தோல்வியே சந்திக்காத இயக்குனர் வெற்றிமாறன்! இவருடைய வெற்றியின் ரகசியம் என்ன ?வெற்றிமாறன் சிறப்பு தொகுப்பு !
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தோல்வியே சந்திக்காத இயக்குனர் வெற்றிமாறன்! இவருடைய வெற்றியின் ரகசியம் என்ன ?வெற்றிமாறன் சிறப்பு தொகுப்பு !

தோல்வியே சந்திக்காத இயக்குனர் வெற்றிமாறன்! இவருடைய வெற்றியின் ரகசியம் என்ன ?வெற்றிமாறன் சிறப்பு தொகுப்பு !

Suguna Devi P HT Tamil
Dec 24, 2024 06:00 AM IST

தனது நேர்த்தியான படைப்புகளால் மக்களை மகிழ்வித்தது மட்டுமில்லாமல் அரசியல் படுத்தவும் செய்து வருகிறார். இது வரை வெளியான அவரது அனைத்து படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்ற படங்களாகும். அவரது திரைப்பயணம் குறித்து இங்கு காண்போம்.

தோல்வியே சந்திக்காத இயக்குனர் வெற்றிமாறன்!
தோல்வியே சந்திக்காத இயக்குனர் வெற்றிமாறன்!

 அந்த அளவிற்கு தனது நேர்த்தியான படைப்புகளால் மக்களை மகிழ்வித்தது மட்டுமில்லாமல் அரசியல் படுத்தவும் செய்து வருகிறார். இது வரை வெளியான அவரது அனைத்து படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்ற படங்களாகும். அவரது திரைப்பயணம் குறித்து இங்கு காண்போம். 

பாலுமகேந்திர பட்டறையில் இருந்து 

வெற்றி மாறனின் வாசிப்புப் பழக்கமே அவரை இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களிடம் உதவி இயக்குனராக சேர வைத்தது. அந்த வாசிப்பு பழக்கமே அவரை மண் சார்ந்த, மரபு சார்ந்த நமக்கான அரசியலை பேசும் கதை மற்றும் நாவல்களை தழுவி திறம்பட திரைக்கதை அமைத்து வெள்ளித்திரையில் நம்மை ஈர்க்க முடிகிறது. வழக்குரைஞராக தனது பயணத்தை தொடங்க விருப்பப்பட்டு தன் அப்பாவின் அறிவுறுத்தலால் ஆங்கில இலக்கியத்தை தேர்வு செய்தார்.

தனது முதுகலை பட்டப் படிப்பை பாதியிலேயே விட்டு பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக பயணிக்க தொடங்கியவர் தனது முதல் படத்தை கொடுக்க கிட்டத்தட்ட 10 வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. தன்னுடைய முதல் படம் பொல்லாதவன் ரிலீசுக்கு முன்பே தன்னுடைய காதலி ஆர்த்தியை மணந்தார். 

முதல் படத்தில் இருந்தே வேட்டை 

தனது முதல் படமான பொல்லாதாவன் முற்றிலும் மாறுபட்ட கவனத்தில் உருவான கமர்ஷியல் வெற்றி படமாகும். பைக்கை தொலைத்த மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையையும் அவனின் தைரியத்தையும் மையமாக வைத்து கதை நகரும். இப்படத்தின் ஹீரோ தனுஷ் இந்த பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பார். 

 பொல்லாதவனின் கமர்சியல் வெற்றிக்குப் பிறகு அதே வெற்றி கூட்டணியாகிய நடிகர், இயக்குனர் & மற்றும் தயாரிப்பாளர் ஒன்று சேர்ந்து ஆடுகளம் அமைத்தனர். இதுதான் என்னுடைய வகையறா சினிமா என்று வெற்றிமாறன் வெளிச்சம் போட்டு காட்டிய படம் ஆடுகளம். தன்னுடைய ஆசான் பாலு மகேந்திரா கூறிய வாரே ஆடுகளம் ஆறு தேசிய விருதுகளை அள்ளிக் குவித்தது. இன்று வரை வெற்றி மாறனின் மோஸ்ட் அண்டர் ரேட்டட் படம் என்றால் அது ஆடுகளம் தான்.மனித மனங்களின் குரூர முகங்களையும் சந்தர்ப்பவாதிகளாக இருக்கும் புத்தியையும் வைத்து களம் கண்டிருப்பார் இயக்குனர். ஆடுகளம் கொடுத்த தைரியம் தான் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற விசாரணை 

லாக்கப் நாவலின் கருவை மையமாக வைத்து காவல்துறை அதிகாரம் நினைத்தால் என்ன செய்யும் என்று சொல்ல வந்த இயக்குனர் அப்பாவி மக்களைக் கூட குற்றவாளிகளாக மாற்ற முடியும் என்பதை இப்படத்தின் மூலமாக காண்பித்துள்ளார். விசாரணை இறுதி பட்டியல் வரை சென்று திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கனவு படமான வடசென்னை கதை பல நடிகர்களின் கையில் மாறி மாறி இறுதியில் தனுஷுக்கே வந்து சேர்ந்தது. இப்படத்தின் திரைக்கதை கையாளப்பட்ட விதம் வெற்றிமாறனின் ஆளுமைக்கு ஒரு சாட்சி. இப்படத்தின் மூலம் தான் வெற்றிமாறனுக்கு தனி ரசிகர்கள் குவிந்தார்கள் என்பது நிஜம்.இப்படத்திற்கு தேசிய விருது வழங்காதது பெரும் சூழ்ச்சி என இயக்குனர் அமீர் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது

அசுரனாக வந்து 

வெற்றி மாறனின் சினிமா கரியரிலையே விரைவாக முடிக்கப்பட்டு வெளிவந்த படமென்றால் அது அசுரன் தான். அதேபோல குடும்பம் குடும்பமாக வெற்றி மாறனின் படத்தை அதிக அளவு கொண்டாடியதும் அசுரன் தான்.

அதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்திருக்கும் விடுதலை சீரிஸ் வெற்றிமாறனின் அச்சு அசல் அரசியலை பிரதிபலிக்கும் படம். தமிழில் இப்பேற்பட்ட சித்தாந்தம் பேசும் ஒரு பியூர் அரசியல் படம் வெளியாகவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

ஸ்பெஷல் கிரெடிட் டூ ஓர் இரவு 

இயக்குனர் வெற்றி மாறன் நுழைந்தால் அது நிச்சயம் பேசப்படும் கதையாக மாறும். வெற்றிமாறனின் பல படங்கள் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும். அந்த வரிசையில் ஆணவக் கொலையை மையமாக வைத்து வந்த பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில் வந்த ஓர் இரவு அதற்கு சிறந்த உதாரணம். உண்மையாக நடந்த கதையை தனது மாபெரும் படைப்பற்றலால் கண் முன் கொண்டு வந்திருப்பார்.  

தேசிய விருதுகள் பெற்ற பட்டியல்

1. சிறந்த இயக்குனர் - ஆடுகளம்

2. சிறந்த திரைக்கதை - ஆடுகளம்

3. சிறந்த தமிழ் திரைப்படம் - விசாரணை

4. சிறந்த தமிழ் திரைப்படம் - அசுரன்

வெற்றிமாறனை பற்றி மேலும் அறிய அவரே விகடனில் எழுதிய "மைல்ஸ் டூ கோ " எனும் தொடர் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாலு மஹிந்திரா உடனான அவருடைய உறவு சக உதவி இயக்குனர்களுடனான அவருடைய அறிமுகம் & நட்பு, ஆரம்பகால சினிமா கேரியரில் ஏற்பட்ட அனுபவம் ஆகியவற்றை விரிவாக படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.