தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  12 Years Of Kalakalappu: சுந்தர் சியின் 25வது படம்! ரசிகர்களுக்கு கலகலப்பூட்டிய கலகலப்பு திரைப்படம்

12 Years of Kalakalappu: சுந்தர் சியின் 25வது படம்! ரசிகர்களுக்கு கலகலப்பூட்டிய கலகலப்பு திரைப்படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 11, 2024 06:00 AM IST

இயக்கத்தை விட்டு ஹீரோவாக சில படங்களில் நடித்து, மீண்டும் இயக்கம் பக்கம் சுந்தர் சி கம்பேக் கொடுத்தார். அவரது கலகலப்பு படம் ரசிகர்களை கலகலப்பூட்டியது. தமிழ் சினிமாவில் சிறந்த கமர்ஷியல் பட இயக்குநர் சுந்தர் சி 25வது படமான இதை இரண்டாம் பாகமாகவும் உருவாக்கினார்.

ரசிகர்களுக்கு கலகலப்பூட்டிய சுந்தர் சியின் கலகலப்பு திரைப்படம்
ரசிகர்களுக்கு கலகலப்பூட்டிய சுந்தர் சியின் கலகலப்பு திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

2009இல் வெளியான ஜெர்மன் மொழி படமாக சேல் கிச்சன் படத்தின் சாயலில் இந்த படம் இருப்பதாக கூறப்பட்டாலும் தமிழுக்கு ஏற்றவாறு காமெடி, கவர்ச்சி சேர்த்து விருந்து படைத்திருப்பார்கள்.

சுந்தர் சி 25வது படம்

தமிழ் சினிமாவில் சிறந்த கமர்ஷியல் பட இயக்குநர் இருந்து வந்த சுந்தர் சி, தலைநகரம் படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதால் ஹீரோவாகவே ஒரு ரவுண்டு வந்த அவர், பின்னர் இயக்கம் பக்கம் திரும்பினார்.

அவ்வாறு சுந்தர் சியின் கம்பேக் படமாகவும், அவர் இயக்கிய 25வது படமாகவும் இருந்த கலகலப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

முதலில் இந்த படத்துக்கு மசாலா கஃபே என பெயர் வைக்கப்பட்டு, பின்னர் கலகலப்பு என மாற்றப்பட்டது. தமிழில் கலகலப்பு என்ற டைட்டிலில் நெப்போலியன் நடித்த படம் ஒன்று வெளியாகியிருந்தபோதிலும், சுந்தர் சி இயக்கிய இந்த கலகலப்பு ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டது.

சுந்தர் சி வைரம் பார்மூலா

தனது குடும்பத்தால் பாரம்பரியமாக நடத்தி வரும் மசாலா கஃபே என்ற ஹோட்டலை கடனில் இருந்து மீட்க விமல் நடத்தும் போராட்டமே படத்தின் ஒன்லைன். இந்த கதையை விமலின் சகோதரராகவும், சின்ன சின்ன திருட்டில் ஈடுபடும் மிர்ச்சி சிவா, விமலின் காதலி அஞ்சலியின் முறைமாமனாக வரும் சந்தானம் ஆகியோரின் துணையுடன் காமெடியாக சொல்லியிருப்பார்கள்.

சுந்தர் சியின் பெரும்பாலான படங்களில் இடம்பெறும் தங்கம், வைரம் போன்ற பொருளை மீட்கும் பார்முலா இந்த படத்திலும் மையக்கருவாக இடம்பிடித்திருக்கும். டைட்டிலுக்கு ஏற்பட எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் தொடக்கம் முதல் எண்ட் கார்டு வரை ஆடியன்ஸை கலகலப்பாக வைக்கும் விதமாக திரைக்கதையுடன் படத்தை உருவாக்கியிருப்பார்கள்.

ஜான் விஜய், சுப்பு பஞ்சு, இளவரசு, கருணாகரன், விச்சு விஸ்வநாத், தளபதி தினேஷ், பாவ லட்சுமணன், யோகி பாபு என பலரும் தங்களது கதாபாத்திரத்துக்கு ஏற்ப கலகலப்பூட்டி சிரிக்க வைத்திருப்பார்கள்.

படத்தில் முதலில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த கேரக்டரில் சந்தானம் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார்.

பாடல்கள் ஹிட்

விஜய் எபினேசர் என்ற புதுமுக இசையமைப்பாளர் படத்துக்கு இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக இவளுங்க இம்சை, மசாலா கஃபே பாடல்கள் ரிப்பீட் மோடில் கேட்கப்பட்டன. 

கோடை விடுமுறை விருந்து

கோடை விடுமுறையை கணக்கில் வைத்து, 2012 மே 11ஆம் தேதி படம் வெளியானது. விடுமுறை தினம் படமாக ரசிகர்களை கலகலப்பூட்டிய இந்த படம் வசூலிலும் பட்டையை கிளப்பியது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் வெளிந்த சிறந்த காமெடி எண்டர்டெயினர் படங்களில் தனியொரு இடத்தை பிடித்த கலகலப்பு வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்