Ajith Kumar: 'அஜித் ஒரு அழகன், பேரழகன், ஆசை நாயகன்னு மக்களுக்கு தெரிய வைக்க நெனச்சேன்'- இயக்குநர் வசந்த்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: 'அஜித் ஒரு அழகன், பேரழகன், ஆசை நாயகன்னு மக்களுக்கு தெரிய வைக்க நெனச்சேன்'- இயக்குநர் வசந்த்

Ajith Kumar: 'அஜித் ஒரு அழகன், பேரழகன், ஆசை நாயகன்னு மக்களுக்கு தெரிய வைக்க நெனச்சேன்'- இயக்குநர் வசந்த்

Malavica Natarajan HT Tamil
Published Feb 09, 2025 06:30 AM IST

Ajith Kumar: ஆசை படத்தில் அஜித்தை கதாநாயகனாக தேர்வு செய்த போது அவரை ஒரு அழகன், பேரழகன், ஆசை நாயகன்னு மக்களுக்கு தெரிய வைக்க நினைத்ததாக அப்படத்தின் இயக்குநர் வசந்த் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Ajith Kumar: 'அஜித் ஒரு அழகன், பேரழகன், ஆசை நாயகன்னு மக்களுக்கு தெரிய வைக்க நெனச்சேன்'- இயக்குநர் வசந்த்
Ajith Kumar: 'அஜித் ஒரு அழகன், பேரழகன், ஆசை நாயகன்னு மக்களுக்கு தெரிய வைக்க நெனச்சேன்'- இயக்குநர் வசந்த்

இந்நிலையில், இயக்குநர் வசந்த், தனது ஆசை படத்திற்கு அஜித்தை ஏன் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார் என பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு சில மாதம் முன் பேட்டி அளித்துள்ளார்.

அஜித் அழகன்னு சொல்ல நெனச்சேன்

அந்தப் பேட்டியில், "அரவிந்த் சாமி மாதிரி ஒருத்தர கொண்டு வரணும்ன்னு நெனச்சது தான் அஜித். என்னோட மைண்ட்ல அஜித் ஒரு அழகன்னு பதிஞ்சது. அவரு இப்போவும் ரொம்ப அழகு. அதுனால நான் அழகன், பேரழகன்னு நெனைக்குறத ஆசை படத்துல மக்களும் நெனைக்கணும். அதுக்காக நான் படத்துல முதல் சீனே வச்சிருப்பேன்.

அதுல 3 குழந்தைங்க குளத்துல குளிச்சிட்டு இருப்பாங்க. அங்க அஜித்தும் குளிச்சிட்டு வருவாரு. அப்போ அங்க இருக்க ஒரு குழந்த என்ன கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேக்கும். அதுக்கு அஜித் ஏன்னு கேப்பாரு. அப்போ அந்த குழந்த சொல்லும் ஏன்னா நீ கொஞ்சூண்டு அழகா இருக்கன்னு. அந்த வார்த்தைய நான் மக்கள் காதுல போடணும்ன்னு நெனச்சேன். அதுனால இதுதான் படத்தோட முதல் சீன்.

ஆசை நாயகன்

அதுனால படத்துல அஜித்த பாக்கும் போது அவர் அழகன் தான்னு ஒரு மைண்ட் செட்டும் கூடவே வந்திடும். இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சு பண்ணேன். ஏன்னா அஜித்த எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் அழகா இருந்தாரு அத நான் சொன்னேன். அந்தப் படம் 285 நாள் தியேட்டர்ல ஓடுது. அப்போ அஜித்துக்கு ஆசை நாயகன்னே பேர் வந்தது.

அஜித்த நடிக்க வைக்க யோசிச்சேன்

இந்த படத்துக்கு கதாநாயகனா நடிக்க அஜித்துக்கு முன்னாடி 2, 3 பேர யோசிச்சேன். சொல்லப் போன அஜித்தையே படத்துல நடிக்க வைக்க யோசிச்சேன். நான் அவர ஒரு வேட்டி விளம்பரத்துல தான் பாக்குறேன். அப்போ ரொம்ப ஒல்லியா இருப்பாரு. ஆனாலும் அவர்ட்ட என்னமோ இரு்ககு. எனக்கு அவர பிடிச்சிருக்கு. அவரு என் மனசவிட்டும் போக மாட்டிங்குறாரு. ஆனா என் கதைக்கு ஏத்த மாதிரி இல்லாம ஒல்லியாவும் இருக்காரு. என்னால முடிவு எடுக்கவே முடியல. யோசிச்சுட்டே இருக்கேன்.

அஜித்கிட்ட தகுதி இருந்தது

அஜித்கிட்ட அடுத்தவங்கள சந்தோஷமா வச்சிக்குற பழக்கம் ஒரு தகுதியாவே இருந்தது. அவரு இந்த அளவுக்கு சினிமாவுல உச்சத்துக்கு போவாருன்னு அப்பவே தெரியும். நான் அந்தப் படத்துல அவர எப்படி வச்சிருந்தேன்னா, அந்த டைம்ல அரவிந்த் சாமி தான் பெரிய ஹீரோ. அவர மாதிரி தான் எல்லா பொண்ணுங்களும் மாப்பிள்ள கேப்பாங்க. அந்த மாதிரி ஒரு ஆள தேடிட்டே இருக்கேன்.

பார்த்த உடனே பிடிச்சிருச்சு

அதே மாதிரி தான் மேஜர் மாதவன் கேரக்டருக்கும் ஆள் தேடுனேன். நம்ம எல்லார்குள்ளவும் தேவனும் இருக்கான். அசுரனும் இருக்கான். யாருமே 24X7 வில்லனா இருக்குறது இல்ல. அப்படி ஒரு கேரக்டர்ல நடிக்க ஆள் தேடிட்டே இருக்கேன். எனக்கு திருப்தியான ஆளே கிடைக்கல. அப்போ பிரகாஷ் ராஜ நான் டூயட் படத்துல பாக்குறேன் .அப்போ அவர பாத்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு.அவர்கிட்ட நான் சினிமாவுல தொடர்ந்து நடிப்பீங்களா, உங்க சொந்த குரல்லயே பேசுவீங்களான்னு எல்லாம் கேட்ருக்கேன். அதெல்லாம் பாத்தா வேடிக்கையா இருக்கு" என தன்னுள் இருந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

ஆசை படம்

ஆசை படம் 1995ம் ஆண்டு வெளியான ரொமான்டிக் த்ரில்லர் திரைப்படம். இந்தப் படத்தில் அஜித் குமார், சுவலட்சுமி, பிரகாஷ் ராஜ், ரோஹினி என பலர் நடித்திருந்தனர். தேவா இசையில் பாடல்கள் எல்லாம் செம ஹிட் அடித்தன. படத்தின் கதையும் வித்தியாசமாக இருந்ததால் மக்கள் அனைவரும் படத்தை கொண்டாடினர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.