திரைப்படமான விடுதலை இரண்டாம் பாகம் மார்ச் 28 முதல் இந்தியில் ஜீ5 சந்தாதாரர்களுக்குக் கிடைக்கும். ஒரு பரபரப்பான அரசியல் குற்றத் திரில்லராகக் கூறப்படும் இந்தப் படத்தில், சூரி, மஞ்சு வாரியர், கிஷோர் மற்றும் ராஜீவ் மேனனுடன் விஜய் சேதுபதி புரட்சியாளர் பெருமாளாக நடிக்கிறார்.
விடுதலை 2 படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வசூல் கிடைத்தாலும், பின்னர் வசூல் குறைந்துவிட்டது. எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை. விடுதலை 2 திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமங்களை ஜீ5 ஓடிடி தளம் பெற்றுள்ளது. முன்னதாக தமிழ் பதிப்புடன் தெலுங்கு பதிப்பும் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது ஹிந்தியில் டப் செய்யப்ப்டடு வெளியிட ஜீ5 திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க: விடுதலையில் சரிந்த வெற்றி மாறந்.. கை கொடுக்கும் தனுஷ்
விடுதலை பாகம் 2
தமிழ் சினிமா முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த விடுதலை 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற விடுதலை படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவானது.
விடுதலை 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கில் விடுதலை 2 என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த அரசியல் குற்றவியல் திரில்லர் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், அந்த அளவுக்கு வசூல் இல்லை.
விடுதலை பாகம் 2 கதை
விடுதலை: பகுதி 2, கோபம், பச்சாதாபம் மற்றும் அடக்குமுறை அமைப்புக்கு எதிரான போராட்டத்தை ஒன்றாக இணைக்கும் பெருமாளின் தீவிர பயணத்தைத் தொடர்கிறது. அவர் போலீஸிடம் பிடிபட்ட பிறகு, பெருமாள் ஒரு பள்ளி ஆசிரியரிலிருந்து புரட்சிகரத் தலைவராக எவ்வாறு மாறினார் என்பதை விவரிக்கிறார். இதனால் கான்ஸ்டபிள் குமரேசன் (சூரி நடித்தார்) தனது கடமைக்கும் பெருமாளின் நோக்கம் குறித்த வளர்ந்து வரும் புரிதலுக்கும் இடையில் சிக்கிக் கொள்கிறார்.
பாராட்டும் நடிப்பு
விடுதலை 2 படத்தில் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் கதாபாத்திரத்தில் சூரி நடிப்பு மெச்சும்படியாக உள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக விடுதலை 2 உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, கிஷோர், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கலவையான விமர்சனம்
விடுதலை 2 திரைப்படத்தை வெற்றிமாறன் தீவிர குற்றவியல் திரில்லர் படமாக இயக்கியுள்ளார். தான் விரும்பிய கருத்தை படத்தில் காட்டியுள்ளார். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சில காட்சிகள் நீளமாக உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
எதார்தத்தின் பிரதிபலிப்பு
"அதிகாரம் மற்றும் உயிர்வாழ்வின் மோதல்களில் சிக்கியவர்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களின் பிரதிபலிப்பே இந்தப் படம். ஜீ5 மூலம் பரந்த பார்வையாளர்களுக்கு கதை வெளிப்படுவதைக் காண நான் ஆவலாக உள்ளேன். மேலும் பார்வையாளர்கள், அவர்கள் மீண்டும் ரசிகர்களாக இருந்தாலும் சரி அல்லது விடுதலை உலகிற்குப் புதியவர்களாக இருந்தாலும் சரி, இந்தியில் இந்தக் கதையின் தீவிரத்தையும் ஆழத்தையும் அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று திரைப்படத் தயாரிப்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பரிமாம வளர்ச்சியை காணலாம்
"விடுதலை: பகுதி 1 மற்றும் 2-ஐ இந்தியிலும் ரசிகர்கள் அனுபவிப்பதில் நான் உண்மையிலேயே ஆவலாக இருக்கிறேன். எனது பெருமாள் கதாபாத்திரத்தின் பரிணாம வளர்ச்சியை பார்வையாளர்கள் காண முடியும். இறுதியில், விளைவுகள் எதுவாக இருந்தாலும், தான் நம்பும் விஷயத்திற்காக ஒரு மனிதன் துணிச்சலுடன் நிற்கும் கதை இது. திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் காட்டிய அதே அன்பையும் ஆதரவையும், டிஜிட்டல் வெளியீட்டிலும் ரசிகர்கள் காண்பார்கள் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்," என்று விஜய் சேதுபதி மேலும் கூறினார்.
சக்திவாய்ந்த கதை
விடுதலை படங்களில் பணிபுரிவது ஒரு தீவிரமான மற்றும் ஆழமான தனிப்பட்ட பயணமாக இருந்தது என்று சூரி கூறினார். "இயக்குனர் வெற்றிமாறன் சக்திவாய்ந்த மற்றும் சிந்திக்க வைக்கும் ஒரு கதையை வடிவமைத்துள்ளார், மேலும் அதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். பகுதி 1 இல் செய்ததைப் போலவே பார்வையாளர்களும் குமரேசனின் போராட்டங்கள் மற்றும் தேர்வுகளுடன் இணைவார்கள் என்று நம்புகிறேன். இந்த அடுத்த அத்தியாயத்தை இந்தியிலும் அனைவரும் அனுபவிப்பதைக் கண்டு நான் ஆவலாக உள்ளேன்."
