ஹாலிவுட் திரும்பிப் பார்த்துச்சு.. இந்திய சினிமாவின் பெருமை.. ஒரே மேடையில் ராஜமெளலியைப் புகழ்ந்த இயக்குநர் ஷங்கர்
- ஹாலிவுட் திரும்பிப் பார்த்துச்சு.. இந்திய சினிமாவின் பெருமை.. ஒரே மேடையில் ராஜமெளலியைப் புகழ்ந்த இயக்குநர் ஷங்கர் குறித்துப் பார்ப்போம்.
ஹாலிவுட் திரும்பிப் பார்த்துச்சு.. இந்திய சினிமாவின் பெருமை.. ஒரே மேடையில் ராஜமெளலியைப் புகழ்ந்த இயக்குநர் ஷங்கர் அவர்களின் பேச்சு வைரல் ஆகியுள்ளது.
ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது.
அதில் கலந்துகொண்டு பேசிய பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ராஜமெளலியை வெகுவாகப் பாராட்டினார்.
இதுதொடர்பாக இயக்குநர் ஷங்கர் பேசியதாவது,''தெலுங்கில் ஒக்கடு, போக்கிரி அந்த மாதிரியான படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நன்கு பொழுதுபோக்காக இருக்கும். அப்படி நான் கூட ஒரு நல்ல பொழுதுபோக்கு சினிமா எடுக்கணும் என்று நினைத்து இருக்கிறேன். அப்படி ஒரு படம், கேம் சேஞ்சர். என்னிடம் என்ன எதிர்பார்க்குறீங்களோ, அவை எல்லாம் இந்தப் படத்தில் இருக்கும்.
ஒரு அரசு அதிகாரிக்கும், ஒரு அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும்போர் தான், கேம் சேஞ்சர். இந்தப் படத்தில் ஹீரோவுக்கு ஒரு பின்கதை இருக்குது. அது இந்தப் படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது சங்கராந்தி அல்ல; ராமநவமி: ராம் சரண்
குறிப்பாக, கேம் சேஞ்சர் படத்தின் இன்டர்வெல், கிளைமேக்ஸில் அப்படி இருக்கும். ராம் சரண் ரொம்ப அற்புதமாக நடிச்சிருக்கார். எல்லோரும் சொல்றாங்க, இது சங்கராந்தி. இல்லைங்க, இது ராம நவமி.
ராம் சரண் அப்படி நடிச்சிருக்கார். அவரிடம் நடிப்பு தெரியவில்லை. கதாபாத்திரம் தான் தெரிந்தது. குறிப்பாக, அந்த கதாபாத்திரத்துக்காக முடி, மீசை வைச்சுக்கிறது எப்படி என்று எது கேட்டாலும், அதை எங்களுக்கு செய்துகொடுத்தார், ராம்சரண்.
பஞ்சகட்டு வேட்டி கட்டிக்கொண்டு, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார், ராம் சரண். அவரது வெவ்வேறு கெட்டப்புகளைப் பார்க்கவே நிறையபேர் வருவாங்கன்னு நினைக்கிறேன்.
அந்தப் படம் பார்த்தபின், பலரின் இதயத்தில் ராம் சரண் குடியேறுவார். கியாரா அத்வானி உங்கள் எல்லோருக்கும் தெரியும். ரொம்ப அழகாக இருக்காங்க. ரொம்ப அழகாக நடிச்சிருக்காங்க. கியாரா அத்வானிக்கும் ராம் சரணுக்கும் இடையில் டான்ஸ் செய்வதில் ஒரு பெரிய போட்டியே இருந்தது.
அஞ்சலி உயிர் கொடுத்திருக்காங்க: ஷங்கர்
அஞ்சலி ஒவ்வொரு ஷாட்டிலும் ஒரு உயிர் கொடுத்திருக்காங்க. அப்படி ஒரு நல்ல நடிகை. இன்னொரு சர்ப்ரைஸ்ஸான கேரக்டர் இருக்கு. அதை நீங்கள் வரும் ஜனவரி 10ஆம் தேதி பாருங்க.
ஸ்ரீகாந்த் பார்ப்பதற்கு கேசுவலாக இருக்கிறார். பிராஸ்தெடிக் மேக்கப்பில் ஒரு கதாபாத்திரம் செய்திருக்கிறார். கேமராவை ஆன் செய்தால் சிங்கம் மாதிரி நடிச்சிருக்கார்.
சமுத்திரக்கனி நடிக்கிறாரா எனத்தோன்றும். அவர் நடிப்பதுபோலே இருக்காது. அவர் நடித்ததை எடிட் செய்து பார்த்தால், அவ்வளவு பெரிய விஷயம் நடிப்பில் செய்திருப்பார்.
நாம் எதைக்கேட்டாலும் செய்யக்கூடிய ஒரு தயாரிப்பாளர் தில் ராஜூ. என்னைத் தெலுங்கில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. பணம் கொடுப்பதில் மட்டுமில்லை, தினமும் ஸ்பாட்டில் இருக்கக் கூடியவர். எல்லா துறைகளிலும் என்ன நடக்குது என்று விரல் நுனியில் வைத்திருப்பார். அனைத்து வேலைகளையும் கண்காணிப்பார்.
ராஜமெளலி பற்றி ஷங்கர்:
அடுத்து நம்ம ராஜமெளலி. நம்ம எல்லோரும் ஹாலிவுட்டை பார்க்கிறோம். ஹாலிவுட் மாதிரி படம் பண்ணனும். ஹாலிவுட்டில் இவ்வளவு அற்புதமாகப் பண்ணியிருக்காங்கன்னு நாம் பார்ப்போம். இப்போது, ஹாலிவுட் திரையுலகம் திரும்பி இந்தியன் சினிமாவில் இப்படி செய்திருக்காங்களே என்று, திரும்பிப் பார்க்கும்படி செய்த நம்ம இந்திய சினிமாவுடைய பெருமை, ராஜமெளலி அவர்கள் வந்து இந்த ட்ரெய்லரை ரிலீஸ் செய்தது எனக்கு கெளரவம். மகிழ்ச்சி. ரொம்ப நன்றி சார்’’ என இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார்.
ராஜமெளலியைப் புகழ்ந்த ஷங்கரை, நெட்டிசன்கள் பலரும் வாழ்ந்துகெட்ட ஜமீன்தார் என விமர்சித்து வருகின்றனர்.