GVPrakash: ‘எதுக்கு நடிக்க போறீங்க-னு ஜி.வி.பிரகாஷை கேட்டேன்.. அவர் சொன்ன பதில்..’: இயக்குநர் வெற்றிமாறன் ஷேரிங்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gvprakash: ‘எதுக்கு நடிக்க போறீங்க-னு ஜி.வி.பிரகாஷை கேட்டேன்.. அவர் சொன்ன பதில்..’: இயக்குநர் வெற்றிமாறன் ஷேரிங்ஸ்

GVPrakash: ‘எதுக்கு நடிக்க போறீங்க-னு ஜி.வி.பிரகாஷை கேட்டேன்.. அவர் சொன்ன பதில்..’: இயக்குநர் வெற்றிமாறன் ஷேரிங்ஸ்

Marimuthu M HT Tamil Published Feb 27, 2025 09:11 PM IST
Marimuthu M HT Tamil
Published Feb 27, 2025 09:11 PM IST

GVPrakash: நடிகர் ஜி.வி.பிரகாஷின் 25ஆவது படத்தின் ட்ரெய்லர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், ஜி.வி.பிரகாஷ் நடிக்க வந்த கதையைப் பகிர்ந்துகொண்டார்.

GVPrakash: ‘எதுக்கு நடிக்க போறீங்க-னு ஜி.வி.பிரகாஷை கேட்டேன்.. அவர் சொன்ன பதில்..’: இயக்குநர் வெற்றிமாறன் ஷேரிங்ஸ்
GVPrakash: ‘எதுக்கு நடிக்க போறீங்க-னு ஜி.வி.பிரகாஷை கேட்டேன்.. அவர் சொன்ன பதில்..’: இயக்குநர் வெற்றிமாறன் ஷேரிங்ஸ்

இந்நிலையில் கிங்ஸ்டன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. இப்படத்தினை கமல் பிரகாஷ் இயக்கியிருந்தார். இந்தப் படம் ஜி.வி.பிரகாஷின் 25ஆவது படம் என்பதால், இப்படத்திற்கு அவரே இசையமைத்து தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

அப்போது கிங்ஸ்டன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதன்பின், மேடையில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ‘’ஜி.வி.பிரகாஷுடைய முதல் தரப் பண்பு என்றால், எந்த நேரத்திலும் டயர்டு ஆக மாட்டார். நான் வந்து நைட் இரண்டு மணிக்கு போன் பண்ணி, ஒரு ஐடியா வந்திருக்கு. எங்கு இருக்கீங்க.. அப்படின்னு கேட்பேன். இது ரொம்ப நாளைக்கு முன்னாடி. இப்ப இல்லை. நான் இங்க பக்கத்தில் ஸ்டுடியோவில் தான் இருக்கேன். வாங்க அப்படின்பார். He is never avoided work. வேலைசெய்யணும்னா, இந்தப் படம் போயிட்டு இருக்கே, அந்தப் படம் போயிட்டு இருக்கேன்னு ஒரு நாள் கூட Clash வந்ததே இல்லை. எந்த இயக்குநர் எந்த நேரத்தில் மீட் பண்ணனும்னு சொன்னாலும், உடனடியாக அதுக்காக நேரம் ஒதுக்கிடுவார். அது ஒரு திறன். எப்போதுமே வேலை செய்றதுக்கு யோசிச்சதே கிடையாது.

’போர் அடிப்பதால் ஜி.வி.பிரகாஷ் நடிகர் ஆனார்’ - வெற்றிமாறன்

ஒரு பத்து வருஷம் இசையமைப்பாளராக இருந்திட்டு எனக்கு போர் அடிக்குது, அதனால் நான் நடிக்கப்போறேன்னு சொன்னார். அப்போது எதுக்கு நடிக்கப்போறீங்கன்னு கேட்டதில் நானும் ஒரு ஆளு தான். எதுக்கு, மியூஸிக் நல்லாத்தானே பண்ணிட்டு இருக்கீங்க.

சரியாக அவர் என்ன சொன்னார் என்றால், எனக்கு ஒரு ரூமுக்குள் இருந்து இருந்து போர் அடிக்குது. நான் வெளியே போக விரும்புறேன்னு சொன்னார். அதனால், நான் நடிகராக ஆசைப்படுகிறேன்னு சொன்னார். அதைக்கேட்டதும் நானும் பண்ணுங்கன்னு சொன்னேன்.

எனக்கு உள்ளுக்குள் என்னத்தோணுச்சு என்றால், ஒரு கம்போஸராக நல்லா வொர்க் பண்ணிட்டு இருக்கார். இப்ப எதுக்கு இவர் நடிக்கப்போறார்னு தான் அந்த நேரத்தில் தோணுச்சு. இவர் நடிக்க ஆரம்பிச்சபின், அவருடைய மியூஸிக்கின் ஆழம் அதிகமானது. அதாவது, ஒரு நடிகர் ஆனபின், அந்த அனுபவத்தினால் இன்னும் நல்ல கம்போஸராக மாறிட்டார். அப்படி ஒவ்வொரு வேலையையும் தன்னை டெவலப் செய்ய எப்போதும் முயற்சிக்கும் ஒரு ஆள்.

'கடல் சார்ந்த ஒரு ஃபேண்டஸி படம் பண்றோம்னு சொன்னார்’: வெற்றிமாறன்

கத்துக்கிறதுக்கு ஓபனாக இருக்கார். கிங்ஸ்டன் படத்தின் ட்ரெய்லர் முதல் பாடல்கள் வரைக்கும் ஒரு நடிகராக தன்னைத்தானே மேம்படுத்தி இருக்கிறார். கேமராவுக்கு முன் எவ்வளவு பணிவாக இருக்கார்னு தெரியுது. முதலில் கடல் சார்ந்த ஒரு ஃபேண்டஸி படம் பண்றோம்னு என்னிடம் சொன்னார்.

அந்த எக்ஸைட்மென்ட் வந்து எல்லாத்திலும் அவர்கிட்ட இருக்கு. அப்படிதான் அவர் படம் பண்ணுறார். நான் அவங்க செட்டுக்குப் போனேன். ஏனென்றால், நானும் அந்த மாதிரி ஒரு பண்றதாக இருந்தேன். நேரில் போய் அந்த செட்டை பார்த்ததும் ஆச்சரியப்பட்டுட்டேன். ஹைட்ராலிக் எப்படி வொர்க் ஆகுது, எப்படி அலை வருது, இதெல்லாம் பார்த்தேன்.

'நான் எதிர்பார்த்ததில் 10 விழுக்காடு பணத்தில் செட் போட்டிருந்தாங்க’: வெற்றிமாறன்

எனக்கு மைண்டில் ஒரு பட்ஜெட் கால்குலேஷன் இருந்தது. நான் எதிர்பார்த்ததில் 10 விழுக்காடு பணத்தில் செட் போட்டிருந்தாங்க. எக்ஸ்ட்ரா ஆர்டினரி வொர்க். இவ்வளவு பெரிய வொர்க்கை, எப்படி கொண்டுவந்தாங்கன்னே தெரியல. நான் இரண்டு, மூன்று தடவை கேட்டேன். இது தான் செட் பட்ஜெட்டான்னு கேட்டேன். அந்த செட்டில் எல்லா நடிகர்களும் சொன்னமாதிரி நடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்.

ஏனென்றால் நாம் மேல ஏறி போறதுக்குள்ளவே, ரொம்ப வழுக்கிறமாதிரி இருந்தது. அதில் மழையைப் போட்டுருக்காங்க. அப்படி கஷ்டப்பட்டால் தான் அந்த ரிசல்ட் இருக்கும் என்பதால் அது பரவாயில்லை''என சொல்லி முடித்தார், இயக்குநர் வெற்றிமாறன்.