'குபேரா படத்த அந்த சரஸ்வதி தேவியே திரும்பிப் பாப்பாங்க..' நம்பிக்கையோடு பேசும் இயக்குநர் சேகர் கம்முலா..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'குபேரா படத்த அந்த சரஸ்வதி தேவியே திரும்பிப் பாப்பாங்க..' நம்பிக்கையோடு பேசும் இயக்குநர் சேகர் கம்முலா..

'குபேரா படத்த அந்த சரஸ்வதி தேவியே திரும்பிப் பாப்பாங்க..' நம்பிக்கையோடு பேசும் இயக்குநர் சேகர் கம்முலா..

Malavica Natarajan HT Tamil
Published Jun 16, 2025 03:32 PM IST

குபேரா படம் எனக்கு தாய் மாதிரி. இந்தப் படத்தை அந்த சரஸ்வதி தேவியே திரும்பி பாப்பாங்க என படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா கூறியுள்ளார்.

'குபேரா படத்த அந்த சரஸ்வதி தேவியே திரும்பிப் பாப்பாங்க..' நம்பிக்கையோடு பேசும் இயக்குநர் சேகர் கம்முலா..
'குபேரா படத்த அந்த சரஸ்வதி தேவியே திரும்பிப் பாப்பாங்க..' நம்பிக்கையோடு பேசும் இயக்குநர் சேகர் கம்முலா..

நம்பிக்கை அளித்தவர் ராஜமௌலி

குபேரா ப்ரீ ரிலீஸ் விழாவில் இயக்குநர் சேகர் கம்முலா பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம். எனது 25 வருட கெரியரில் இவ்வளவு படங்கள் செய்திருக்கிறேனா என்று ஆச்சரியமாக இருக்கிறது. நாநீங்கள் அழைத்தவுடன் வந்த ராஜமௌலி சாருக்கு நன்றி. எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அளித்தவர் இயக்குநர் ராஜமௌலி சார். ஊடகங்களுக்கு நன்றி" என்றார்.

குபேரா அம்மா மாதிரி

அவர், குபேரா படத்தை தாய் மாதிரி எனக் கூறியுள்ளார். "ஒவ்வொரு படமும் மகள் மாதிரி, மகன் மாதிரி என்று சொல்வார்கள். ஆனால் குபேரா தாய் அன்பு மாதிரி. பிச்சைக்காரனாக இருந்தாலும், கோடீஸ்வரனாக இருந்தாலும் தாய் அன்பு ஒன்றுதான். அப்படிப்பட்ட ஐடியாலஜியுடன் கதை கிடைத்தது அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. சரஸ்வதி தேவி திரும்பிப் பார்க்கும் படம் இது" என்று குபேரா பற்றி சேகர் கம்முலா தெரிவித்தார்.

இது தான் உண்மையான பான் இந்தியா படம்..

ரொம்ப பிரெஷ்ஷா இருக்கும் "இது ரொம்ப புது படம். இதற்கு முன்பு நீங்கள் பார்த்திராத படம். ரொம்ப பிரெஷ்ஷா இருக்கும். எந்த மாநில ஆடியன்ஸாக இருந்தாலும் இது நம்ம படம் என்று நினைக்கும்படி வந்திருக்கு. ட்ரூ பான் இந்தியன் மூவி. இதில் சிரிப்பு, எமோஷன், அழுகை, த்ரில், ஆச்சரியம், வலி எல்லாம் கலந்திருக்கும்" என்று சேகர் கம்முலா கூறினார்.

பதற்றம் தந்த நாகர்ஜூனா

நாகர்ஜூனாவுடன் பணியாற்றியது பதற்றமாக இருந்தது. "குபேரா ஃபென்டாஸ்டிக் ஃபிலிம். எங்கள் டைரக்ஷன் டிபார்ட்மென்ட், புரொடக்ஷன் டீம் அனைவருக்கும் நன்றி. நாகார்ஜுனா சாருடன் ஷூட் பண்ணும்போது நெர்வஸாக ஃபீல் பண்ணினேன். சிவா ஷூட்டிங் டைமில் நாகார்ஜுனா சாரை பார்த்தேன். அவர் கெரியரில் எத்தனையோ வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார். நான் இந்த ஸ்கிரிப்ட் சொன்னவுடன் ரெடி என்றார். அதற்கு நாகார்ஜுனா சாருக்கு நன்றி. எனக்காக எதாவது செய்வேன் என்று சொல்லி இந்த படத்தை செய்தார்" என்று சேகர் கம்முலா குறிப்பிட்டார்.

தனுஷை ஒல்லியாக சொன்னேன்

எவ்வளவு சொன்னாலும் குறைவு "ராஷ்மிகா ரொம்ப பியூட்டிஃபுல் பெர்சன். உள்ளே வெளியே ஒரே மாதிரி இருக்கும் பொண்ணு. அற்புதமாக பெர்ஃபார்ம் பண்ணியிருக்காங்க. ஜிம் சர்ப் இந்த படத்தில் ரொம்ப அற்புதமாக நடிச்சிருக்கார். தனுஷ் பற்றி எவ்வளவு சொன்னாலும் குறைவு. அவர் பிரைட் ஆஃப் இந்தியா. பிச்சைக்காரன் மாதிரி தெரியணும்னா நிஜமாவே அப்படி தெரிஞ்சு காட்டினார். கெரியரில் ஃபர்ஸ்ட் டைம் ஒரு டைரக்டர் ஸ்லிம்மாக சொல்லியிருக்கார், நிஜமாவே ஸ்லிம்மாகி காட்டினார். அவருக்கு எத்தனை நேஷனல் அவார்ட்ஸ் வந்தாலும் குறைவு" என்று சேகர் கம்முலா தெரிவித்தார்.

குபேரா படம் வசூலை தரும்

"தோட்டா தரணி சார் எனக்கு ஃபாதர் மாதிரி. இந்த படத்துக்கு அற்புதமான வொர்க் கொடுத்திருக்கார். தேவி ஸ்ரீ இந்த படத்துக்கு ஃபென்டாஸ்டிக் மியூசிக் கொடுத்திருக்கார். எப்பவும் எனர்ஜிடிக்காக இருப்பார். அது மியூசிக்கில் தெரியும்" என்று சேகர் கம்முலா கூறினார். "சுனில் சார், ராம்மோகன் சார் இவ்வளவு பிக் ஸ்கேல் படத்தை எங்கும் தயங்காமல் கட்டியிருக்கிறார்கள். இந்த படம் பற்றி ரொம்ப ஹேப்பியாக இருக்கிறார்கள். குபேரா பணம் கொண்டு வரணும் என்று விரும்புகிறேன். இந்த படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தேங்க் யூ. குபேரா கண்டிப்பா உங்களை எல்லோரையும் என்டர்டெயின் பண்ணும்" என்று சேகர் கம்முலா ஸ்பீச்சை முடித்தார்.

சேகர் கம்முலாவின் படங்கள்

ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ், லீடர், லைஃப் இஸ் பியூட்டிஃபுல், ஃபிடா போன்ற படங்களின் மூலம் பிரபலமான டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா, நாக சைதன்யா நடித்த லவ் ஸ்டோரி படத்திற்குப் பிறகு இயக்கிய திரைப்படம் குபேரா.