தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Premgi Amaren: புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே.. பிரேம்ஜிக்கு டும் டும் டும் - பொண்ணு பேரு என்ன தெரியுமா?

Premgi Amaren: புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே.. பிரேம்ஜிக்கு டும் டும் டும் - பொண்ணு பேரு என்ன தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 08, 2024 09:36 PM IST

Premgi Amaren: இசைக்கலைஞரும், நடிகருமான பிரேம்ஜிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது - பிரேம்ஜிக்கு டும் டும் டும்

Premgi Amaren: புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே.. பிரேம்ஜிக்கு டும் டும் டும்.. வைரல் ஆகும் போட்டோ!
Premgi Amaren: புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே.. பிரேம்ஜிக்கு டும் டும் டும்.. வைரல் ஆகும் போட்டோ!

ட்ரெண்டிங் செய்திகள்

சினிமாவில் நுழைந்தது எப்படி?

பிரபல இயக்குநரும், இசைக்கலைஞருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி. இசையமைப்பதில் முதன்மையான ஆர்வம் கொண்ட இவர், திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் அவரது உறவினர் யுவன் ஷங்கர் ராஜாவிடம், உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், பின்னணிப் பாடகராக மாறினார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பெரும்பான்மையான ராப் பாடல்களில் பிரேம்ஜி பாடியிருக்கிறார். அதே போல அவர் இசையமைப்பில் சிலவற்றை ஒலிப்பதிவு ஆல்பங்களுக்காக ரீமிக்ஸூம் செய்திருக்கிறார். 

2006 ஆம் ஆண்டில், சிலம்பரசனின் வல்லவன் படத்தில் கதாநாயகியின் தோழனாக நடித்து நடிகராக அறிமுகமானார், அதைத் தொடர்ந்து அவர் தனது சகோதரர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 (2007) இல் சீனுவாக நடித்தார். இந்த திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய கோடைகால வெற்றிப்படமாக மாறியது. பிரேம்ஜியையும் நகைச்சுவை நடிகராக நிலைநிறுத்தியது.

வெங்கட்டின் அடுத்த படமான சரோஜாவிலும் தனது சகோதரருடன் இணைந்தார் பிரேம் ஜி. தொடர்ந்து, கோவா, மங்காத்தா, சேட்டை (2013) உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதனைதொடர்ந்து, திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரேம்ஜி, நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல், பேச்சுலராகவே இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை அண்மையில் உறுதிபடுத்திய அவரது சகோதரர் வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

வெங்கட் பிரபு அறிக்கை: 

அந்த அறிக்கையில், “  எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பன சுந்தரியை இப்போ யார் வெச்சிருக்கா!" இதை எல்லாவற்றையும் விட, பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும். வரும் 9 ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்று நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம் ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்ந்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்.

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலாவுகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இவ்லை. திருமணம் முடிந்தடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி, அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரும் சந்திப்போம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்