Game Changer OTT Release: ராம் சரணின் கேம் சேஞ்சர் பட ஓடிடி எப்போது? வைரலாகும் தகவல்!
Game Changer OTT Release: ராம் சரண் நடப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Game Changer OTT Release: மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல் ரேஸில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக படமாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் ஷங்கரின் முதல் நேரடித் தெலுங்கு அரசியல் ஆக்ஷன் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்காமல் வசூல் தொடர்ந்து சரிந்தது. இந்நிலையில், தான் கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
ஓடிடியில் எப்போது ரிலீஸ்?
கேம் சேஞ்சர் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது. ரிலீஸுக்கு முன்பே இந்த ஓடிடி ஒப்பந்தம் நடைபெற்றது. கேம் சேஞ்சர் படம் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிப்ரவரி 14 அல்லது 15 ஆம் தேதிகளில் கேம் சேஞ்சர் படத்தை ஸ்ட்ரீமிங்கிற்கு கொண்டு வர பிரைம் வீடியோ திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
அதிகாரப்பூர்வ தகவல் இல்லை
கேம் சேஞ்சர் ஸ்ட்ரீமிங் குறித்து பிரைம் வீடியோ ஓடிடி தளத்திலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது இந்தப் படத்தின் திரையரங்கு ஓட்டமும் மந்தமாகவே உள்ளது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இந்தப் படத்தை பிரைம் வீடியோ ஸ்ட்ரீமிங்கிற்கு கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
HD பிரிண்ட் ஏற்கனவே லீக்
கேம் சேஞ்சர் படத்தின் HD பிரிண்ட் ஏற்கனவே ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் படக்குழு புகார் அளித்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு கும்பல் இருப்பதாகவும், ரிலீஸுக்கு முன்பே லீக் குறித்து மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான வாரத்திலேயே ஆன்லைனில் HD பிரிண்ட் லீக் ஆனது கேம் சேஞ்சர் படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
கேம் சேஞ்சர் வசூல் சர்ச்சை
கேம் சேஞ்சர் படத்திற்கு முதல் நாளில் ரூ.186 கோடி வசூல் (கிராஸ்) வந்ததாக படக்குழு அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கணக்குகளை மிகைப்படுத்திக் காட்டுவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டினர். இதனால் சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்தது. அதன் பிறகு படத்தின் வசூல் குறைந்தது.
கேம் சேஞ்சர் படம் மொத்தம் 12 நாட்களில் இதுவரை சுமார் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் இதுவரை ரூ.130 கோடி நிகர வசூல் செய்துள்ளதாகத் தெரிகிறது. கேம் சேஞ்சர் படத்தை சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தில் ராஜு, ஷிரிஷ் தயாரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கேம் சேஞ்சர் படக்குழு
இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் ராம் சரண் நடிப்பில் மிரட்டியுள்ளார். இருப்பினும், இயக்குனர் ஷங்கர் படத்தை இயக்கிய விதம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் படத்தில் அஞ்சலி, கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்