Director Shankar: எனக்கு பெரிய பட்ஜெட் படம் பண்ண ஆசை இல்ல.. என்ன யாரும் விடல.. ஷங்கர் ஷேரிங்
Director Shankar: எனக்கு எப்போதும் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்க ஆசையில்லை ஆனால் என்னை சின்ன பட்ஜெட் படம் பண்ண விடவில்லை என டைரக்டர் ஷங்கர் கூறியுள்ளார்.

Director Shankar: இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான். அவருக்கு சின்ன சின்ன பட்ஜெட்டில் படங்கள் எடுக்கவே தெரியாது. இவரால் பல தயாரிப்பாளர்கள் சொத்தையே விற்றுள்ளனர் என பலரும் கூறி வரும் நிலையில், அதுகுறித்த விளக்கத்தை அவர் இந்தியாகிளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
டெக்னாலஜிக்கு ஏத்த மாதிரி கதை
நான் சிக்கு புக்கு ரயிலு பாட்டு பண்ணும் போது விஎஃப்எக்ஸ் எல்லாம் இல்ல. கண்ணுல இருந்து அம்பு விடுறது, காதுல இருந்து புகை வர்றது எல்லாம் அனிமேஷன்ல பண்ணுனோம். அதுக்கு அப்புறம் காதலன் படம் பண்ணும் போது கிரீன் ஸ்கிரீன் வந்தது. அதுக்கு அப்புறம் தான் ப்ளூ ஸ்கிரீந், பிளாக் ஸ்கிரீன், எல்லா கலரும் வந்தது. இப்போ ஏஐ வந்துடுச்சு. இந்த டெக்னாலஜிக்கு ஏத்த மாதிரி கதை எல்லாம் வரும்.
புதுசா கத்துக்குறோம்
ஷங்கர் படம்ன்னாலே பிரம்மாண்டம், பெரிய பட்ஜெட் இருக்கும்ன்னு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே பேச ஆரம்பிச்சிடுறாங்க. அதை எல்லாம் நான் பாசிட்டிவ்வா தான் எடுத்துக்குறேன். இது மூலமா இன்னும் நிறைய வெளிய கொண்டு வரலாம். ஏற்கனவே நம்ம படத்துல வந்ததை தவிர்த்து புதுசா ஒரு விஷயம் குடுக்கரதுக்காக மெனக்கெட வேண்டி இருக்கிறது. அதை மட்டும் நாம பிடிச்சிட்டோம்ன்னா நம்மள மேல கொண்டு போயிடும்.
ஆசப்பட்டது சின்ன பட்ஜெட் படம்
நான் முதல் முதல்ல பண்ண நினைச்ச படமே பெண்களை மையப்படுத்திய சின்ன பட்ஜெட் படம் தான். ஆனா புரொடியூசர்ஸ் எல்லாம் ஆன்டி- ஹீரோ படம் இருந்தா சொல்லுங்க பண்ணலாம்ன்னு சொல்லிட்டாங்க. நான் படம் பண்ண வந்தப்போ அதான் ட்ரெண்டு.
சரி புரொடியூசர்க்கு இதுதான வேணும்ன்னு நான் ரெடி பண்ணுன படம் தான் ஜென்டில் மேன். சரி அந்த படத்த முடிச்சிட்டு நாம யோசிச்சு வச்ச சின்ன கதைய பண்ணலாம்ன்னு இருந்தேன்.
பெருசா வேணும்ன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க
ஆனா, இங்க எல்லாரும், சார் ஜென்டில் மேன் படத்த நல்லா பெருசா பண்ணிட்டீங்க. அதுக்கு அடுத்து பண்ற படம் அதவிட இன்னும் பெருசா இருக்கனும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.
இதுனால தான் காதலன் படம் பண்ண வேண்டியதா போயிடுச்சு. அதுக்கு அப்புறம் என்கிட்ட இன்னும் பெருசா இன்னும் பெருசான்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுலயும் நமக்கான வாய்ப்பு இருக்கும் போது நாம ஏன் பெரிய பட்ஜெட் படம் எல்லாம் பண்ண கூடாதுன்னு தான் பண்ண ஆரம்பிச்சேன்.
நானே கம்பெனி ஆரம்பிச்சும் பண்ண முடியல
அதுக்கு அப்புறம், நான் நினைச்ச படம் எல்லாம் பண்ணனும்ன்னு சொந்தமா ஒரு புரொடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சேன். அப்போ சுஜாதா சார் சொன்னாரு இப்போ உங்களுக்கு ஒரு மார்க்கெட் இருக்கு. இந்த மாதிரி சமயத்துல எல்லாம் இப்படி படம் பண்ணாதீங்க. இந்த மாதிரி கதை எல்லாம் பண்ண நிறைய பேர் இருக்காங்க.
நீங்க சினிமாவுல டயர்ட் ஆகி வயசானதுக்கு அப்புறம் வேணும்ன்னா இந்த மாதிரி படம் பண்ணுங்கன்னு சொன்னாரு.
அதுக்கு அப்புறம் தான் நான் என்னோட புரொடக்ஷன் கம்பெனியில முதல்வன் படம் பண்ணுனேன். அது அப்படியே இப்போ வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு" என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்