Director Shankar: 'கேம் சேஞ்சர் படத்தால் திருப்தி இல்லை.. படத்தோட பாதி சீன்..' மனம் நொந்த ஷங்கர்
Director Shankar: கேம் சேஞ்சர் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கால் பதித்துள்ள இயக்குநர் ஷங்கர் அந்தப் படத்தால் தனக்கு திருப்தி இல்லை எனக் கூறியுள்ளார்.

Director Shankar: குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனவரி 10 ஆம் தேதி வெளியான இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
கேம் சேஞ்சர் வசூல் சர்ச்சை
ஷங்கர் இயக்கியுள்ள இப்படம் அரசியல் கதையை மையப்படுத்தி வெளியான திரைப்படம். இருப்பினும், கேம் சேஞ்சரின் வசூல் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. படக்குழுவினர் வசூல் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறுவதாக சமூக ஊடகங்களில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், மூத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா கேம் சேஞ்சர் படத்தை குறிவைத்து தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.
விமர்சித்த ராம் கோபால் வர்மா
படக்குழுவினர் திருட்டுத் தனமாக இண்டர்நெட்டில் படம் வெளியான விவகாரத்தால் சோகமாக இருக்கும் நிலையில், அவர்கள் பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மாவும் தன் பங்கிற்கு வம்பு இழுத்துள்ளார்.
தொடர்ந்து கேம் கேஞ்சர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மிகைப்படுத்தி காட்டி வருவதாகவும், இந்தப் படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடி வசூல் செய்திருந்தால், புஷ்பா, ஆர்ஆர்ஆர், கல்கி, பாகுபலி படத்தின் முதல்நாள் வசூல் எல்லாம் எவ்வளவாக இருக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்தி இல்லை
இந்நிலையில்,கேம் சேஞ்சர் படத்தின் இயக்குநரான ஷங்கர் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், "எல்லா டைரக்டருக்கும் இருக்க ஒரு விஷயம் தான். எனக்கு இன்னும் என் படம் ரிலீஸ் ஆனாலும் அது நல்லா வந்ததா திருப்தி இல்ல. இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.
படத்தில் எடுக்கப்பட்ட நிறைய நல்ல நல்ல காட்சிகள் எல்லாம் படத்தின் நீளத்தை குறைக்கும் காரணத்தால் எல்லாம் படத்தில் இடம் பெறாமல் போய்விட்டது என்ற வருத்தம் இருக்கிறது.
5 மணி நேர படம்
இந்த காட்சிகள் எல்லாவற்றையும் எங்களால் படத்தில் வைக்க முடியவில்லை. ஆனால், அந்த காட்சிகள் அனைத்தும் இந்தப் படத்திற்காக தான் எடுக்கப்பட்டது.
இந்தப் படம் மொத்தமா 5 மணி நேரத்திற்கு இருக்கு. எனக்கு இது சிலை செய்யுற மாதிரி தான் இருக்கு. ஒரு சிற்பி சிலையை உருவாக்குறதுக்காக தேவை இல்லாத கல் எல்லாம் போகணும். அதே மாதிரி தான் நான் இந்தப் படத்தின் காட்சிகளை எல்லாம் குறைத்தேன். இதை எல்லாம் அப்படியே வச்சிருந்தா சிலை வராது" என்றும் அவர் விளக்கமளித்தார்.
நெட்டிசன்ஸ் கிண்டல்
கேம் சேஞ்சர் படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இது தென்னவன் படத்தின் ரீமேக் என கிண்டல் செய்து வந்தனர். இது தெலுங்கு ரசிகர்களுக்குத் தான் இது புதுசு. தமிழ் ரசிகர்களுக்கு எல்லாம் ரொம்பப் பழசு எனக் கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.
லீக்கான HD வீடியோ
இதற்கிடையில், கேம் சேஞ்சர் திரைப்படம் ரிலீஸான ஒரே நாளில் அந்தப் படத்தின் HD பிரிண்ட் இணையத்தில் லீக் ஆனது. இதனால் அதிர்ச்சி அடைந்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் வீடியோவை லாக் செய்தவர்கள் குறித்து போலீசில் புகாரளித்துள்ளனர்.
மிரட்டல்
அந்தப் புகாரில் சிலர் படத்தின் ரிலீஸிற்கு முன்னரே சிலர் எங்களை தொடர்புகொண்டு மிரட்டினர். எனவும், இந்த விவகாரத்தில் சுமார் 45 பேருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்