Director Surya Prakash: வாம்மா மின்னல் காமெடி!மாரடைப்பால் இறந்த மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் - கதறி அழுத உறவினர்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Surya Prakash: வாம்மா மின்னல் காமெடி!மாரடைப்பால் இறந்த மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் - கதறி அழுத உறவினர்கள்

Director Surya Prakash: வாம்மா மின்னல் காமெடி!மாரடைப்பால் இறந்த மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் - கதறி அழுத உறவினர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 28, 2024 01:34 PM IST

சரத்குமாரை வைத்து புதிய படத்தை இயக்க இருந்த மாயி படப்புகழ் இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வாம்மா மின்னல் போன்ற இவரது பட காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சொந்த ஊரில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில்,அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.

மாரடைப்பால் இறந்த மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ்
மாரடைப்பால் இறந்த மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ்

சரத்குமார் இரங்கல்

எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சூர்ய பிரகாஷ் திரைப்பயணம்

கடந்த 1990ஆம் ஆண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த சூர்ய பிரகாஷ், பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதன் பின்னர் தனது 1996இல் ராஜ்கிரண், வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான மாணிக்கம் படத்தை இயக்கினார்.

இதைத்தொடர்ந்து 2000ஆவது ஆண்டில் சரத்குமாரை வைத்து மாயி படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து 2003இல் மீண்டும் சரத்குமாரை வைத்து திவான் என்ற படத்தை இயக்கினார். ஜீவன் நடித்த அதிபர், தெலுங்கில் ராஜசேகரை வைத்து பரத சிம்ஹா ரெட்டி என்ற தெலுங்கு படத்தையும் இயக்கியுள்ளார்.

சூர்ய பிரகாஷ் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி அருகே, எஸ்.வாடிப்பட்டியை சேர்ந்த விவசாயி முத்து அம்பலத்தேவர் மகன் ஆவார். இவக்கு இரண்டு அண்ணன் ஒரு அக்காள் மற்றும் வசந்தமலர் (50) என்ற மனைவியும் சோனா (25) என்ற மகளும் உள்ளனர்.

மாரடைப்பால் மரணம்

சரத்குமாரை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்த நிலையில், இயக்குநர் சூர்யுபிரகாசுக்கு மே 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த எஸ்.வாடிப்பட்டி கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதன் பின்னர் அவரது உடல், கிராம மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதியம் 2 மணியளவில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சூர்ய பிரகாஷ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சூர்ய பிரகாஷின் உடலை பார்த்த அவரது மனைவி, குடும்பத்தினர் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

சரத்குமாரின் நெங்கிய நண்பராக இருந்தவர் சூர்ய பிரகாஷ். அவரது இறப்பு குறித்து செய்தி கேள்விப்பட்டது உடனடியாக இரங்கல் தெரிவித்து, அவரது உடலை சொந்த கிராமம் கொண்டு செல்ல அனைத்து உதவிகளும் சரத்குமார் செய்துள்ளார். தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் சரத்குமார், நாடு திரும்பியதும் சூர்ய பிரகாஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என தெரிகிறது.

கிடப்பில் இருக்கும் வருசநாடு

2010இல் புதுமுகங்கள் குமரன், சிருஷ்டி டாங்கே ஆகியோரை வைத்து வருசநாடு என்ற படத்தை உருவாக்கினார் சூர்ய பிரகாஷ். கிராமத்து பின்னணியில் காதல் படமாக அமைந்திருக்கும் வருசநாடு ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது. இதேபோல் பிரபு வைத்து பெண் ஒன்ற கண்டேன் என்ற படத்தை இயக்கியிருந்தார் சூர்ய பிரகாஷ். இந்த படமும் ரிலீசாகாமல் உள்ளது

சூப்பர் ஹிட் காமெடி

சூர்ய பிரகாஷ் படங்களின் காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாயி படத்தில் வா மா மின்னல், திவான் படத்தில் சிக்கன் 65 காமெடி, மாணிக்கம் படத்தில் பஸ் காமெடி போன்றவை பலராலும் ரசிக்கப்பட்ட காமெடியாக இருந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.