Director Sukumar on Ram Charan: புஷ்பா இயக்குனர் உடன் கை கோர்த்த ராம்சரண்! - மியூசிக் டைரக்டர் யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Sukumar On Ram Charan: புஷ்பா இயக்குனர் உடன் கை கோர்த்த ராம்சரண்! - மியூசிக் டைரக்டர் யார் தெரியுமா?

Director Sukumar on Ram Charan: புஷ்பா இயக்குனர் உடன் கை கோர்த்த ராம்சரண்! - மியூசிக் டைரக்டர் யார் தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Mar 25, 2024 08:20 PM IST

இந்தத்திரைப்படம் காவிய பாணியிலான சினிமா முயற்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுகுமார் - ராம்சரண்
சுகுமார் - ராம்சரண்

இந்தப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இந்தத்திரைப்படம் காவிய பாணியிலான சினிமா முயற்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படம் 2025 -ம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார்.  இந்தக்கூட்டணி 'ரங்கஸ்தலம்' படத்தில் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமாராம் பீம் ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஜூவாக ராம் சரணும், பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடித்தனர்.

இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்தப்படம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

இந்த வரவேற்பை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜப்பானில் வெளியானது. அங்குள்ள மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ஆர்.ஆர்.ஆர் அங்கும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. குறிப்பாக ஜப்பானில் முன்னதாக வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படம் என்று சாதனை படைத்திருந்த ரஜினியின் முத்து படத்தின் வசூலை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் ஜப்பானில் வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படமாக ஆர்.ஆர்.ஆர் மாறியது குறிப்பிடத்தக்கது. 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.