Director Suseendiran: 'இளையராஜா சார் பாடி கொடுத்தும் வேணாம்ன்னு சொன்னேன்.. ஆனாலும் பாட்டு ஹிட்'- டைரக்டர் சிசீந்திரன்
Director Suseendiran: ஆதலால் காதல் செய்வீர் படத்தின் கிளைமேக்ஸ் பாடலை இளையராஜா பாடிக் கொடுத்தும் அதை வேண்டாம் என கூறியதாக இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Director Suseendiran: இயக்குநர் சுசீந்திரன், பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள 2கே லவ் ஸ்டோரி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக கலாட்டா யூடியூப் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆதலால் காதல் செய்வீர் படம் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார்.
நம்பிக்கை வந்துடுச்சு
அந்தப் பேட்டியில், "நான் வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அப்புறம் படம் ரிலீஸ் ஆனா தியேட்டருக்கு போக மாட்டேன். அந்தப் படம் நல்லா ஓடும். மக்கள் அத ஏத்துப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கும். ஆனா, அந்த தைரியம் கொஞ்ச நாள் இல்லாம இருந்தது. இப்போ 2கே லவ் ஸ்டோரி படம் அந்த நம்பிக்கைய எனக்கு தரும். இந்த படம் ஹிட் அடிக்கும். மக்கள் இதை ஏத்துப்பாங்கங்குற நம்பிக்கை எனக்கு வந்திடுச்சு.
பேனா, பேப்பர் காப்பாத்துச்சு
என்னோட மன உளைச்சல், உளவியல் பிரச்சனையில இருந்து என்ன வெளிய கூட்டிட்டு வர உதவியது பேனாவும் பேப்பரும் மட்டும் தான். 10 வருஷமா எழுதிட்டே இருக்கேன். வெண்ணிலா கபடிக் குழு படம் வந்து 16 வருஷம் ஆகப் போகுது. இந்த 16 வருஷத்துல 20 படம் பண்ண டைரக்டர் நான் மட்டும் தான். நான் நேர்மையா உழைக்குறேன். வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். நான் மறுபடியும் ஜெயிப்பேன், மறுபடியும் தோல்விய சந்திப்பேன். நான் எவ்ளோ சம்பாதிச்சாலும் லைஃப் ஸ்டைல் மாறாம வாழறது எப்படின்னு நான் கத்துகிட்டேன்.
ஆதலால் காதல் செய்வீர்
நான் ஆதலால் காதல் செய்வீர் படம் எழுதும் போது, அவங்க ரெண்டு பேரும் காதலிச்சுட்டாங்க, பிரிஞ்சிட்டாங்க, கருவ கலைச்சுட்டா அதுக்கு அப்புறம் படத்துல என்ன கொண்டு போறதுன்னு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன். என்ன என்னமோ கதை எல்லாம் எழுதி பாக்குறேன். எதுவும் செட் ஆகல. ஆனா, இந்தக் கதையே ஓகேன்னு சொல்றாங்க.
எந்த தாக்கமும் இல்லாம இந்த கதைய எழுதுனேனா இது சாதாரண படம் ஆகிடும்ன்னு யோசிட்டே இருந்தேன். அப்புறம் கொஞ்ச நாள் இதபத்தி யோசிக்காம இருந்தப்போ தான், நான் ஆசிரமத்துக்கு எல்லாம் சாப்பாடு கொண்டு போய் கொடுப்பேன். அப்போ, ஒரு குழந்த அழுதுட்டு இருக்கு. அதோட அம்மா உள்ள இருந்து ஓடிவந்து குழந்தைய தூக்கி கொஞ்சுறாங்க. இத பாத்த உடனே எனக்கு சீன் வந்துடுச்சு. அழுகுற குழந்தைக்கு அம்மா இல்லன்னா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு கிளைமேக்ஸ் எழுதுறேன்.
ஒரு பாட்டுக்காக நா.முத்துகுமார் கிட்ட போனேன்
இந்த க்ளைமேக்ஸ சொல்ற மாதிரி பாட்டு எழுத ட்ரை பண்றேன். யுக பாரதி சார்கிட்ட கதைய சொல்றேன். அவருக்கு எனக்கும் ஒரு சில சீன் ஒத்துப் போகல. அதுக்கு அப்புறம், நான் இந்த பாட்டுக்காக நா.முத்துக்குமார் சார்கிட்ட போறேன். அவரும் எழுதி கொடுத்துட்டாரு. அதுக்கு அப்புறம் தான், யுவன்கிட்ட போய் இந்த பாட்ட குடுக்குறேன். யுவனும் பாடிட்டாரு. இருந்தாலும், இந்த பாட்டுக்கு இளையராஜா வாய்ஸ் இருந்தா நல்லா இருக்குமேன்னு யோசிச்சு அவரையும் பாட வைக்குறேன்.
யுவன் குரல்ல வலி இருந்தது
ஆனா, இளையராஜா அந்த மியூசிக்குக்கு ஏத்த மாதிரி பாடி கொடுத்தாரு. யுவன் பாடுனப்போ, யாரையோ நெனச்சு அழுதுட்டே இந்த பாட்ட பாடுனாரு. அவரோட குரல்ல ஒரு வலி இருந்தது. அவர் கண்ணுல கண்ணீர் வராம யுவன் இந்த பாட்ட பாடிருந்தா நிச்சயம் நான் இளையராஜா சார் பாடுன பாட்ட தான் படத்துக்கு வச்சிருப்பேன். எனக்கு யுவன் வாய்ஸ் தான் பிடிச்சது.
இருந்தாலும் டீம்கிட்ட கேட்டபோது, பாதி பேருக்கு யுவன் வாய்ஸ் பிடிச்சிருக்கு. பாதி பேருக்கு ராஜா சார் வாய்ஸ் பிடிச்சிருக்கு. அப்புறம் நான் யுவன்கிட்ட உங்களோட வாய்ஸ் யூஸ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னா அப்பாவ நெனச்சு பயந்தாரு. என்னால அப்பாட்ட எல்லாம் சொல்ல முடியாது. நீங்களே சொல்லிடுங்கன்னு சொல்லிட்டாரு. அதுக்கு அப்புறம் மேனேஜர் எல்லாம் வச்சு நாங்க சொன்னோம். இந்த பாட்டு பயங்கர ஹிட்.
எல்லாமே எதார்த்தமா நடந்தது
அந்த சின்ன பையன் படத்துல நடிக்க ரொம்ப கஷ்டப்படுவான்னு 10 நாள் முன்னாடியே எல்லாம் ஷூட்டிங் கூட்டிட்டு போய் பிராக்டீஸ் கொடுத்தோம். அப்புறம் அந்த கிளைமேக்ஸ் எல்லாம். அவனா பண்ணுனது தான். தூரத்துல கேமரா வச்சுட்டு அவனுக்கு ஜூம் மட்டும் பண்ணிட்டோம். அவன் பந்த தொரத்திட்டு போய் அப்படியே அழற ஷாட் கூட எதார்த்தமா நடந்தது தான். அவன் கீழ விழுந்து அழ ஆரம்பிச்சதும் என்னோட அசிஸ்டன்ட் ஒருத்தன் குழந்தைய தூக்கிட்டான். அப்புறம் சிஜி எல்லாம் பண்ணி, அந்த கொழந்த அழற சீனை 2 செகண்ட்ல இருந்து 10 செகண்ட்ட மாத்தி வச்சோம். பேக்கிரவுண்ட்ல ஆராரோ பாட்டு ஓடிட்டு இருக்கும். இந்த பாட்டு இப்போ பாத்தாலும் பலருக்கும் கண்ணுல தண்ணி வரும்." என ஆதலால் காதல் செய்வீர் படம் குறித்து நெகிழ்ந்து பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்