Director Sundar C: ‘100/100 பாசிட்டிவான விமர்சனம்தான்.. 2 நாளா அழுதுட்டே இருந்தேன்.. குஷ்புதான்’ - சுந்தர் சி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Sundar C: ‘100/100 பாசிட்டிவான விமர்சனம்தான்.. 2 நாளா அழுதுட்டே இருந்தேன்.. குஷ்புதான்’ - சுந்தர் சி

Director Sundar C: ‘100/100 பாசிட்டிவான விமர்சனம்தான்.. 2 நாளா அழுதுட்டே இருந்தேன்.. குஷ்புதான்’ - சுந்தர் சி

Kalyani Pandiyan S HT Tamil
Jan 15, 2025 08:16 AM IST

கடந்த இரண்டு நாட்களாக நான் கண்ணீரோடுதான் இருந்தேன். இந்த வரவேற்பு என்னை அப்படி ஆக்கிவிட்டது. ஒரு படத்திற்கு நூற்றுக்கு நூறு பாசிட்டிவாக விமர்சனம் வந்தது என்றால், நான் மதகஜ ராஜா திரைப்படம் தான் என்று நான் கூறுவேன். - சுந்தர் சி எமோஷனல்!

Director Sundar C: ‘100/100 பாசிட்டிவான விமர்சனம்தான்.. 2 நாளா அழுதுட்டே இருந்தேன்.. குஷ்புதான்’ - சுந்தர் சி
Director Sundar C: ‘100/100 பாசிட்டிவான விமர்சனம்தான்.. 2 நாளா அழுதுட்டே இருந்தேன்.. குஷ்புதான்’ - சுந்தர் சி

வாழ்க்கை கொடுத்தார்கள்

அப்போது அவர் பேசும் போது, ‘கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்னதாக இதே பொங்கல் நாளில் ரசிகர்கள்.... இல்லை என்னுடைய தெய்வங்கள் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் மூலமாக எனக்கு வாழ்க்கை கொடுத்தார்கள். 30 வருடங்களாக அவர்களுடைய ஆசீர்வாதத்தாலும் தயவாலும், என்னுடைய வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது.

தற்போது இந்த மதகஜராஜா திரைப்படத்தின் மூலமாக மீண்டும் மிகப்பெரிய வாழ்க்கையை அவர்கள் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எல்லோரும் 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது என்று கூறுகிறார்கள்; ஆனால் என்னை பொருத்தவரை, ஒரு கும்பமேளா தாண்டி வெளியாகி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். போன கும்பமேளாவுக்கு வர வேண்டிய திரைப்படம் இந்த கும்பமேளாவுக்கு வந்திருக்கிறது.

சிறப்பான பொங்கலாக

கடந்த இரண்டு நாட்களாக நான் கண்ணீரோடுதான் இருந்தேன். இந்த வரவேற்பு என்னை அப்படி ஆக்கிவிட்டது. ஒரு படத்திற்கு நூற்றுக்கு நூறு பாசிட்டிவாக விமர்சனம் வந்தது என்றால், நான் மதகஜ ராஜா திரைப்படம் தான் என்று நான் கூறுவேன். எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த பொங்கல் சிறப்பான பொங்கலாக அமைய, மதகஜராஜா ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. இந்த பொங்கலன்று மதகஜா ராஜா படம் மட்டுமல்லாமல் உடன் ரிலீஸ் ஆயிருக்கும் மற்றப்படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். பாக்ஸ் ஆஃபிஸ் விபரங்களை பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. என்னைப் பொருத்தவரை ரசிகர்கள் சந்தோஷமாக படம் பார்த்து சிரிக்க வேண்டும் அவ்வளவுதான்’ என்று பேசினார்.

 

ராஜா ராஜா திரைப்படத்தை உண்மையில் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே நாங்கள் பிரீ செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் நான் படத்தை எடுக்கும்போது இந்த திரைப்படம் ஒரு பொங்கல் திரைப்படமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன் இந்த பொங்கலுக்கு தொடர்ச்சியாக 10 நாட்கள் விடுமுறை வந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

ஒரு நான்கு நண்பர்கள் கல்யாணத்திற்காக கிராமத்திற்கு செல்கிறார்கள் என்ற கதையின் அடித்தளம் இந்த திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீசாக நன்றாக இருக்கும் என்று என்னை நினைக்க வைத்தது. ஜனவரி ஒன்றாம் தேதி தான் படத்தை உங்களுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம் இதற்குக் கூட எந்த படம் வந்தாலும் அந்த படத்துடன் மோத நான் தயாராக இருந்தேன் அந்த ரிஸ்கை நான் எடுக்க முடிவு செய்து விட்டேன். ரசிகர்களுடைய கருணையினால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.