Sudha kongara: நடு கடலில் விட்டுச் சென்ற சூர்யா.. புகழ் பெற்ற நாவலை உரிமையாக்கிய சுதா! - முழு விபரம்!
Sudha kongara: நரனின் 'வேட்டை நாய்கள்' நாவல் தூத்துக்குடி மாவட்டத்தில் கரையிலும், கடலிலும் புதைந்து இருக்கும் உலகத்தை நமக்கு காண்பிக்கிறது. - சுதா கொங்கரா! - முழு விபரம்!

Sudha kongara: நடு கடலில் விட்டுச் சென்ற சூர்யா.. புகழ் பெற்ற நாவலை உரிமையாக்கிய சுதா! - முழு விபரம்!
கைவிட்ட சூர்யா
'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் கம் பேக் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா, சூர்யாவிற்கு சூரரைப்போற்று திரைப்படத்தை கொடுத்து, அவரின் சரிந்த கிடந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தினார். அந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதே போல சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கராவிற்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சூர்யா - சுதா கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அந்தப் படத்திற்க்கு புறநானூறு என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தி எதிர்ப்பை கதைக்களமாக கொண்ட இந்த படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று சூர்யா தரப்பில் இருந்து, அந்தப்படம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.