தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indian 2: ஒருவழியாக தொப்பியைப் போட்டுக்கொண்டு வந்த சேனாதிபதி.. இந்தியன் 2 ரிலீஸ் டேட்டை அறிவித்த ஷங்கர்!

Indian 2: ஒருவழியாக தொப்பியைப் போட்டுக்கொண்டு வந்த சேனாதிபதி.. இந்தியன் 2 ரிலீஸ் டேட்டை அறிவித்த ஷங்கர்!

Marimuthu M HT Tamil
May 19, 2024 08:49 PM IST

Indian 2: இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் டேட்டை இயக்குநர் ஷங்கர் அறிவித்து இருக்கிறார். மேலும் ஒரு கூடுதலையும் பகிர்ந்துள்ளார்.

Indian 2: ஒருவழியாக தொப்பியைப் போட்டுக்கொண்டு வந்த சேனாதிபதி.. இந்தியன் 2 ரிலீஸ் டேட்டை அறிவித்த ஷங்கர்!
Indian 2: ஒருவழியாக தொப்பியைப் போட்டுக்கொண்டு வந்த சேனாதிபதி.. இந்தியன் 2 ரிலீஸ் டேட்டை அறிவித்த ஷங்கர்!

ட்ரெண்டிங் செய்திகள்

லஞ்சம் கொடுக்காத ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் சேனாதிபதி என்னும் கதாபாத்திரம் சந்திக்கும் பிரச்னைகளையும், சமூகத்தை மாற்ற முனையும் அக்கறையையும் கொண்டு 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், இந்தியன். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இப்படம், அப்போதே 30 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டித்தந்தது. பின்னர் இயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் மீண்டும் இணையவே இல்லை. வெவ்வேறு படங்களிலும் வெவ்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றினர். எந்திரனில் முதலில் கமல்ஹாசனை நடிக்கவைக்க மும்முரம் காட்டினார், ஷங்கர். அதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டைத் தாண்டி, கமல்ஹாசனும் இயக்குநர் ஷங்கரும் மீண்டும் இணையவில்லை.

இந்நிலையில், அதன் தொடர்ச்சியான இந்தியன் 2 திரைப்படம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கமல்ஹாசனை வைத்து மீண்டும் உருவாகிறது என அறிவிக்கப்பட்டது. அதன்பின், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இதன் படப்பிடிப்புக்கு மத்தியில், பிப்ரவரி 2020ல் படக்குழுவில் ராட்சத கிரேன் விழுந்ததில் சிலர் உயிரிழந்தனர்.

அதன்பின், சூட்டிங் தொடங்கினாலும் கோவிட் பிரச்னை தலைவிரித்தாடியது. இதனால் ஒட்டுமொத்தமாக, இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பின் சமீபத்தில் 2024 மார்ச்சில் அதன்பிடிப்பு முடிவடைந்தது.

ட்ரெண்டிங் ஆன இந்தியன் 2 டீஸர்:

கடந்தாண்டு, நவம்பர் 23ஆம் இந்தியன் 2 படத்தின் டீஸர் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. அதில் கமல்ஹாசன், ஒரு வெளி நாட்டிலிருந்து ஒரு தொலைபேசி பூத்தில் பேசத் தொடங்குவதில் டீஸர் தொடங்கியது. அதில் நரைத்த தலைமுடி மற்றும் மீசையுடன் வயதான தோற்றத்தில் கமல்ஹாசன் இருந்தார்.

அதில் கமல்ஹாசன், "எங்கு அநீதி நடந்தாலும், நான் தோன்றுவேன். இந்தியன் சாகாவரம் பெற்றவன் நான்" என்றார். அதன்பின் ஒரு கப்பலில் ஹெலிகாப்டர் தரையிறங்க இருப்பதுபோல காட்டப்படுகிறது. 

பணக்காரர்கள் ஆடம்பரங்களுக்காக கணக்கிலடங்கா பணத்தை எவ்வாறு வீணாகச் செலவழிக்கிறார்கள் என்பதையும், ஏழைகள் தங்கள் வேலையை முடிக்க அதிக லஞ்சம் கொடுக்கிறார்கள் என்பது போன்றும் பல காட்சிகள் இந்தியன் 2 படத்தின் டீஸரில் உள்ளன. மேலும் ஒரு அரசு ஊழியர் ரூ.6.5 லட்சம் லஞ்சத்தை மறுத்து, ரூ.8 லட்சம் கேட்கிறார். மறுபுறம், மற்றொரு அரசு ஊழியர் முழு லஞ்சத் தொகையையும் வழங்கவில்லை என்பதற்காக ஒப்பந்தத்தை நிராகரிக்கிறார்.

நாடு முழுவதும் இழைக்கப்பட்ட அநீதியின் அதிகமான காட்சிகள் காட்டப்படுவதால், பலர் தங்களுக்கு நல்லது செய்த பழைய சுதந்திரப்போராட்ட வீரரை அழைக்க #ComeBackIndian என்ற ட்வீட்டைப் பதிவுசெய்கின்றனர்.

 ஒரு நபர் தனது ஆதார் அட்டையுடன் மாறுவேடமிட எலியின் பெரிய உரோமம் கொண்ட தலையை அணிந்திருப்பதைக் காணலாம். இந்தியனுக்கு அழைப்பு விடுப்பது போல மக்கள் தட்டுகளை அடிப்பது காட்டப்படுகிறது.

சித்தார்த் தனது மார்பில் ரூபாய் நோட்டுகள் அடங்கிய தட்டை அணிந்திருப்பதையும் காண முடிகிறது. மேலும் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் ஆகியோரும் டீஸரில் இடம்பெற்று இருந்தனர். இதுவரை அங்கு 13 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளனர்.

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் எப்போது?:

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸில், இந்தியன் 2 படத்தின் புரோமோஷனுக்காக நேற்று கமல்ஹாசனும் ஷங்கரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில்,  இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் வரக்கூடிய மே 22ஆம் தேதி வெளியாகும் எனவும், இப்படம் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகும் எனவும் படத்தின் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்