Indian 2: ஏன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கவில்லை? - இயக்குநர் ஷங்கர் சொன்ன ஷாக்கான தகவல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indian 2: ஏன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கவில்லை? - இயக்குநர் ஷங்கர் சொன்ன ஷாக்கான தகவல்

Indian 2: ஏன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கவில்லை? - இயக்குநர் ஷங்கர் சொன்ன ஷாக்கான தகவல்

Aarthi Balaji HT Tamil
Jul 10, 2024 04:30 AM IST

Indian 2: இந்தியன் 2 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எதனால் இசையமைக்கவில்லை என்ற கேள்வி சமீபத்தில் இயக்குநர் ஷங்கரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ஏன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கவில்லை?
ஏன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கவில்லை?

மற்ற குறிப்பிடத்தக்க வேடங்களில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், ஆர்த்தியாக பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், இன்ஸ்பெக்டராக கிருஷ்ணசாமியாக நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், தம்பேஷ், குல்ஷன் குரோவர், ஜாகீர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹுசைன், பியூஷ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா, ஜெயபிரகாஷ், ஜி. மாரிமுத்து, ஜார்ஜ் மேரியன், வினோத் சாகர், யோகராஜ் சிங், ரேணுகா, கல்யாணி நடராஜன், சி. ரங்கநாதன், பெனடிக்ட் காரெட், ரவி வெங்கட்ராமன், சேரன்ராஜ், டெமி-லீ டெபோ ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 பட்ஜெட் மற்றும் சம்பளம்

இந்தியன் 2 படம் சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. செய்திகளின் படி, கமல் ஹாசன், இந்தியன் 2 படத்தில் நடித்ததற்காக 150 கோடி ரூபாய் பெற்றார்.

லோகேஷ் கனகராஜின், விக்ரம் படத்திற்காக அவர் 50 கோடி ரூபாயும், பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 AD' படத்திற்காக 40 கோடி ரூபாயும் சம்பாதித்ததாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ஜூன் 27 அறிக்கை, கமல் ஹாசன் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பட்டியலிட்டுள்ளது, அவர் ஒரு படத்திற்கு 100 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார்.

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட்

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இதன் படப்பிடிப்புக்கு மத்தியில், பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு படக்குழுவில் ராட்சத கிரேன் விழுந்ததில் சிலர் உயிரிழந்தனர்.

அதன்பின், சூட்டிங் தொடங்கினாலும் கோவிட் பிரச்னை தலைவிரித்தாடியது. இதனால் ஒட்டுமொத்தமாக, இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பின் சமீபத்தில் 2024 மார்ச்சில் அதன் பிடிப்பு முடிவடைந்தது.

ரிலீஸ்

இந்தியன் 2 படத்தின் வெளிநாட்டில் ப்ரீபுக்கிங்கில் இதுவரை ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எதனால் இசையமைக்கவில்லை என்ற கேள்வி சமீபத்தில் இயக்குநர் ஷங்கரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

ஷங்கர் பேட்டி

அப்போது பேசிய அவர், " இந்தியன் 2 படத்தின் ரஜினிகாந்தின் 2.0 பட சமயத்தில் உருவானது. அப்போதே கதை தயார் செய்யப்பட்டு கமல் ஹாசனிடம் சொல்லப்பட்டது. 2 .0 படத்தின் பின்னணி இசையில் அவர் பிஸியாக இருந்தார். இரவு, பகல் பாராமல் அந்த வேலை சென்று கொண்டு இருந்த காரணத்தினால், ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்க மனம் வரவில்லை. அனிருத் இசை எனக்கு பிடித்து இருந்தது. அதனால் அவரை படத்தில் வந்தால் நன்றாக இருக்கும் நினைத்து அனுகினோம் “ என்றார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.