எல்லாம் பொய்.. அப்படி ஒரு படம் எனக்கு தேவையே இல்ல.. புரொடியூசர் எல்லாம் நொந்து போறாங்க.. சுந்தர்.சி கறார்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எல்லாம் பொய்.. அப்படி ஒரு படம் எனக்கு தேவையே இல்ல.. புரொடியூசர் எல்லாம் நொந்து போறாங்க.. சுந்தர்.சி கறார்..

எல்லாம் பொய்.. அப்படி ஒரு படம் எனக்கு தேவையே இல்ல.. புரொடியூசர் எல்லாம் நொந்து போறாங்க.. சுந்தர்.சி கறார்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 28, 2025 05:35 PM IST

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸிற்கு என ஒரு மார்க்கெட் வேல்யூ உள்ளது. தற்போது காட்டப்படும் 100 கோடி, 500 கோடி வசூல் கணக்கு எல்லாம் பொய் என நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி கூறியுள்ளார்.

எல்லாம் பொய்.. அப்படி ஒரு படம் எனக்கு தேவையே இல்ல.. புரொடியூசர் எல்லாம் நொந்து போறாங்க.. சுந்தர்.சி கறார்..
எல்லாம் பொய்.. அப்படி ஒரு படம் எனக்கு தேவையே இல்ல.. புரொடியூசர் எல்லாம் நொந்து போறாங்க.. சுந்தர்.சி கறார்..

அப்போது, தொகுப்பாளர் கோபியிடம் இன்றைய தமிழ் சினிமாவின் போக்கு குறித்தும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் கணக்கிடும் முறை குறித்தும் அதன் பின் உள்ள ரகசிய காரணங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அப்படி ஒரு படம் தேவையில்ல

தமிழ் சினிமாவுல இருக்க கொடுமையான விஷயம் என்னென்னா ஹீரோ ஓகே சொன்னா தான் படமே ஓகே ஆகும். எனக்கு ஒரு ஹீரோகிட்ட போய் கதை சொல்லி அவரு ஓகே சொன்னா தான் நான் டைரக்டரா ஆகணும்ன்னா அப்படி ஒரு படம் எனக்கு தேவை இல்ல அப்படிங்குறது தான் என் தாழ்மையான கருத்து. என்ன பொறுத்த வரைக்கும் நான் ரஜினி சார் கூட வேலை செஞ்ச போதும் சரி, கமல் சாரிடம் வேலை செஞ்ச போதும் சரி அவங்க ரெண்டு பேரும் சொன்ன ஒரே வார்த்தை நாம சேர்ந்து ஒரு படம் பண்றோம். அப்படிங்குறது தான். அதுக்கு அப்புறம் தான் அது என்ன மாதிரியான படம் எடுக்கப் போறோம்ங்குறது எல்லாம்.

ஹீரோ ஓகே சொன்னா படம் ஓகே

ஆனா, இப்போ சில வருஷமா என்ன ஆகிருச்சுன்னா ஒரு ஹீரோ போய் ஓகே பண்ணா அந்த ப்ராஜெக்ட் ஓகே. இப்போ அவர்கிட்ட கதை சொல்றேன். அது பிடிச்சதுன்னா ஓகே. இல்லைன்னா பிராஜெக்ட் ஓகே இல்ல. எனக்கு என்ன கோவம்ன்னா நான் இத்தனை வருஷமா படம் பண்ணி சக்ஸஸ் கொடுத்ததுக்கு அப்புறமும் என்னோட திறமைய ஒருத்தர் சோதிச்சு பாத்து தான் படம் பண்ணனும்ன்னா அது எனக்கு வேணாம்.

உதாரணத்துக்கு கலகலப்பு மாதிரி ஒரு படம் எடுத்துகிட்டா அதுல ரெண்டு அப்கம்மிங் ஹீரோஸ். நான் அங்க திறமைய தான் பாக்குறேன். அங்க அவங்களோட மார்க்கெட் வேல்யூவை நான் பாக்கல. இதுதான் என் பேட்டர்ன் படங்கள் என்றார்.

தயாரிப்பாளர் நூலா போயிட்டாங்க

மேலும் அவர் பேசுகையில், சினிமாவில் 500 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ், 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் என கணக்கு காட்டுவது எல்லாம் சுத்த பொய். இதெல்லாம் பேப்பரில் போடுற கணக்கு. கணக்க தப்பா போட்டா அந்த ஹீரோகிட்ட இருந்து அடுத்த படம் கிடைக்காது. இதுனால எந்த தயாரிப்பாளர்கள் நொந்து நூலா போயிருக்காங்க.

மார்க்கெட் வேல்யூ இருக்கு

உதாரணத்துக்கு சொல்றேன், ஒரு லிட்டர் பால் பிடிக்குற பாத்திரத்துல ஒரு லிட்டர் தான் பிடிக்கும். அதுல அதிகமா 10 லிட்டர் பால் இருக்கும்ன்னு சொல்ல முடியுமா அப்படி தான் இது. நம்ம ஊருக்குன்னு ஒரு மார்க்கெட் வேல்யூ இருக்கு. எல்லா படமும் 100 கோடி, 200 கோடின்னு சொல்றது எல்லாம் பொய். அது எல்லாம் மாயை என விளக்கம் அளித்துள்ளார்.