நமீதாவ மறக்கவே முடியாது.. ஐயோ.. அவங்களால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. சுந்தர்.சி ஓபன்ஸ் அப்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நமீதாவ மறக்கவே முடியாது.. ஐயோ.. அவங்களால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. சுந்தர்.சி ஓபன்ஸ் அப்

நமீதாவ மறக்கவே முடியாது.. ஐயோ.. அவங்களால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. சுந்தர்.சி ஓபன்ஸ் அப்

Malavica Natarajan HT Tamil
Dec 10, 2024 12:00 PM IST

இயக்குநர் சுந்தர்.சி தான் நடிகனாக மாறிய போது சந்தித்த சவால்களையும் எதை எப்படி சமாளித்தார் என்பதையும் மிகவும் நகைச்சுவையாக பேசி இருக்கிறார்.

நமீதாவ மறக்கவே முடியாது.. ஐயோ.. அவங்களால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. சுந்தர்.சி ஓபன்ஸ் அப்
நமீதாவ மறக்கவே முடியாது.. ஐயோ.. அவங்களால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. சுந்தர்.சி ஓபன்ஸ் அப்

நமீதாவை மறக்க முடியாது..

அந்தப் பேட்டியில், "என் கூட நடிச்ச ஹீரோயின்ல பிடிச்ச நடிகைன்னா சிநேகா தான். ஆனா மறக்கவே முடியாத நடிகைன்னா அது நமீதா தான். எனக்கு டேன்ஸ் ஆடவே தெரியாது. ஆனா என்ன எல்லா படத்துலயும் டேன்ஸ் ஆட வைப்பாங்க. இதுல என்ன ஆகும்ன்னா எல்லா டான்ஸ் மாஸ்டரும் எனக்கு தவறாம கொடுக்குற ஸ்டெப் என்னென்னா ஹீரோயின தூக்கி வச்சு ஆடுற ஸ்டெப் தான்.

மத்த ஹீரோயின்னா பரவாயில்ல. இங்க நமீதாவ தோள்ல தூக்கி வச்சிட்டு ஆடணும்னா கொஞ்சம் கஷ்டம். நமீதாவ தூக்கி வச்சி ஆடணும்ங்குறதுக்காகவே நான் நிறைய பிராக்டீஸ் பண்ணிட்டு போவேன். அதுனாலயே என்னால நமீதாவ மறக்க முடியாது.

நான் வேற டைரக்டர் எடுக்குற படத்துல நடிக்குறத நிறுத்தனதுக்கு காரணமும் இந்த டான்ஸ் தான். எனக்கு சுத்தமா டேன்ஸ் வரவே வராது.

மலையாள ஹீரோ மாதிரி ட்ரை பண்ணேன்

என்னோட முதல் படத்துக்கு நான் தான் புரொடியூசர். டைரக்டரும் என்னோட அசிஸ்டன்ட் சுராஜ் தான். அதுனால அவரு என்ன பண்ணுனாருன்னா ஹீரோயின் டேன்ஸ் ஆடும் போது நாம மலையாள படத்துல வர மாதிரி வேட்டிய தூக்கிட்டு அங்கயும் இங்கயும் நடந்தா போதும். ஏதோ நினைக்குறேன் பாட்டுல கூட அப்படி தான் பண்ணிருப்பேன்.

ஆனா இது அடுத்தடுத்த படத்துல எல்லாம் மாறுது. என்கிட்ட டைரக்டர்ஸ் எல்லாம் வந்து ஹீரோயின்க்கு டான்ஸ் ஆட வரல. அதனால நீங்க தான் டான்ஸ் ஆடி சமாளிக்கனும்னு சொல்றாங்க. அந்த அளவு நிலமை வந்ததால நான் எல்லாத்தையும் சமாளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுட்டேன்.

மணிவண்ணன் சார்கிட்ட நான் அசிஸ்டன்ட்டா வேலை செய்யும் போது நான் டிஸ்கஷன்க்கு எல்லாம் போவேன். அப்போ நாங்க எல்லாம் கிரிக்கெட் விளையாடிட்டே கதை எல்லாம் பேசுவோம். அப்போ அங்க வந்த புது அசிஸ்டன்ட் டைரக்டர் ஒருத்தரு நாங்க விளையாடுறத சீரியஸா பாக்குறாரு.

மணிவண்ணன் சார் சொன்ன அந்த வார்த்தை

என்னடா டிஸ்கஷன்னு கூட்டிட்டு வந்துட்டு விளையாடுறீங்கன்னு கோவத்துல இருந்தாரு. அப்போ அவர விளையாடுறதுக்கு மணிவண்ணன் சார் கூப்டாரு. அவரு இல்ல சார் எனக்கு கிரிக்கெட் எல்லாம் விளையாடத் தெரியாதுன்னு சொன்னாரு.

உடனே மணிவண்ணன் சார் கொஞ்சம் கூட யோசிக்காம அப்ப என்ன டைரக்ஷன் உங்க குலத் தொழிலா அப்டின்னு கேட்டுட்டாரு. வந்து 4 பால பொருக்கி போட்டுட்டு விளையாட கத்துக்கோன்னு சொன்னாறு. இதுதான் என் வாழ்க்கையில் நான் நிறைய கத்துக்க பெரிய பாடமா அமைந்தது.

எல்லாத்துக்கும் ஓகே தான்

நான் சினிமாக்குள்ள டைரக்டரா வந்தேன். அப்புறம் நடிக்க கூப்டாங்க போனேன். நானே படத்த புரொடியூஸ் பண்ண வேண்டிய நிலம வந்தது அதையும் பண்ணேன். பாட கூப்டாங்க, சரி போய் பாடுவோம்ன்னு கெளம்பிட்டேன். இது எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் மணிவண்ணன் சார் சொன்ன அந்த வார்த்தை தான்" எனக் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.