Director shankar: ‘அந்நியன் படத்தில் அம்பியிடம் கெஞ்சும் பெண் யார் தெரியுமா? - ஷங்கர் பகிர்ந்த சுவாரசிய கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Shankar: ‘அந்நியன் படத்தில் அம்பியிடம் கெஞ்சும் பெண் யார் தெரியுமா? - ஷங்கர் பகிர்ந்த சுவாரசிய கதை

Director shankar: ‘அந்நியன் படத்தில் அம்பியிடம் கெஞ்சும் பெண் யார் தெரியுமா? - ஷங்கர் பகிர்ந்த சுவாரசிய கதை

Kalyani Pandiyan S HT Tamil
Jul 16, 2024 06:30 AM IST

Director shankar: மறுதினம் நான் அலுவலகத்திற்கு வரும் போது, அலுவலகத்தின் முன்னால், கூட்டம் கூட்டமாக பெண்கள் நின்றார்கள். நான் நேராக என்னுடைய அலுவலக மாடிக்கு சென்றேன். அங்கிருந்து பார்த்தால் கீழே நிற்பவர்களை நன்றாக பார்க்க முடியும். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன். -ஷங்கர்

Director shankar: ‘அந்நியன் படத்தில் அம்பியிடம் கெஞ்சும் பெண் யார் தெரியுமா?  - ஷங்கர் பகிர்ந்த சுவாரசிய கதை
Director shankar: ‘அந்நியன் படத்தில் அம்பியிடம் கெஞ்சும் பெண் யார் தெரியுமா? - ஷங்கர் பகிர்ந்த சுவாரசிய கதை

இது குறித்து அவர் பேசும் போது, "அந்நியன் படத்தில் மிகவும் பாவமாக ஒரு பெண் ஒருவர், தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற ரீதியில் அம்பி விக்ரமிடம் பேசிச் செல்வார். அவரை அந்த கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்த சம்பவம், மிகவும் சுவாரசியமான ஒன்று. அதை நான் இங்கு பகிர்கிறேன்.

எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

அந்த கதாபாத்திரத்துக்கான நடிகர்களை தேர்வு செய்யும் செயல்முறை நடந்து கொண்டே இருந்தது. ஜூனியர் நடிகர்கள், நாடக நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோரை, அந்த கதாபாத்திரத்திற்காக நாங்கள் ஆடிஷன் செய்தோம். ஆனாலும் இறுதிவரை எனக்கு திருப்தி ஏற்படவில்லை. 

இதையடுத்து நான் என்னுடைய உதவி இயக்குநர்களிடம், ஒரு பாவமாக இருக்கும் பெண்ணை உங்களால் தேட முடியவில்லை. நாளைக்கு ஒரு நாள்தான் உங்களுக்கு டைம். அதற்குள் எனக்கு அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரியான பெண் வேண்டும். அப்படி நீங்கள் கொண்டு வரவில்லை என்றால், நானே காரை எடுத்துக் கொண்டு தெருத்தெருத்வாக சுற்றி தேடி அலைந்து கொள்கிறேன் என்றேன். 

துணைக்கு வந்தவருக்கு அடித்த லக் 

இந்த நிலையில் மறுதினம் நான் அலுவலகத்திற்கு வரும் போது, அலுவலகத்தின் முன்னால், கூட்டம் கூட்டமாக பெண்கள் நின்றார்கள். நான் நேராக என்னுடைய அலுவலக மாடிக்கு சென்றேன். அங்கிருந்து பார்த்தால் கீழே நிற்பவர்களை நன்றாக பார்க்க முடியும். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன். 

அப்போது ஒரு பெண் கதவோரமாக பாவமாக நின்று கொண்டிருந்தார். இதையடுத்து நான் என்னுடைய உதவி இயக்குநரிடம், நாம் தேடக்கூடிய பெண் அவர்தான். அவரை கூட்டி வாருங்கள் என்று சொன்னேன். இதையடுத்து அவர்கள், சார் அவர்கள் நடிக்க வந்த பெண்ணின் துணைக்கு வந்தவர் என்று சொல்ல, துணைக்கு வந்தால் என்ன? அவரது லுக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. அவரை உடனே அழைத்து வாருங்கள் என்று சொன்னேன். 

அவரும் உடனே வந்து நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை. நான் இன்னொரு பெண்ணுக்கு துணைக்கு வந்தவர்.எனக்கு நடிக்கலாம் வராது என்று சொன்னார். ஆனால் நான் அவரை சமாதானம் செய்து வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினேன். படப்பிடிப்பில் அவர் நிறைய டேக் எடுத்தார். இருப்பினும் அவருடைய லுக்கிற்காக அவரை தேர்வு செய்து, நடிக்க வைத்தேன். அது எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திர தேர்வுகளில் ஒன்று.” என்று பேசினார். 

முன்னதாக, இயக்குனர் ஷங்கர் ஏ ஆர் ரகுமான் உடன் முதல் படத்தில் சிக்கு புக்கு ரயில் பாடலுக்கான டியூனை வாங்கிய அனுபவம் குறித்து ஓபன் பண்ணா சேனலில் பேசி இருந்தார். அந்த பேட்டி 

அப்படி ஒரு சவுண்ட் குவாலிட்டி

இப்போது இருக்கக்கூடிய டிஜிட்டல் வசதி எல்லாம் அப்போது கிடையாது. எல்லாமே ஃபிலிம்மில் தான் ரெக்கார்ட் ஆகும். அதில் ஸ்டீரியோ வடிவிலான இசையை  கொண்டு வருவதே அவ்வளவு கடினமான ஒன்று. ஆனால் ரஹ்மான் அதிலேயே அப்படியான ஒரு சவுண்ட் குவாலிட்டியை அந்த படத்தில் கொண்டு வந்திருந்தார். நீங்கள் அந்தப் படத்தில் பார்த்தீர்கள் என்றால். ஐஸ் சவுண்டெல்லாம் அப்படியே கேட்கும். பேஸ் எல்லாம் ஜாரிங்கில்லாமல் இருக்கும்.  வெள்ளை மழை பாட்டில், அப்படி ஒரு சவுண்ட் இருக்கும்.  அந்த சவுண்டுக்கு உண்மையில் கண்ணாடி எல்லாம் நொறுங்கிவிடும். ஆனால், அது அனைத்தும் ஜாரிங்கில்லாமல் அவ்வளவு தெளிவாக கேட்டது.  சவுண்டே மிகவும் புதுமையாக இருந்தது. 

உதயம் தியேட்டரில் அந்த படத்தை பார்த்துவிட்டு, இடைவேளையில் வெளியே வந்த போது,  அந்த இசை அப்படியே என் மனதிற்குள் நின்றது. அப்போதுதான் நாம் பணியாற்றினால், இவருடன் தான் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏ ஆர் ரஹ்மான் டெக்னிக்கலாக மிக மிக ஸ்ட்ராங். எந்தெந்த தியேட்டரில், எப்படி சவுண்ட் கேட்கும் என்பதை மிகச் சரியாகக் கணித்து, சினிமாவை புரிந்து கொண்டவர். இசையை ஆப்டிக்கலாக கன்வர்ட் செய்யும் பொழுது, அதனுடைய மேஜிக் போகாமல் எப்படி அதை கொண்டு வர வேண்டும் என்பதெல்லாம் ஏ ஆர் ரஹ்மானுக்கு மிக மிக நன்றாக தெரியும். 

Let's check Vibe 

சூரியன் படத்தில் இடம்பெற்ற லாலாக்கு டோல் டப்பிமா பாடலுக்கு நான் அவருடன் பணியாற்றினேன்.  படத்தின் இயக்குநர் அந்த பாடலின் முழு பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்து இருந்தார். அந்த பாடலுக்காக நான் நிறைய மெனக்கிட்டேன். மரம் வெட்ட கூடிய இடங்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்தேன். அதுமட்டுமல்லாமல் சென்ட்ரல் ஜெயிலுக்கு சென்று அங்கு நன்றாக கானா பாடுபவர்களை ஆடிஷன் செய்து ரெக்கார்ட் செய்து எடுத்து வந்தேன். வடசென்னைக்கு சென்று நன்றாக கானா பாடுபவர்களை நவீன் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு அழைத்து வந்து, ஆடிஷன் செய்து அதில் ஷார்ட்லிஸ்ட் ஆனவர்களை அந்த பாடலில் பயன்படுத்தினோம். அப்போது ஏ ஆர் ரஹ்மானுக்கு என் மீது, இந்த இயக்குநர் இசைக்காக நன்றாக மெனக்கிடுவார் போல என்று நினைத்து இருக்கிறார். 

இதையடுத்து நான் அவரிடம் சென்று என்னுடைய படத்தில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டேன். இரண்டு பேருமே சென்னையில் வளர்ந்தவர்கள். அது மட்டுமல்லாமல் ஒரே வயது வேறு. இதனால் எங்களுக்குள் ஒரு நல்ல உறவு உண்டானது. முதலில் அவரை சந்திக்கும் பொழுது, அவர் இசையமைப்பதற்கான வேலையை உடனே தொடங்கவில்லை. நாம் முதலில் இரண்டு நாட்கள் சும்மா பேசுவோம் என்று சொல்லி let's check vibe என்றார். 

இதையடுத்து, சிக்கு புக்கு ரயில் பாடலுக்கான  சிச்சு வேஷனை அவரிடம் விளக்கினேன். அந்த பாடலை, கானா பாடலாக நானே பாடி காண்பித்து, அதனை ட்ரெயினில் பாடும் வகையில், ரிதம் போட்டு இசை அமைத்துக் கொடுங்கள் என்று கேட்டேன். இரண்டாவது நாளோ, மூன்றாவது நாளோ அவர் என்னை அழைத்தார். நான் ரயில் போன்ற ரிதம் வேண்டும் என்று கேட்டதால், அவர் அப்படியான  ஒரு ரிதமை அமைத்து, அதில் ஒரு பீசை எனக்கு போட்டு காட்டினார்.    அப்போது, அவரது ஸ்டுடியோ மிக மிக சிறியது. 

அதில் அந்த சவுண்டை கேட்ட போது,  ஒரு மிகப்பெரிய ட்ரெயின் அந்த ரூமை சுற்றி ஓடுவது போல இருந்தது. அந்த இசையை கேட்டுவிட்டு நான் மிரண்டு விட்டேன். எப்படி ரோஜா படத்தின் இசையை கேட்டு, நான் பிரமித்து போனேனோ, அதேபோல இந்த இசையை கேட்டும் நான் பிரமித்து போனேன். இதையடுத்து அப்பாடி நாம் சரியான ஆளிடம் தான் வந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். அவர் சிக்கு புக்கு கானா பாடலை அப்படியே வெஸ்டன் ஸ்டைலில் மாற்றி விட்டார். அதுதான் அவர் எனக்கு முதலில் கொடுத்த டியூன்" என்று பேசினார்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.