Director Suseendiran: ‘தோல்வி எப்படி இருக்கும்ன்னு பாக்க ஆசப்பட்டேன்.. ஆனா இத்தனை வரும்ன்னு நெனைக்கல’- வருந்திய டைரக்டர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Suseendiran: ‘தோல்வி எப்படி இருக்கும்ன்னு பாக்க ஆசப்பட்டேன்.. ஆனா இத்தனை வரும்ன்னு நெனைக்கல’- வருந்திய டைரக்டர்

Director Suseendiran: ‘தோல்வி எப்படி இருக்கும்ன்னு பாக்க ஆசப்பட்டேன்.. ஆனா இத்தனை வரும்ன்னு நெனைக்கல’- வருந்திய டைரக்டர்

Malavica Natarajan HT Tamil
Published Feb 07, 2025 06:24 PM IST

Director Suseendiran: தொடர் வெற்றிப் படங்களா இயக்கிட்டு இருந்தப்போ, ஒரு தோல்வி எப்படி இருக்கும்ன்னு பாக்க ஆசைப்பட்டேன் என இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Director Suseendiran: ‘தோல்வி எப்படி இருக்கும்ன்னு பாக்க ஆசப்பட்டேன்.. ஆனா இத்தனை வரும்ன்னு நெனைக்கல’- வருந்திய டைரக்டர்
Director Suseendiran: ‘தோல்வி எப்படி இருக்கும்ன்னு பாக்க ஆசப்பட்டேன்.. ஆனா இத்தனை வரும்ன்னு நெனைக்கல’- வருந்திய டைரக்டர்

புரொடியூசர் கிடைக்கல

அந்தப் பேட்டியில் "நான் வெண்ணிலா கபடிக்குழு படம் முடிச்சதுமே எழுதுன ஸ்கிரிப்ட்ன்னா அது அழகர் சாமியின் குதிரை தான். வெண்ணிலா கபடிக்குழு படம் ஹிட் ஆனாலும் எனக்கு ரெண்டாவது படத்துக்கு புரொடியூசர் கிடைக்கல. ஏன்னா நான் அப்பு குட்டி தான் ஹீரோன்னு தெளிவா இருந்தேன்.

அதுக்கு அப்புறம் தான் நான் கார்த்தி வச்சு படம் பண்ணுனேன். அந்த படம் ஹிட் ஆனதும் அழகர் சாமியின் குதிரை படத்துக்கு புரொடியூசர் கிடைச்சாங்க. அப்புறம் ஒரு பெரிய படம் ஒரு சின்னப் படம்ன்னு அடுத்தடுத்து வந்தது. எதுவும் நான் பிளான் பண்ணல. அதுவா அமைஞ்சது தான்.

தோல்வியடைய ஆசப்பட்டேன்

என்னைப் பொறுத்த வரை வெற்றிங்குறது போட்ட காச விட ஒரு ரூபா அதிகமா கிடைச்சாலும் அது வெற்றி தான். அழகர் சாமியின் குதிரை படம் முடிஞ்ச சமயத்துல நான் யோசிச்சிருக்கேன். ஒரு படம் தோல்வி அடைஞ்சா எப்படி இருக்கும்ன்னு. ஏதாவது ஒரு படத்துல தோல்வி அடையணும்ன்னு நெனச்சேன். ஆனா பத்து படம் தோல்வி படமா கொடுப்பேன்னு நான் எதிர்பாக்கல. நான் என்ன தான் என்னோட அடுத்தடுத்த வேலைய பாத்துட்டு போயிட்டு இருந்தாலும் அந்த தோல்வியோட வலி இருந்துட்டு தான் இருக்கும்.

என் ஹிட்டுக்கு காரணம் இதுதான்

என்னோட படம் எல்லாம் ஹிட் ஆனதுக்கு காரணம் நான் எதுக்காவும் காம்ரமைஸ் செய்ய மாட்டேன். எல்லா விஷயத்திலயும் பிடிவாதமா இருப்பேன். நாம நெனச்சத ஸ்கிரீன்ல கொண்டு வர போராடுனேன். ஆனா இந்த கடைசி பத்து வருஷத்துல என்கிட்ட இருந்த அந்த பிடிவாத குணம் என்ன விட்டு எனக்கே தெரியாம போயிடுச்சு. எல்லாத்தும் ஓகே சொல்ல ஆரம்பிச்சுட்டேன். அதுதான் என் தோல்விக்கு காரணம். நான் எப்போவும் ஜாலியா இருக்க ஆள். ஆனா அதுவும் எனக்கே தெரியாம போயிடுச்சு.

என்னை அடையாளப்படுத்துவாங்க

ஒரு இயக்குநரோ வெற்றி படைப்புல மட்டும் இல்ல. நாயகர்களையும், நடிகர்களையும் உருவாக்கி விடுறோம். அவங்களோட ஒவ்வொரு வெற்றியும் அவங்களுக்கான கைதட்டல்களும் என்னோட பேரை சொல்லும். நாளைக்கு நான் சினிமாவில இல்லன்னாலும் நான் உருவாக்கிவிட்ட விஷ்ணு விஷாலோ, சூரியோ, விஜய் சேதுபதியோ என் பேர் சொல்லும் போது அங்கு நான் ஜெயிக்கிறேன். அவங்க என்ன அடையாளப்படுத்திட்டே இருப்பாங்க.

16 வருஷத்துல 20 படம்

எந்த டைரக்டராவது 10 பிளாப் படத்த குடுத்துட்டு மறுபடியும் மறுபடியும் படம் பண்ண முடியுமா?. ஆனா என்னால அது முடியுதுன்னா ஆரம்பத்துல நாம கொடுத்த வெற்றி படங்கள் தான். இவன்கிட்ட ஒரு நல்ல கதை கிடச்சா கம்பேக் தர முடியும்ன்னு நெனக்குறாங்க. நானும் அதைத் தான் நெனக்குறேன்." என மிகவும் பாசிட்டிவ்வாக பேசினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.