Game Changer Box Office: அடங்கிப் போன கேம் சேஞ்சர்.. 10 நாளில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?
Game Changer Box Office: இயக்குநர் ஷங்கரின் நேரடி தெலுங்கு திரைப்படமாக வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் வெளியான 10ம் நாளில் பெற்ற பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் காணலாம்.

Game Changer Box Office: ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர் ஷங்கரின் முதல் நேரடி தெலுங்கு படம். இந்த கேம் சேஞ்சர் படம் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில்வெளியானது.
கிட்டத்தட்ட நான்கு வருட தாமதத்துக்குப் பின் இந்த கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. கேம் சேஞ்சர் உலகம் முழுவதும் 6600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரூ .223 கோடி முதல் நாள் இலக்குடன் பாக்ஸ் ஆபிஸில் நுழைந்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை கணித்து கூறும் Sacnilk.com வெளியிட்டுள்ள தகவல்படி, ராம் சரண் மற்றும் இயக்குநர் ஷங்கரின் கூட்டணியில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் 10ம் நாள் வசூலில் பின் தங்கியுள்ளது.